01 February 2011

கொள்ளை போகும் கோடிகள்!அமைதி காக்கும் அரசு!

                                                                                                              
                                                                           
ஒவ்வொரு   நாளும்   இந்தியாவிலிருந்து   240 கோடி  ரூபாய  சட்ட  விரோதமாக  வெளியே  போகிறது. அதை  தடுக்க  வழியே  இல்லையா ?


லீக்டான்ஸ்டைன்{liechtenstein }  என்ற  சிறிய  நாட்டின்  வங்கியில்  கருப்பு  பணத்தை சேமித்து  வைத்திருக்கும்  50  இந்தியர்களின்   பெயரை  வெளி  இட  மறுத்து,  அடம்  பிடித்து  வருகிறது  மத்திய  அரசு.  இந்த  50  பேரின்   கணக்கு  பற்றிய  விவரங்கள்  2008ம்    ஆண்டு  மத்திய  அரசிடம்  கொடுக்கப்பட்டது.  ஆனால்  இதுவரை  ஒருவர்  மீது  கூட   நடவடிக்கை   எடுக்கப்படவில்லை. 



லீக்டான்ஸ்டைன்   மேற்கு  ஐரோப்பாவில்,  ஆல்ப்ஸ்  மலையின்  அடியில்
அமைந்துள்ள  சின்னஞ்  சிறிய  தேசம். மொத்த  மக்கள்  தொகையே  35,000  பேர்  தான்.  பரப்பளவு  160 சதுர அடி கிலோ மீட்டர்தான்.  ஜெர்மன்  மொழி 
பேசும்  நாடு.  நாடாளுமன்றத்துடன்  கூடிய  அரசாட்சி  நடக்கிறது. கடவுள்,
இளவரசர்,  நாடு  இவற்றுக்கு  விசுவாசமாக  இருப்போம்  என்பதைக்  கொள்கையாக  அறிவித்து  கடவுளை  மடியில்  கட்டிக்  கொண்டிருக்கும்  
இந்த  நாடு,  வரி  ஏய்ப்பவர்களுக்கு  ஒரு  சொர்க்கம்.


 
இதைப்  போன்று  உலகில்  70க்கும்   மேற்பட்ட  சொர்க்கங்கள்  இருகின்றன. அவை  எல்லாமே  அநேகமாக  குட்டிக் குட்டி  நாடுகள் . அவற்றில்  சுமார்  40  நாடுகளின்  வங்கிகள்  உலகெங்கும்  மிகத்  தீவிரமாக விளம்பரம்  செய்து  கணக்குகளைப்  பிடிக்கின்றன. இந்த  வரி ஏய்ப்புச்  சொர்கங்களில்  முக்கியமானது   சுவிட்சர்லாந்து.


வரி  கட்டாமல்  மறைத்து  வைக்கப்படுகிற  பணம்  தான்  கருப்பு  பணம்.
வெளிநாட்டிலிருந்து  ராணுவத்  தளவாடங்கள்  வாங்கும்  போது  பெறப்படும்
கமிஷன், உள்நாட்டில்  காண்ட்ராக்ட்களில்  கிடைக்கும்  லஞ்சம்,போதைப்
பொருள்  கடத்தலில்  கிடைக்கும்  பணம், ஏற்றுமதி   இறக்குமதியின் போது 
தொகையைக்  கூடுதலாகவோ,  குறைவாகவோ  போட்டு  அந்த  வித்தியாசத்தில்  கிடைக்கும்  பணம், ஹவாலா  பேரங்களில் கிடைக்கும் 
பணம்  எனப்  பலவழிகளில்  பணம்  கடத்தப்  படுகிறது. 


அண்மைக்காலமாக  மும்பை, டெல்லியிலிருந்து  ஒரு  முழு  விமானத்தை 
வாடகைக்கு  அமர்த்தி  கொண்டு, நேரடியாகவே  பணத்தை  மூட்டை  கட்டி 
எடுத்துக்  கொண்டு  போய்  போட்டு  விட்டு  வருவதாக  கூறப்படுகிறது.
விமானங்களை   சொந்தமாக  வாங்க  பலர்  ஆர்வம்  காட்டுவது  அதிகரித்து 
வருவதற்கு  இந்தக்  கடத்தலும்  ஒரு காரணமாக  இருக்கக்கூடும் எனக் 
கருதப்படுகிறது. 


சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி,ஜெர்மனி,மேமன்  தீவுகள்,அமேரிக்கா 
இந்த  நாடுகள்  கருப்பு  பணம்  சேமிக்க  ஏற்ற  இடமாக  உள்ளன.இந்த  நிதி 
ஆதாரத்தைக்  கொண்டு  தங்கள்  நாட்டைக்  அவை  வளப்படுத்திக்  கொள்கின்றன.{ எதோ ஒரு  திரைப்படத்தில்  கவுண்டமணியின்  கடையிலிருந்து   இளநீர்காய்களைப்  கயிறு  போட்டு  இழுத்து  தங்கள் கடையில்  வைத்து  செந்திலும்,  வடிவேலும்  வியாபாரம்  செய்வதைப் போன்றது  இது.}


கறுப்புப்   பண  சொர்க்கங்களுக்கு   பணத்தை  சேமிப்பது  மட்டுமல்ல,
அங்கிருந்து   அவற்றை  இங்கே  வெள்ளையாக்கி  எடுத்து  வருவது  இன்னும்   சுலபமாகி  விட்டது. இந்தக்  குட்டி  தேசங்களில்  ஏதாவது  ஒரு
லெட்டர்  பேட்  கம்பெனி  ஆரம்பிக்க  வேண்டியது. பின்  அந்த  கம்பெனி  இந்தியாவில்  முதலீடு  செய்வது  போல   பணத்தைக்  கொண்டு  வந்து விட 
வேண்டியது.  அவ்வளவுதான் {லீக்டான்ஸ்டைனில்  மட்டும்  73,000 லெட்டர்  பேட்  கம்பெனிகள்  இருக்கின்றன. அந்த  நாட்டின்  மக்கள்  தொகையை  விட  இந்த  எண்ணிக்கை  அதிகம்.}


ஏன்  நம்மால்  ஒன்றும்  செய்ய  முடியவில்லை ?

உலகம்  நம்மை  நம்புவது  முக்கியமா அல்லது  அரசு மக்களின்  நம்பிக்கையைப்  பெற்றிருக்க  வேண்டுமா  என்பது  பிரதமரின்  சாய்ஸ். இந்தியா  உறுதியான  நடவடிக்கை  எதையும்  மேற்கொள்ளாததற்கு  காரணம்,இந்த  நாட்டின்  வங்கிகளில்  கார்ப்பரேட்  நிறுவனங்கள்,சினிமா 
நடசத்திரங்களின்  பணம்  மட்டுமல்ல,அரசியல்வாதிகள்  பணமும்  பதுக்கப்  பட்டிருக்கலாம்  என  பரவலாக  நம்பப்படுகிறது.

 
இந்திய  கருப்பு  பணத்தில்  70  சதவிகிதம்  அயல்  நாட்டில்  பதுக்கப்பட்டிருக்கிறது   என  தெரிந்தும், ஏன்  சுறுசுறுப்பாக  செயலில் 
இறங்காமல்   சாக்கு  போக்கு  சொல்லி  கொண்டு,அமைதி  காக்கும்  அரசு.


                     அந்த  அரசியல்  வாதிகளுக்கே  வெளிச்சம். 
                         
                                              நன்றி  
                                      புதிய தலைமுறை.



                                             

71 comments:

  1. கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ....

    ReplyDelete
  2. நன்றி ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி
    அருமையான பதிவு அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

    ReplyDelete
  3. உங்களுக்கும், புதிய தலைமுறைக்கும் நன்றி.

