17 January 2011

வாழைப்பூ வடை !

வாழைப்பூ வடை வித்தியாசமான வடைங்க.இப்பதான பொங்கலுக்கு வடையெல்லாம் செய்தோம்.இப்ப வடையைப் பற்றி போடுறீங்களே.அப்படீன்னு சொல்றீங்களா?இப்ப செய்யாட்டா பரவா இல்லங்க. அப்புறம் செய்து பாருங்க.இப்ப உங்க கருத்தும்,ஓட்டும் தான் வேணுங்க !

                 போட்டோ கூஹுள் இருந்து சுருட்டி,என் பிளாக் அட்ரஸ் போட்டேன்.   

                                                       வாழைப்பூ வடை             

தேவையான பொருட்கள் !

வாழைப்பூ -1.   வெங்காயம் -500 கி.   பச்சைமிளகாய்-6.  தேங்காய்-அரைமூடி. சீரகம்-2 ஸ்பூன்.கடலைப் பருப்பு-500 கி.தேவைக்கேற்ப 
எண்ணெய்,உப்பு.

செய்முறை !
கடலைப் பருப்பை சுத்தம் செய்து அரைமணி நேரம் நீரில் ஊறவிட 
வேண்டும்.வாழைப்பூவைப் பிரித்து பூக்களின் உள்ளே இருக்கும்,நரம்பு 
போன்ற பகுதியைக் கிள்ளி எடுத்து விட வேண்டும்.பிறகு நாலு,ஐந்து
பூக்களாக எடுத்து சிறியதாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம்,பச்சை மிளகாய் இரண்டையும் தனித் தனியாக சிறியதாக 
வெட்டி வைக்கவும்.தேங்காயைத் பொடியாக துருவி வைக்கவும்.

கடாய் அடுப்பில் வைத்து காய்ந்ததும்.ஒரு மேஜைகரண்டி எண்ணெய் 
ஊற்றவும்.சூடானதும் வெங்காயத்தைப் போடவும்.வெங்காயம் சிவப்பாக 
பொன்னிறமாக வெந்ததும் வாழைப்பூவைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 
வதக்கவும்.

வாழைப்பூ வெந்ததும் பச்சை மிளகாய்,தேங்காய்ப் பூவையும் போட்டு நன்றாக வதக்கவும்.

ஊறிய கடலைப் பருப்பை வடைப் பக்குவத்திற்கு அரைத்து,அதில் சீரகம்,
தேவைக்கேற்ப உப்பு,வதக்கி வைத்த வாழைப்பூ பொரியல் எல்லாவற்றையும்  போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாய்யை  அடுப்பில் வைத்து சூடு ஆனதும், வடை பொரிக்க தேவையான 
அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.எண்ணெய் சூடானதும் வடைகளைத் 
தட்டிப் போட்டு வேகவிடவும்.இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுத்து சாப்பிட்டு பாருங்கோ.

இதற்கு தொட்டு கொள்ள தக்காளிச் சட்னி,தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.
பொதுவாக எல்லோரும் விரும்பி சாப்பிடுவதில்லை.வேலை அதிகம்.

வாழைப்பூ உடம்புக்கு மிகவும் நல்லது.வாழைப்பூவின் துவர்ப்பு சத்து சர்க்கரை  வியாதி உள்ளவர்களுக்கு ஏற்றது.துவர்ப்பு சத்து நம் எல்லோருக்கும் நல்லது.சுவையாக,வித்தியாசமான வாழப்பூவில் வடை 
செய்து கொடுத்தால் எல்லோருக்கும் பிடிக்கும்.
                                                                                                                                                                            லொள்ளு
                                                                                   
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய வசந்தத்தில் 'கலங்க வைத்த விலைவாசி' படித்து விட்டு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்த
புதிய தலைமை செயலகத்தில்,முதல்வர் தலைமையில் ஆலோசனைக் 
கூட்டம் நடந்தது.     {ஆயிஷாவிற்கு ரெம்ப தான் லொள்ளு}
                                                                                                                                                                    

51 comments:

  1. //தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய வசந்தத்தில் 'கலங்க வைத்த விலைவாசி' படித்து விட்டு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்த
    புதிய தலைமை செயலகத்தில்,முதல்வர் தலைமையில் ஆலோசனைக்
    கூட்டம் நடந்தது.//

    aahaa.... yaarukkum vazhaippu vadai freeya kodukkiratha ethuvum sollalaingala....

    ReplyDelete
  2. வாழைப்பூ வடை நல்லாருக்குங்க...

    //போட்டோ கூஹுள் இருந்து சுருட்டி,என் பிளாக் அட்ரஸ் போட்டேன்.//

    என்னாது இது நீங்க சுட்டது இல்லையா?????
    கூஹுள்ல சுட்டதா???
    ஹிஹிஹி

    ReplyDelete
  3. //தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய வசந்தத்தில் 'கலங்க வைத்த விலைவாசி' படித்து விட்டு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்த
    புதிய தலைமை செயலகத்தில்,முதல்வர் தலைமையில் ஆலோசனைக்
    கூட்டம் நடந்தது. {ஆயிஷாவிற்கு ரெம்ப தான் லொள்ளு}//

    இருக்கும் இருக்கும்....ஹிஹி

    ReplyDelete
  4. பக்குவம் அருமையோ அருமை.
    வடையை சுட்டது பத்தாதுன்னு படத்தை சுட்டு பேரையும் போட்டதும் லொள்ளூ தான்.

    ReplyDelete
  5. இது ரொம்ப குசும்பு தான். போட்டோவை திருடி பெயரை போட்டு கொண்டது.

    ReplyDelete
  6. அருமையா சுட்டு எடுத்து இருக்கீங்க ஆயிஷா.

    ReplyDelete
  7. படத்திலுள்ளவடைய சாப்பிட்டா வாழை பூ டேஸ்டே இல்லையேன்னு பார்த்தேன். ஓ.... (கூகுள்ள இருந்து)சுட்ட வடையா. உங்களுக்கு தேவை ஓட்டுதானே அதப்பிடிங்க முதல்ல.

    ReplyDelete
  8. இன்னைக்கு வீட்டுக்கு போயி பண்ணி பாத்துர வேண்டியதுதான்....

    ReplyDelete
  9. சே.குமார் சொன்னது…

    //தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய வசந்தத்தில் 'கலங்க வைத்த விலைவாசி' படித்து விட்டு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்த
    புதிய தலைமை செயலகத்தில்,முதல்வர் தலைமையில் ஆலோசனைக்
    கூட்டம் நடந்தது.//

    aahaa.... yaarukkum vazhaippu vadai freeya kodukkiratha ethuvum sollalaingala....


    வாங்க சகோ,

    free அப்படி ஒன்னு இருக்கோ

    தெரியாம போச்சு சகோ.

    முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. //மாணவன் சொன்னது…

    வாழைப்பூ வடை நல்லாருக்குங்க...

    //போட்டோ கூஹுள் இருந்து சுருட்டி,என் பிளாக் அட்ரஸ் போட்டேன்.//

    என்னாது இது நீங்க சுட்டது இல்லையா?????
    கூஹுள்ல சுட்டதா???
    ஹிஹிஹி//

    வாங்க சகோ,

    உண்மையை எழுதின ஏங்க சிரிக்கீறீங்க

    மத்தவங்களை சிரிக்க வைக்கிறது தான்

    கஷ்டம் சகோ.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. கூகிளில் சுட்ட வடை எங்களுக்கு வேண்டாம் நீங்கள் சுட்ட வடை எங்கே ?

    வடையை சுட தெரிந்த உங்களுக்கு அதை போட்டோ எடுக்காமல் போனது,வருத்தமா இருக்கு.

    பரவா இல்லை வாழைபூ வடை நல்லாத்தான் இருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. மாணவன் சொன்னது…

    //தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய வசந்தத்தில் 'கலங்க வைத்த விலைவாசி' படித்து விட்டு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்த
    புதிய தலைமை செயலகத்தில்,முதல்வர் தலைமையில் ஆலோசனைக்
    கூட்டம் நடந்தது. {ஆயிஷாவிற்கு ரெம்ப தான் லொள்ளு}//

    இருக்கும் இருக்கும்....ஹிஹி//

    வாங்க சகோ!

    ஆயிஷாவிற்கு எப்பவும் லொள்ளு ஜாஸ்திதான்.

    நன்றி, நன்றி, நன்றி.

    ReplyDelete
  13. //asiya omar சொன்னது…

    பக்குவம் அருமையோ அருமை.
    வடையை சுட்டது பத்தாதுன்னு படத்தை சுட்டு பேரையும் போட்டதும் லொள்ளூ தான்.//


    வாங்க தோழி

    நீங்க சமைத்து அசத்தி தமிழ் மனம்

    விருந்து வாங்கி விட்டீர்கள்.ரெம்ப சந்தோஷம்.

    உங்க அளவுக்கு நான் வரமுடியுமா தோழி.

    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. //இளம் தூயவன் சொன்னது…

    இது ரொம்ப குசும்பு தான். போட்டோவை திருடி பெயரை போட்டு கொண்டது.//

    வாங்க சகோ!

    குசும்பு கூடவே பொறந்ததுங்க.

    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. //ஸாதிகா சொன்னது…

    அருமையா சுட்டு எடுத்து இருக்கீங்க ஆயிஷா//


    வாங்க தோழி !

    நல்ல அருமையான கருத்து.

    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. நீங்க குலசையா? பக்கத்து ஊர்காரங்க ஆயிட்டீங்க.
    வடை சுட்டு பாத்திருவோம்.

    ReplyDelete
  17. //இனியவன் சொன்னது…

    படத்திலுள்ளவடைய சாப்பிட்டா வாழை பூ டேஸ்டே இல்லையேன்னு பார்த்தேன். ஓ.... (கூகுள்ள இருந்து)சுட்ட வடையா. உங்களுக்கு தேவை ஓட்டுதானே அதப்பிடிங்க முதல்ல.//


    வாங்க சகோ!

    படைத்தை பார்த்தே டேஸ்டை கண்டு

    பிடிச்சின்டீங்க சகோ.அண்ணி இடம் சொல்லி

    வாழைப்பூ வடை

    செய்து பாருங்க.டேஸ்டா இருக்கும்.


    //உங்களுக்கு தேவை ஓட்டுதானே அதப்பிடிங்க முதல்ல//


    //கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற நீங்க என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடிக்கவில்லையின்றால் கண்டிப்பாக ஓட்டுபோடுங்க (பிடித்தால் சொல்லாமலே போடுவீங்கதானே)//

    உங்க பதிவுல காப்பி அடிச்சதுதாங்க சகோ.


    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  18. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    இன்னைக்கு வீட்டுக்கு போயி பண்ணி பாத்துர வேண்டியதுதான்...//

    வாங்க சகோ!


    பண்ணி பார்த்துட்டு நாளைக்கு

    சொல்லுங்க சகோ.


    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  19. அந்நியன் 2 சொன்னது…

    கூகிளில் சுட்ட வடை எங்களுக்கு வேண்டாம் நீங்கள் சுட்ட வடை எங்கே ?

    வாங்க சகோ!


    கூகுள் போட்டோவும் வலைபூ வடை போட்டோதான்

    சகோ.நான் சுட்டாலும் அதேதான்.கூகுள் சுட்டாலும்

    அதே தான்.


    //வடையை சுட தெரிந்த உங்களுக்கு அதை போட்டோ எடுக்காமல் போனது,வருத்தமா இருக்கு.//

    சுட்டாத்தான போட்டோ எடுக்க முடியும்.

    //பரவா இல்லை வாழைபூ வடை நல்லாத்தான் இருக்கு பாராட்டுக்கள்.//


    கருத்துக்கும்,பாராட்டுக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  20. //அம்பிகா சொன்னது…

    நீங்க குலசையா? பக்கத்து ஊர்காரங்க ஆயிட்டீங்க.
    வடை சுட்டு பாத்திருவோம்.//

    வாங்க தோழி !

    பக்கத்து ஊர்காரங்களுக்கு பார்சல்

    அனுப்பி விடுங்கள்.

    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  21. //Chitra சொன்னது…

    looks so yummy!//


    வாங்க தோழி !

    நன்றி தோழி.

    ReplyDelete
  22. செய்து பார்த்திட்டா போச்சே....
    ஆயிஷா இன்று தான் உங்கள் தளம் வருகை தந்துள்ளேன்.. வாழ்த்துக்கள் ஆயிஷா...

    ReplyDelete
  23. //தோழி பிரஷா சொன்னது…

    செய்து பார்த்திட்டா போச்சே....
    ஆயிஷா இன்று தான் உங்கள் தளம் வருகை தந்துள்ளேன்.. வாழ்த்துக்கள் ஆயிஷா...//


    வாங்க தோழி !

    உங்கள் முதல்

    வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  24. ஆயிஷா சுட்ட வடையை சுட்ட அதிலும் டேஸ்ட் .
    சுடச்சுட சொன்ன லொள்ளிலும் டேஸ்ட்..சூப்பர்

    ReplyDelete
  25. //அன்புடன் மலிக்கா சொன்னது…

    ஆயிஷா சுட்ட வடையை சுட்ட அதிலும் டேஸ்ட் .
    சுடச்சுட சொன்ன லொள்ளிலும் டேஸ்ட்..சூப்பர்//

    வாங்க தோழி !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும

    ரெம்ப நன்றி.

    ReplyDelete
  26. ஸலாம் சகோ.
    ஆகா முதல் சமையல் குறிப்பா?
    வடை நல்லாவே செய்ய குறிப்பு எழுதீர்க்கீங்க..பட் நீங்க சுட்ட வடையத்தா காணோம்..

    வடை சூடா சாப்பிடுரதே தனி டேஸ்ட் தான்.அதான் அவசரத்துல போட்டொ எடுக்க மறந்துருப்பீங்க...

    ஆக்சுவலா நீங்க கூகுள்'ல எப்டி வடை சுடுரதுங்கிரதுக்குதா குறிப்பு வழங்கி இருக்கனும்..ஏன்னா எத செஞ்சோமோ அதத்தான குறிப்பா குடுக்கனும்..(இந்த ளொள்ளு எப்டி)

    /இப்ப உங்க கருத்தும்,ஓட்டும் தான் வேணுங்க/
    கருத்துரைல கண்ணும் கருத்துமா இருக்கீங்க,..பதிவுலகுல பெரிய எதிர்காலம் இருக்கு...யாருக்கு..(யாருக்கோ...ஹி ஹி ஹ்ஹி)

    /தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய வசந்தத்தில் 'கலங்க வைத்த விலைவாசி' படித்து விட்டு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்த
    புதிய தலைமை செயலகத்தில்,முதல்வர் தலைமையில் ஆலோசனைக்
    கூட்டம் நடந்தது./

    ஆமாம்மா..சன் நியூஸ்ல கூட சொன்னாங்க சகோ...

    (just kidding)
    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  27. //RAZIN ABDUL RAHMAN சொன்னது…

    ஸலாம் சகோ.

    வ அழைக்கும் சலாம்

    வாங்க சகோ,
    நம் பிழை எழுத்தாளரை காணமே.நினைத்தேன்.
    வந்து விட்டீர்கள்.இதில் பிழை எதுவும் இல்லையா?
    சந்தோஷம்.{தேடாதீங்க}

    //ஆகா முதல் சமையல் குறிப்பா?
    வடை நல்லாவே செய்ய குறிப்பு எழுதீர்க்கீங்க..பட் நீங்க சுட்ட வடையத்தா காணோம்..//


    முதல் சமையலே லொள்ளு பார்த்தீங்களா.
    குறிப்புக்கு நன்றி.

    //வடை சூடா சாப்பிடுரதே தனி டேஸ்ட் தான்.அதான் அவசரத்துல போட்டொ எடுக்க மறந்துருப்பீங்க...//

    கரெக்டா சொல்லீட்டீங்க சகோ.

    //ஆக்சுவலா நீங்க கூகுள்'ல எப்டி வடை சுடுரதுங்கிரதுக்குதா குறிப்பு வழங்கி இருக்கனும்..ஏன்னா எத செஞ்சோமோ அதத்தான குறிப்பா குடுக்கனும்..(இந்த ளொள்ளு எப்டி)/

    இந்த லொள்ளு ஓவரா தெரியல.

    //தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய வசந்தத்தில் 'கலங்க வைத்த விலைவாசி' படித்து விட்டு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்த
    புதிய தலைமை செயலகத்தில்,முதல்வர் தலைமையில் ஆலோசனைக்
    கூட்டம் நடந்தது.//

    //ஆமாம்மா..சன் நியூஸ்ல கூட சொன்னாங்க சகோ...//

    சகோ நான்தான் சன் நியூஸ்ல போடச்சொன்னேன்.
    நியூஸ் கேட்க மறந்துட்டேன்.பேப்பர்ல படிச்சதை
    பதிவுல போட்டேன்.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  28. ஸலாம் சகோ...

    /நம் பிழை எழுத்தாளரை காணமே.நினைத்தேன்.
    வந்து விட்டீர்கள்.இதில் பிழை எதுவும் இல்லையா?
    சந்தோஷம்.{தேடாதீங்க}/

    தேடுவோம்ல,,தேடி கண்டுபிடிப்போம்ல...
    கண்டுபிடிச்சுட்டோம்ல...

    /வித்தியாசமான வாழப்பூவில் வடை/ - திருத்தம் - வாழைப்பூ

    எப்புடி...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  29. வாழைப்பூ வடையில ஓட்டை போட மாட்டாங்களா? ஹி..ஹி..

    வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

    ReplyDelete
  30. //RAZIN ABDUL RAHMAN சொன்னது…

    ஸலாம் சகோ...

    /நம் பிழை எழுத்தாளரை காணமே.நினைத்தேன்.
    வந்து விட்டீர்கள்.இதில் பிழை எதுவும் இல்லையா?
    சந்தோஷம்.{தேடாதீங்க}/

    தேடுவோம்ல,,தேடி கண்டுபிடிப்போம்ல...
    கண்டுபிடிச்சுட்டோம்ல...

    /வித்தியாசமான வாழப்பூவில் வடை/ - திருத்தம் - வாழைப்பூ

    எப்புடி...//

    வ அழைக்கும் சலாம்

    தவளை தன் வாயால் கெட்டது. சகோ பழமொழி சரிதானே. இப்ப அதேபோல்
    நானும்.

    இதுக்கு உங்களுக்கு அவார்ட் தரலாம் என
    நினைக்கிறேன்.கூகுள்ளே தேடி பார்க்கிறேன்.
    கிடைச்சா தர்றேன்.

    நன்றி சகோ.

    ReplyDelete
  31. //கவிதை காதலன் சொன்னது…

    வாழைப்பூ வடையில ஓட்டை போட மாட்டாங்களா? ஹி..ஹி..//

    வாங்க சகோ!

    ஏன் சந்தேகம். அண்ணி இடம் சொல்லி
    ஓட்டை போட்டு வாழைப்பூ வடை சுட்டுதான்
    பாருங்களேன்.

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  32. போட்டோ கூகிள்ல சுட்டதா? அப்போ நீங்க சுட்ட வடை இப்படி வரலையா? :-)

    ReplyDelete
  33. ஆஹா....

    உண்மைய ஒத்துக்கிட்டதுக்கே பெரிய பாராட்டுக்கள்ங்க

    குறிப்பு அருமையா இருக்கு

    ReplyDelete
  34. ஆயி, வாழைப்பூ வடை சூப்பர். பின்னூட்டங்கள் அதை விட இண்ட்ரெஸ்டிங்க்.

    ReplyDelete
  35. //ஜீ... சொன்னது…

    போட்டோ கூகிள்ல சுட்டதா? அப்போ நீங்க சுட்ட வடை இப்படி வரலையா? :-)//


    வாங்க சகோ!

    உண்மைய ஒத்துக்கிட்டதுக்கே பாராட்டுக்கள்ங்க

    வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  36. //ஆமினா சொன்னது…

    ஆஹா....

    உண்மைய ஒத்துக்கிட்டதுக்கே பெரிய பாராட்டுக்கள்ங்க

    குறிப்பு அருமையா இருக்கு//

    வாங்க தோழி !

    ஆமினா பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  37. //Lakshmi சொன்னது…

    ஆயி, வாழைப்பூ வடை சூப்பர். பின்னூட்டங்கள் அதை விட இண்ட்ரெஸ்டிங்க்.//

    வாங்க தோழி !

    நன்றி. வடையை சுருட்ட போய் தான் பின்னூட்டங்கள் ரெம்ப இண்ட்ரெஸ்டிங்க்.

    பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றிமா.

    ReplyDelete
  38. வாழைபூ வடை நல்லாத்தான் இருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  39. //sakthistudycentre-கருன் சொன்னது…

    வாழைபூ வடை நல்லாத்தான் இருக்கு பாராட்டுக்கள்.

    வாங்க சகோ!

    கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  40. அருமையான புதிய வகை வடை செய்முறை..... என்னாலதான் சாட்ட்பிட்டு பார்க்க முடியல.... சமயம் வாய்க்கும் போது செய்ய சொல்லனும்.... அப்புறம் லொள்ளு செம லொள்ளுதான்.....

    ReplyDelete
  41. சூப்பரா இருக்கு வடை. கசக்காதா??

    ReplyDelete
  42. அருமையா இருக்கு ஆயிஷா! பார்க்கும்போதே நல்ல கிரிஸ்பியா இருக்குதே, நல்லா சுட்டிருக்கிறீங்கன்னு பார்த்தா... நல்லாதான் சுட்டிருக்கீங்க கூகிளிலிருந்து, அதிலும் உங்க அட்ரஸ் வேறயா? :))

    சரி, 'இனிய வசந்தமு'ம் உங்க ப்ளாக்தானே?

    http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post_19.html
    முடிந்தால் இந்த இடுகையும் பாருங்க!

    ReplyDelete
  43. //சி. கருணாகரசு சொன்னது…

    அருமையான புதிய வகை வடை செய்முறை..... என்னாலதான் சாட்ட்பிட்டு பார்க்க முடியல.... சமயம் வாய்க்கும் போது செய்ய சொல்லனும்.... அப்புறம் லொள்ளு செம லொள்ளுதான்.....//

    வாங்க சகோ!

    வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  44. vanathy சொன்னது…

    சூப்பரா இருக்கு வடை. கசக்காதா??

    வாங்க தோழி !

    வடை கசக்காது.

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  45. //அஸ்மா சொன்னது…

    அருமையா இருக்கு ஆயிஷா! பார்க்கும்போதே நல்ல கிரிஸ்பியா இருக்குதே, நல்லா சுட்டிருக்கிறீங்கன்னு பார்த்தா... நல்லாதான் சுட்டிருக்கீங்க கூகிளிலிருந்து, அதிலும் உங்க அட்ரஸ் வேறயா? :))

    சரி, 'இனிய வசந்தமு'ம் உங்க ப்ளாக்தானே?

    http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post_19.html
    முடிந்தால் இந்த இடுகையும் பாருங்க!//


    வாங்க தோழி !

    அஸ்மா,வடையை சுருட்ட போய் தான் பின்னூட்டங்கள் ரெம்ப இண்ட்ரெஸ்டிங்க்.

    இனியவசந்தம் என் பிளாக்தான்.

    உங்கள் பதிவை படித்து,கமாண்ட்ஸ் கொடுத்தேன் {ஆயிஷா அபுல்}

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  46. வாழைப்பூ வடை நல்ல இருக்கு

    ReplyDelete
  47. என்ன அரை கிலோ வெங்காய்மா?

    ReplyDelete
  48. //Jaleela Kamal சொன்னது…

    வாழைப்பூ வடை நல்ல இருக்கு.//

    வாங்க தோழி !

    நன்றி.

    //Jaleela Kamal சொன்னது…

    என்ன அரை கிலோ வெங்காய்மா?//

    சமையல் அட்டகாசங்கள் சொல்லுங்களேன்.
    அரை கிலோ வெங்காயம் அதிகமா?கம்மியா?


    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  49. பார்க்கவே அழகா இருக்கு.. சாப்பிடத் தோணுது.....
    ஹ்ம்ம். சரி படத்த விட்டுட்டு... செய்முறைக்கு வரேன்..

    ரெசிபி தான் முக்கியம்.. அதை விரிவா, தெளிவா தந்துருக்கீங்க.. நன்றி :-)

    (இங்கே எப்பவாச்சும் வாழைப்பூ கிடைக்கும், அப்போ செய்து பார்கிறேன்)

    ReplyDelete
  50. வாங்க தோழி !

    படம் முக்கியமில்லை.செய்முறைதான் முக்கியம்.

    நன்றாக சொன்னீர்கள்.வாழைப்பூ கிடைக்கும் போது

    கண்டிப்பாக செய்து பாருங்கள்.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete