Showing posts with label சுவை .ஸ்வீட். Show all posts
Showing posts with label சுவை .ஸ்வீட். Show all posts

15 September 2011

ஸ்வீட்டோடு வருகிறேன்.....

அனைவரும் நலமா? நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்  நிலவட்டுமாக...ஆமீன்...!



உங்களை  எல்லாம்  நீண்ட  நாட்களுக்கு  பின்  சந்திப்பதால், ஸ்வீட்டோடு   வந்திருக்கிறேன். பேரு வட்லப்பம். டேஸ்ட் சூப்பரோ சூப்பர்.ஹெல்தியான புட். செய்து   பார்த்துட்டு   எப்படின்னு   சொல்லுங்கோ


                                                                              
                                                                  ட்லப்பம்

தேவையான  பொருட்கள் 


தேங்காய் பெரியது--1
முட்டை ---------------10
சர்க்கரை -------------- 1/2 கி
பாதாம் பருப்பு ---------25 கிராம்
முந்திரி         -----------50கிராம்
திராட்சை    -----------25கிராம்
ஏலக்காய்-------------10கிராம்
பொரி கடலை-------10கிராம்{ஒடச்ச கடலை}


செய்முறை 

முதலில்   தேங்காயை   உடைத்து,  நறுக்கி  மிக்சியில்   போட்டு   அரைத்து  கெட்டியாக  பால்  எடுத்து  கொள்ளவும். {பாலின்  அளவு  முக்கால் லிட்டர்  கெட்டியாக}தண்ணீர்   கூடிவிட்டால் சொதப்பி விடும் .கவனம்.


அதில்  சர்க்கரையை  போட்டு  நன்றாக  கரைத்து  வடிகட்டி வைக்கவும்.


முட்டையை   உடைத்து   மிக்சி  ஜாரில்  ஊற்றி  மிக்சியை  இடது  பக்கம்  சுற்றி, முட்டை  கலவையை     தேங்காய்   பாலில்   ஊற்றவும்.


{பாதம்  பருப்பை  ஊற  வைத்து  மேல்  தோல்  நீக்கி  கொள்ளவும்.}


பாதம் 25கிராம் ,   முந்திரி 25கிராம்,  ஒடச்சகடலை 10கிராம்
ஏலக்காய்  10கிராம்   அனைத்தையும்   மிக்சியில்  நன்றாக  பவுடர்  பண்ணி,
முட்டைபால்  கலவையில்  ஊற்றி  கட்டி  விழாமல்  கலக்கவும்.


இந்த   கலவையை  குக்கருக்குள்   வைக்குமாறு   ஒரு   பாத்திரத்தில்
வைத்து ,  குக்கர்   அடியில்   கொஞ்சம்   தண்ணி   வைத்து . இந்த  பாத்திரத்தை
உள்ளே   வைத்து   வேகவைக்கவும்.  இரண்டு   விசில்   வந்தவுடன்  திறந்து {கொஞ்சம் கொல கொல என்று இருக்கும்  போது} முந்திரி  25கிராம், திராச்சை  25கிராம்   எடுத்து   அதில்  தூவி, திரும்ப   மூடி வேக   வைக்கவும். 6,7   விசில்  வந்தவுடன்  ஆப பண்ணிவிட்டு ,ஏர்  போனவுடன் திறக்கவும்.அல்லது  நைட்  செய்து விட்டு  காலையில் எடுக்கவும்.


சூப்பெரான... சுவையான ... வட்லப்பம்  ரெடி ......

தாராளமாக  10பேர் சாப்பிடலாம். 

உங்கள்  தேவைக்கு  ஏற்ப  அளவை  கூட்டி கொள்ளவும்.

எங்களுடைய  பெருநாளைக்கு {பண்டிகை} கண்டிப்பாக  செய்வோம்.

இதை  யாருலாம்  செய்து  இருக்கீங்க ? சாப்பிட்டு  இருக்கீங்க ?


குறிப்பு :   தேங்காயில்  மேல் இருக்கும்  கருப்பு  தோடை  நீக்கி  விட்டு  பால் எடுத்தால்  வட்லப்பம்  வெள்ளையாக  இருக்கும்.அப்படியே  பால்  எடுத்தால்
கொஞ்சம்  கலர்  கருப்பாகி  விடும். எப்படி  வேண்டுமானாலும்  செய்யலாம். பாதம்  பருப்பு  சேர்ப்பது  உங்கள் விருப்பத்தை  பொறுத்து.