    ReplyDelete
  4. ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் .அரசியல் வாதிகளுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  5. ஒவ்வொரு நாளும் இந்தியாவிலிருந்து 240 கோடி ரூபாய சட்ட விரோதமாக வெளியே போகிறது. அதை தடுக்க வழியே இல்லையா ?


    ..... அதை பத்திரமாக அனுப்ப வழி பண்ணி வச்சுருக்காங்களே..... அந்த கொடுமையை சொல்லுங்க!

    ReplyDelete
  6. //இந்திய கருப்பு பணத்தில் 70 சதவிகிதம் அயல் நாட்டில் பதுக்கப்பட்டிருக்கிறது என தெரிந்தும், ஏன் சுறுசுறுப்பாக செயலில்
    இறங்காமல் சாக்கு போக்கு சொல்லி கொண்டு,அமைதி காக்கும் அரசு
    அந்த அரசியல் வாதிகளுக்கே வெளிச்சம்.///

    ஒன்றும் சொல்வதற்கில்லை....

    ReplyDelete
  7. //sakthistudycentre-கருன் சொன்னது…

    கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ....//

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்

    பாராட்டுக்கும் ரெம்ப நன்றி சகோ.எல்லா

    பதிவிலும் முதல் கமாண்ட்ஸ் உங்களோடு தான்.

    அதற்கு இன்னொரு நன்றி சகோ.தொடர்ந்து

    வருகை தாருங்கள்

    ReplyDelete
  8. //sakthistudycentre-கருன் சொன்னது…
    நன்றி ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி
    அருமையான பதிவு அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?//


    கருத்துக்கும்,ஒட்டு போட்டதற்கும்

    மீண்டும் என்னுடைய நன்றி சகோ.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ கலக்கிட்டீங்க அருமையான பதிவு

    எப்புடி இதுலாம்?

    நன்றி சகோ

    அப்புறம் முன்று திரட்டிகளிலும் ஒட்டு போட்டுயிருக்கிறேன்.
    ஆமா உலவு திரட்டியில் நீங்கள் இன்னும் இணையவில்லையா?

    ReplyDelete
  10. //தமிழ் உதயம் சொன்னது…

    உங்களுக்கும், புதிய தலைமுறைக்கும் நன்றி.//


    உங்கள் வருகைக்கு நன்றி சகோ.தொடர்ந்து

    வருகை தாருங்கள்.

    ReplyDelete
  11. //சே.குமார் சொன்னது…

    ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் .அரசியல் வாதிகளுக்கே வெளிச்சம்.//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  12. //Chitra சொன்னது…

    ஒவ்வொரு நாளும் இந்தியாவிலிருந்து 240 கோடி ரூபாய சட்ட விரோதமாக வெளியே போகிறது. அதை தடுக்க வழியே இல்லையா ?


    அதை பத்திரமாக அனுப்ப வழி பண்ணி வச்சுருக்காங்களே..... அந்த கொடுமையை சொல்லுங்க!//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி சித்ரா.

    ReplyDelete
  13. மாணவன் சொன்னது…

    //இந்திய கருப்பு பணத்தில் 70 சதவிகிதம் அயல் நாட்டில் பதுக்கப்பட்டிருக்கிறது என தெரிந்தும், ஏன் சுறுசுறுப்பாக செயலில்
    இறங்காமல் சாக்கு போக்கு சொல்லி கொண்டு,அமைதி காக்கும் அரசு
    அந்த அரசியல் வாதிகளுக்கே வெளிச்சம்.///

    ஒன்றும் சொல்வதற்கில்லை....//

    நாம் என்ன சொல்லி என்ன நடக்கப் போவுது சகோ.

    கலாம் அவர்கள் போட்டோ எடுத்து விட்டு

    உங்கள் போட்டாவா.

    உங்கள் வருகைக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  14. நல்ல விஷயம்தான்,..ஆனால் படித்தால் எனக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை.பழகிவிட்டது சகோ..ஊழலில் ஊறிய அரசியல் வாதிகளை வைத்துக் கொண்டு,இதை பேசி பேசியே நாட்கள் போகிறதே தவிர ஒன்றும் நடந்தபாடில்லை...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  15. ஹைதர் அலி சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    வ அழைக்கும் சலாம் வரஹ்...


    //சகோ கலக்கிட்டீங்க அருமையான பதிவு//

    ரெம்ப நன்றி சகோ.

    //எப்புடி இதுலாம்?//

    நன்றி. புதிய தலைமுறை.படிக்க வில்லையா?

    எல்லோரும் அந்த புக்கை படிக்க மாட்டார்கள்.

    அதனால் தான் நான் படித்த செய்தி

    எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதால்

    பதிவில் வெளியிட்டேன்.

    //அப்புறம் முன்று திரட்டிகளிலும் ஒட்டு போட்டுயிருக்கிறேன்.
    ஆமா உலவு திரட்டியில் நீங்கள் இன்னும் இணையவில்லையா? //


    முன்று திரட்டியிலும் ஓட்டு போட்டதற்கு ரெம்ப

    நன்றி.உலவு திரட்டி இணைக்கிறேன் சகோ.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  16. //H.ரஜின் அப்துல் ரஹ்மான் சொன்னது…

    நல்ல விஷயம்தான்,..ஆனால் படித்தால் எனக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை.பழகிவிட்டது சகோ..ஊழலில் ஊறிய அரசியல் வாதிகளை வைத்துக் கொண்டு,இதை பேசி பேசியே நாட்கள் போகிறதே தவிர ஒன்றும் நடந்தபாடில்லை...//


    அஸ்ஸலாமு அலைக்கும்

    உண்மை தான் சகோ. உங்கள்

    வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  17. இந்நேரம் பேரம் நடந்து கொண்டிருக்கும். படிந்தவை மறைந்து போகும்.
    படியாமல் நிமிர்ந்தவை வெளியில் தென்படும் அபாயம் (யாருக்கு) உண்டு. :)

    ReplyDelete
  18. நெஞ்சு பொறுக்குதில்லையே.....

    ReplyDelete
  19. //அரபுத்தமிழன் சொன்னது…

    இந்நேரம் பேரம் நடந்து கொண்டிருக்கும். படிந்தவை மறைந்து போகும்.
    படியாமல் நிமிர்ந்தவை வெளியில் தென்படும் அபாயம் (யாருக்கு) உண்டு.//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  20. //மைதீன் சொன்னது…

    நெஞ்சு பொறுக்குதில்லையே....//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி சகோ

    ReplyDelete
  21. //Kanchana Radhakrishnan

    பயனுள்ள தகவல்//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.

    ReplyDelete
  22. //உலகம் நம்மை நம்புவது முக்கியமா அல்லது அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டுமா என்பது பிரதமரின் சாய்ஸ்//
    ம்ம்ம்... இதுக்குமேல சொல்ல என்ன இருக்கு?

    ReplyDelete
  23. சமூக அக்கறையான பதிவு !

    ReplyDelete
  24. நல்ல பகிர்வுங்க. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதுங்கறது இது தானா? என்ன கொடுமை? என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்கிறோம்... கருப்பு பணம் ஏறிக்கொண்டே செல்லும்...:-(

    ReplyDelete
  25. //ஜீ... சொன்னது…

    //உலகம் நம்மை நம்புவது முக்கியமா அல்லது அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டுமா என்பது பிரதமரின் சாய்ஸ்//
    ம்ம்ம்... இதுக்குமேல சொல்ல என்ன இருக்கு?//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  26. //ஹேமா சொன்னது…

    சமூக அக்கறையான பதிவு !//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  27. //அமுதா சொன்னது…

    நல்ல பகிர்வுங்க. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதுங்கறது இது தானா? என்ன கொடுமை? என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்கிறோம்... கருப்பு பணம் ஏறிக்கொண்டே செல்லும்...:-(//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  28. கருப்பு பணம் வாட்சிருக்குரவங்க கிட்டயே அந்த பட்டியல வெளியிட சொன்ன எப்படி வெளியிடுவனுங்க
    எல்லாம் களவாணி பசங்க

    குட்டி நாடுகள் இந்த பணத்தினை கொண்டு அந்த நாடுகளை சொர்க்க பூமியாக மாறுகின்றது
    பணத்தினை சொந்தம் கொண்டாட வேண்டிய நாடு வறுமை கோட்டின் கீழ பிட்சை எடுக்கின்றது

    ReplyDelete
  29. வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

    http://meenakam.com/topsites


    http://meenagam.org

    ReplyDelete
  30. வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

    http://meenakam.com/topsites


    http://meenagam.org

    ReplyDelete
  31. சமூக அக்கறை உள்ளபதிவு.யாரு காதில விழனுமோ அவங்கதான் காதையும் கண்ணையும் இறுக்கமா மூடிக்கிட்டு இருக்காங்களே.

    ReplyDelete
  32. ரொம்ப அவதானித்து எழுதி இருக்கீங்க ஆயிஷா.
    புதிய தலைமுறையில் வந்தமைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  33. நான் வார, மாத பத்திரிக்கைகள் படிப்பதை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. அத்தனையும் சினிமா, அரசியல் அராஜக குப்பைகள் என்பதால். புதிய தலை முறை இதழில் வந்த இந்த கட்டுரையை படிக்க தந்தற்கு நன்றியம்மா.
    பெண் பதிவர்கள் இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகளை இடுவதில் அதிகம் பங்கு பெற வேண்டும் என்பது இன்றுள்ள
    நிலையில் அவசியமாகிறது. நீங்கள் ஆரம்பித்து வைத்தீர்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  34. //FARHAN சொன்னது…

    கருப்பு பணம் வாட்சிருக்குரவங்க கிட்டயே அந்த பட்டியல வெளியிட சொன்ன எப்படி வெளியிடுவனுங்க
    எல்லாம் களவாணி பசங்க

    குட்டி நாடுகள் இந்த பணத்தினை கொண்டு அந்த நாடுகளை சொர்க்க பூமியாக மாறுகின்றது
    பணத்தினை சொந்தம் கொண்டாட வேண்டிய நாடு வறுமை கோட்டின் கீழ பிட்சை எடுக்கின்றது//

    உண்மையான வரிகள்

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  35. News சொன்னது…

    ரெம்ப நன்றி.

    ReplyDelete
  36. //Lakshmi சொன்னது…

    சமூக அக்கறை உள்ளபதிவு.யாரு காதில விழனுமோ அவங்கதான் காதையும் கண்ணையும் இறுக்கமா மூடிக்கிட்டு இருக்காங்களே.//


    ஆமாம்மா.சரியாக சொன்னீர்கள்.


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிமா.

    ReplyDelete
  37. //தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

    ரொம்ப அவதானித்து எழுதி இருக்கீங்க ஆயிஷா.
    புதிய தலைமுறையில் வந்தமைக்கு பாராட்டுக்கள்.//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் ரெம்ப நன்றி சகோதரி.

    ReplyDelete
  38. புதிய தகவல்கள்.நல்ல கருத்தான பதிவு.

    ReplyDelete
  39. //கக்கு - மாணிக்கம் சொன்னது…

    நான் வார, மாத பத்திரிக்கைகள் படிப்பதை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. அத்தனையும் சினிமா, அரசியல் அராஜக குப்பைகள் என்பதால். புதிய தலை முறை இதழில் வந்த இந்த கட்டுரையை படிக்க தந்தற்கு நன்றியம்மா.
    பெண் பதிவர்கள் இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகளை இடுவதில் அதிகம் பங்கு பெற வேண்டும் என்பது இன்றுள்ள
    நிலையில் அவசியமாகிறது. நீங்கள் ஆரம்பித்து வைத்தீர்கள். பகிர்வுக்கு நன்றி.//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  40. //இனியவன் சொன்னது…

    புதிய தகவல்கள்.நல்ல கருத்தான பதிவு.//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  41. காலம் காலமா இந்த களவாணித்தனம் நடந்துக்கிட்டே தான் இருக்கு... புள்ளி விவரத்துடன் உங்கள் பகிர்வுக்கு நன்றிங்க.. :)

    ReplyDelete
  42. நேர்மயற்ற மனிதரிடமும்... சொறனையற்ற அரசிடமிருந்தும் வேறு எதை எதிபார்க்க முடியும்?

    ReplyDelete
  43. அவனுக பாணமே நிறைய இருக்கும் போல அதான் வெளியிட மாட்டேங்கிறானுக

    ReplyDelete
  44. வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.

    ReplyDelete
  45. //Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

    காலம் காலமா இந்த களவாணித்தனம் நடந்துக்கிட்டே தான் இருக்கு... புள்ளி விவரத்துடன் உங்கள் பகிர்வுக்கு நன்றிங்க.. :)//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ஆனந்தி.

    ReplyDelete
  46. //சி. கருணாகரசு சொன்னது…

    அட பாவிகளா?//

    கொடும்பாவிகள்.

    //சி. கருணாகரசு சொன்னது…

    நேர்மயற்ற மனிதரிடமும்... சொறனையற்ற அரசிடமிருந்தும் வேறு எதை எதிபார்க்க முடியும்?//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  47. //ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    அவனுக பணமே நிறைய இருக்கும் போல அதான் வெளியிட மாட்டேங்கிறானுக//

    இதுதான் உண்மை.

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  48. //ரஹீம் கஸாலி சொன்னது…

    // வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.//

    உங்கள் முதல் வருகைக்கும்,வாக்களித்ததற்கும் ரெம்ப நன்றி சகோ.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  49. இது போன்ற விசயங்களை வெளிக்கொனற மேலும் முயலவேண்டும்

    ReplyDelete
  50. //Speed Master சொன்னது…

    இது போன்ற விசயங்களை வெளிக்கொனற மேலும் முயலவேண்டும்//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ

    ReplyDelete
  51. வணக்கங்களும்,வாக்குகளும்...

    ReplyDelete
  52. //பாரத்... பாரதி... சொன்னது…

    வணக்கங்களும்,வாக்குகளும்...//


    உங்கள் வருகைக்கும், வணக்கங்களுக்கும,

    வாக்குகளுக்கும ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  53. ஆயிஷாக்கா,

    இப்பதேன் மொத தடவையா உங்க பிளாகுக்கு வர்றேன். புதிய தலைமுறையெல்லாம் பார்த்து ரிப்பீட்டிடுங்க... அப்புறம் அவங்க தளமும் சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சிடும்... ஹெ ஹெ ஹே... இன்னும் உங்க மத்த பதிவெல்லாம் பாக்கல. பாக்கணும்.. வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  54. //அன்னு சொன்னது…

    ஆயிஷாக்கா,//

    வாங்க தங்கச்சி
    அஸ்ஸலாமு அழைக்கும்

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி .தொடர்ந்து வருகை தாருங்கள்.


    iniyavasantham.blogspot.com.இந்த பிளாக்கையும் படிக்கவும்.

    ReplyDelete
  55. //தமிழ்தோட்டம் சொன்னது…

    பயனுள்ள தகவல்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in//


    வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  56. சிந்திக்க கூடிய வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோ.....

    ReplyDelete
  57. //அந்நியன் 2 சொன்னது…

    சிந்திக்க கூடிய வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோ..//


    வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  58. உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
    http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html

    ReplyDelete
  59. enakku kanna pinnanu kanna kattuthu...

    ReplyDelete
  60. >>> ஐயோ.. எல்லாமே என் பணம் மாதிரி இருக்கே..

    ReplyDelete
  61. //அன்புடன் மலிக்கா சொன்னது…

    தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
    http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html//

    அஸ்ஸலாமு அழைக்கும்

    என்னை வலைசரத்தில் அறிமுகபடுத்தியதற்கு
    ரெம்ப நன்றி.

    உங்கள் வருகைக்கும், அழைப்புக்கும் மீண்டும் என் நன்றியை தெரிவிக்கிறேன்

    ReplyDelete
  62. //asiya omar சொன்னது…

    உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
    http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html//

    அஸ்ஸலாமு அழைக்கும்

    எனக்கு விருது அளித்தமைக்கு ரெம்ப நன்றி .


    உங்கள் வருகைக்கும், விருது அளித்தமைக்கும் மீண்டும் என் நன்றியை தெரிவிக்கிறேன்

    ReplyDelete
  63. //சக்தி சொன்னது…

    enakku kanna pinnanu kanna kattuthu...//


    அளவுக்கு மிஞ்சி பணத்தை பார்த்தவுடன்
    கண்ணை கட்டுது. அளவுக்கு மிஞ்சினால்
    அமிர்தமும் நஞ்சு.

    உங்கள் பிளாக் ஓபன் ஆக வில்லை.பிளாக்
    முகவரி கொடுக்கவும்.

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  64. //சிவகுமார் ! சொன்னது…

    >>> ஐயோ.. எல்லாமே என் பணம் மாதிரி இருக்கே..//


    அப்படியா...உடனே இன்பாம் பண்ணிவிடுகிறேன்.
    நாளை உங்கள் வீட்டில் ரெய்டு.
    எஸ்கேப் ஆகி விடுங்கள்.

    ReplyDelete
  65. அடிக்கடி இது போன்ற சமாசாரங்கள் பத்திரிகைகள் வாயிலாகப் படிக்கிறோம். ஆனால் யாரால் என்ன செய்ய முடிகிறது? காலம் தான் பதில் கூற வேண்டும், எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பார்கள் - அதுபோலத் தான் இதுவும். பதிவு மூலம் பலருக்கும் இதைத் தெரிவித்ததில் உங்களின் மனபாரம் சற்று குறையலாம் - அவ்வளவு தான்.

    ReplyDelete
  66. முதல் முறை வருகிறேன்! சமூக அக்கறையோடு எழுதியுள்ளீர்கள் ஆயிஷா! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  67. //VAI. GOPALAKRISHNAN சொன்னது…

    அடிக்கடி இது போன்ற சமாசாரங்கள் பத்திரிகைகள் வாயிலாகப் படிக்கிறோம். ஆனால் யாரால் என்ன செய்ய முடிகிறது? காலம் தான் பதில் கூற வேண்டும், எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பார்கள் - அதுபோலத் தான் இதுவும். பதிவு மூலம் பலருக்கும் இதைத் தெரிவித்ததில் உங்களின் மனபாரம் சற்று குறையலாம் - அவ்வளவு தான்.//

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி .தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  68. //மோகன்ஜி சொன்னது…

    முதல் முறை வருகிறேன்! சமூக அக்கறையோடு எழுதியுள்ளீர்கள் ஆயிஷா! வாழ்த்துக்கள்//

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  69. \\அரசியல்வாதிகள் பணமும் பதுக்கப் பட்டிருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது.//

    அவர்களின் பணம் தான் அதிகம் பதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் வெளியிட மறுக்கிறார்கள்

    ReplyDelete
  70. //சிவகுமாரன் சொன்னது…

    \\அரசியல்வாதிகள் பணமும் பதுக்கப் பட்டிருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது.//

    அவர்களின் பணம் தான் அதிகம் பதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் வெளியிட மறுக்கிறார்கள்//


    உண்மை தான் சகோ. உங்கள்

    வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete