09 February 2012

புற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்

நேசம் +உடான்ஸ்  இணைந்து  வழங்கும் கேன்சர்  விழிப்புணர்வு  கட்டுரை.

                                                                      
முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிசய சிவப்பு

தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.


1) உடம்பில் உள்ள புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோய்க்கான எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது.


2) கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை குணப்படுத்துகிறது.


3) நுரையீரலை பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.


4) மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


5) கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.


6) தசை தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது


7) முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.


8) சீரணமண்டலம், தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.


9) பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.


10) காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.


எப்படி தயாரிப்பது :


இந்த பானத்தை தயாரிப்பது எளிது

காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1

மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம்.


காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் 5 மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து பருகுவது முக்கியம்.

தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துறைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.
 
========================================================================

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’


பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

 

மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.


இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை  ரத்னா ரே.
“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.


ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.

 
ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.


“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.


“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.


`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.


அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.


“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.


அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.

அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.
ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.


பாகற்காய் வம் டிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணஇது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.


         

 

23 November 2011

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:


* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.


* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.


* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.


* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.


* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.


* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.


* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.


* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.


பழங்கள் சாப்பிடும் முறை:
 
* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.


* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

  
* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.


* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.  அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.


* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.


* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.  அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.


                                                                       
                 
            

04 November 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றமாம் !
ஆசியாவின்  2-வது  பெரிய  நூலகம் என்று  பெயர்  பெற்ற,சென்னை கோட்டூபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் விரைவில் குழந்தைகள்  நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு, தமிழர்களின் நெஞ்சங்களில் அதிர்ச்சி நெருப்பை அள்ளிக்கொட்டியிருக்கிறது.                                                                                 
         
                                                
கலைஞரால் உருவாக்கப்பட்டது என்னும் ஒரே காரணத்திற்காக, அதனை இழுத்து மூடிவிட வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு.  புதிய  சட்டசபை  கட்டிடம்  கட்டியது  கருணாநிதி  என்பதற்காக  அதை  பயன்படுத்தாமல்  விட்டார்.ஏற்கனவே கோட்டையில் இருந்து அகற்றப்பட்ட, புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்திருந்த செம்மொழி ஆய்வு நூலகத்தின் நூல்கள் எல்லாம் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியவில்லை.               
                
            
 5 ஆயிரம் பேர் அமர்ந்து படிக்கக் கூடிய ஒரு நூலகத்தை, அதுவும் ஆட்சிக்கு வந்து 8 மாத காலத்தில், அப்படியே குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவோம் என்று இன்றைய அதிமுக அரசு அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது. இது எந்த வகையிலும் ஏற்புடையது ஆகாது.

  
தமிழக அரசின் இந்த தவறான முடிவிற்கு கல்வியாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள், மாணவர்கள் இளைஞர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

  
தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதா அரசால் சிதைக்கப்படுகிறது.  இது  மிகவும்  கண்டிக்கத்தக்கது .இது  மக்கள்  சொத்து  என்பதை  உணரவேண்டும். 


நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் விவரம்:

முதல் தளம் இதழ்கள், குழந்தைகள் பிரிவு, இரண்டாவது தளம்   தமிழ்ப் புத்தகங்கள்,

 மூன்றாவது தளம்   கணினி அறிவியல், நூலகத் தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், சமூகவியல், மதங்கள், புள்ளியியல், அரசியல் அறிவியல்.


 நான்காவது தளம்   பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், இலக்கியம்.


 ஐந்தாவது தளம்   பொது அறிவியல், கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மருத்துவம்.


 ஆறாவது தளம்   பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டடக் கலை, நுண் கலை, விளையாட்டு.


 ஏழாவது தளம்   வரலாறு, புவியியல், சுற்றுலா, பயண மேலாண்மை.


 எட்டாவது தளம்   நிர்வாகப் பணிகள் தொடர்பான பிரிவுகள்.

 
இவை தவிர திறந்தவெளி அரங்கம், பிரமாண்ட உள் அரங்கம், சிறிய நிகழ்ச்சிகள் நடத்த கருத்தரங்க அறை, குழந்தைகளுக்கான விளையாட்டுகளுடன் கூடிய படிக்கும் பிரிவு என முழுக்க முழுக்க நூலகத்துக்காக எழுப்பப்பட்டது


ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.                                                                              


                                                                           
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக முதல் அமைச்சருக்கு நல்ல ஒரு அறிவுரையை வழங்கினார்கள்:
இதுகுறித்து பேராசிரியர் மார்க்ஸ் கூறுகையில்,

கல்வி சூழல் நிரம்பிய இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக முதல் அமைச்சருக்கு நல்ல ஒரு அறிவுரையை வழங்கினார்கள். கல்வி சார்ந்த விஷயங்களில் உங்களுடைய அரசியல் பகை உணர்ச்சிகளையெல்லாம் காட்டாதீர்கள் என்று குறிப்பிட்டார்கள். ஆனாலும் கூட தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ச்சியாக கல்வி சார்ந்த விஷயங்களில் தொடுக்கக்கூடிய ஒரு தாக்குதலை பார்க்கும்போது தான், இவ்வளவு பகை, இந்த பகை என்பதை சாதாரணமாக முந்தையை ஆட்சி செய்த அத்தனையையும் மாற்றி அமைக்க வேண்டும் என்கிற பகை என்கிறது, கிட்டதட்ட ஒரு இனப் பகை போன்று தோன்றுகிறது என்றார்.
 
                       

18 October 2011

தமிழ்மணத்தின் பெயரிலியே ......

                                                                                                                                                             

                                                                                                                                         
கடந்த   சில   நாட்களுக்கு  முன்   டெரர்கும்மி   தளத்தில்  சகோ  ராமசாமி  ஒரு   பயோடேட்டா  போட்டு, அதில்  நீங்கள்  போட்ட  பின்னூட்டம்  தான்  இத்தனை  பிரச்சனைக்கும்  காரணம்.


ராமசாமி  அவர்களின்  பதிவிற்கு  பின்னூட்டமிட்ட,   தமிழ்மணத்தின்  நிர்வாகியாகிய  நீங்கள், ராமசாமி  பதிவுக்கு  பதில்  சொல்வதை  விட்டுவிட்டு   "சாந்தியும்  அவ  அக்காவும்  சமாதானியும்  உங்களுடன்  கூடிய..சே!  பதிவு  தோஷம் "   என்ற  வார்த்தையை  பயன் படுத்தி  இருக்கிறீர்கள்.   
             
               
இஸ்லாமியர்கள்  ஒருவரை  ஒருவர்  சந்தித்து  கொள்ளும்  போது  அஸ்ஸலாமு  அலைக்கும்    என்று  சலாம்  சொல்லி கொள்வோம். அதை  நீங்களும்   அறிந்ததே!      

அதன்  பொருள்  "உங்கள்  மீது  சாந்தியும், சமாதானமும்  உண்டாகட்டும்"         
என்பதாகும். அந்த  வார்த்தையை  அவமதிக்கும்  விதமாக  "சாந்தியும்  அவ  அக்காவும்  சமாதானியும்  உங்களுடன்  கூடிய..சே!  பதிவு  தோஷம் "  என்று  அருவெறுக்க  தக்க  வார்த்தையை  பயன்படுத்தி  இருக்கிறீர்கள்.        


பெண்களை    கேலி  செய்யும்  விதமாகவும்   அமைத்துள்ளன. தாங்கள்  எழுதியதை  வைத்து   பார்க்கும்  போது  தமிழ்மணத்தை  நிர்வகிக்கும்  ஆணாதிக்கவாதி  என்ற  -------  எழுதியுள்ளீர்கள்.    


இஸ்லாமியர்களைகளையும்,  இஸ்லாத்தையும்   கொச்சைபடுத்த  தான்   அந்த வார்த்தையை   பயன் படுத்தி  இருக்கீறீர்கள் .  இப்படி  ஒரு  வார்த்தையை  பயன்படுத்தியது    எந்த வகையிலும்  எங்களால்  ஏற்று கொள்ள முடியாது.  


ஒரு  நாலாந்தர   மனிதனை  போல  நாகரீகம்  இல்லாமல்  எழுதிய   அந்த  பின்னூட்டம்  எத்தனை  பேர்  உள்ளங்களை  வேதனை  படுத்தி  இருக்கும்  என்பதை   என் சகோதர  சகோதரிகள்  எழுதிய  பதிவுகளிருந்து  நீங்கள்  அறிந்திருப்பீர்கள்.


கட்டணசேவை  என்று  என்று  நீங்கள்  அடிக்கும்  கொள்ளையை  தான்  ராமசாமி  அவர்கள்  பதிவில்  வெளியிட்டு  இருந்தார். அவருக்கு  பதில்  சொல்வதை   விட்டுவிட்டு   இஸ்லாமியர்கள்  மீதும்,இஸ்லாத்தின்  மீதும்
பாய்வதன்  நோக்கம்  என்ன ?    


நீங்கள்  பயன்படுத்தி  இருக்கும்  இந்த  வார்த்தைகளிருந்து  நீங்கள் "ஒரு  தரம்  தாழ்ந்த  மனிதர்"  என்பதை  அழகாக  சொல்லி  இருக்கிறீர்கள். உங்களை  நீங்களே  அசிங்கப்  படுத்தி  கொண்டு  விட்டீர்கள். மல்லாக்க  படுத்து  கொண்டு   எச்சில்  துப்பினால்   அது நம்  மீது  படும்  என்று  தெரிந்தே  செய்ததன்  விளைவு  தான்  இது.


பதிவர்களை  வைத்துதான்  திரட்டிகள்  பயன் அடைகின்றது . திரட்டிகளை  வைத்து  பதிவர்களுக்கு  எந்த பயனும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் 
நீங்கள்  பணம்   பார்ப்தற்கு எங்களை  போன்ற  பதிவர்களை  பயன்படுத்தி  கொள்கிறீர்கள். அது  தானே  உண்மை 


காலங்களில்   பதிவுகள்  எப்படி  இருந்தாலும்  சேர்த்துப்போம்  என்று  கூறி பதிவர்களை  இழுப்பது.  பின்னர்  ஒரு அளவுக்கு  முன்னேறிய  பிறகு  ஏறிவந்த ஏணியை  எட்டி  உதைப்பது.  கேடு  கெட்ட  இந்த  செயலை  தான்  இப்போது செய்து  இருக்கிறீர்கள்.


பொறுப்பான   இடத்தில்  இருக்கும்  நீங்கள்  ஒரு ............போல   எங்களை  கேலி செய்ததை    எவராலும்  ஏற்றுக் கொள்ளமுடியாத  ஒன்று.  சில  மாற்றுமத  சகோதரர்  பதிவிலும்  நீங்கள்  அறிவீர்கள்.


நடந்த   சம்பவங்களுக்கு   மனம்  வருந்தி  மன்னிப்பு  கேட்டு  இந்த  பிரச்னைக்கு   ஒரு  முற்று புள்ளி  வையுங்கள். ஏனென்றால்  இதை  ஆரம்பித்து   வைத்தது  நீங்கள்  தானே. நீங்கள்  தான்  முடித்தும்  வைக்க  வேண்டும். அதுதான்  தமிழ்மணத்திற்கும், உங்களுக்கும்  நல்லது.


நம்பிக்கையுடன்  காத்திருக்கிறோம் .காலம்  தாழ்த்தாமல்  முடிவெடுங்கள்.


==========================================================================

 
///"சாந்தி, சமாதானி" என்பவர்கள் பெண்கள் என்பதாக நான் பதிந்ததால் ("சாந்தி அவ அக்கா சமாதானி") பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்கமென்ற கருத்தினை கருதப்படலாம் என்று சுட்டிக்காட்டிய பெண்பதிவர்கள் இருவரிடமும் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன்.///


என்று  மேற்கண்ட  அவருடைய    தளத்தில்  எழுதி   உள்ளார்கள்  


மிக்க  நன்றி   பெயரிலி  என்ற   சகோ  இரமணிதரன்  அவர்கள்