Showing posts with label துவர்ப்பு. Show all posts
Showing posts with label துவர்ப்பு. Show all posts

17 January 2011

வாழைப்பூ வடை !

வாழைப்பூ வடை வித்தியாசமான வடைங்க.இப்பதான பொங்கலுக்கு வடையெல்லாம் செய்தோம்.இப்ப வடையைப் பற்றி போடுறீங்களே.அப்படீன்னு சொல்றீங்களா?இப்ப செய்யாட்டா பரவா இல்லங்க. அப்புறம் செய்து பாருங்க.இப்ப உங்க கருத்தும்,ஓட்டும் தான் வேணுங்க !

                 போட்டோ கூஹுள் இருந்து சுருட்டி,என் பிளாக் அட்ரஸ் போட்டேன்.   

                                                       வாழைப்பூ வடை             

தேவையான பொருட்கள் !

வாழைப்பூ -1.   வெங்காயம் -500 கி.   பச்சைமிளகாய்-6.  தேங்காய்-அரைமூடி. சீரகம்-2 ஸ்பூன்.கடலைப் பருப்பு-500 கி.தேவைக்கேற்ப 
எண்ணெய்,உப்பு.

செய்முறை !
கடலைப் பருப்பை சுத்தம் செய்து அரைமணி நேரம் நீரில் ஊறவிட 
வேண்டும்.வாழைப்பூவைப் பிரித்து பூக்களின் உள்ளே இருக்கும்,நரம்பு 
போன்ற பகுதியைக் கிள்ளி எடுத்து விட வேண்டும்.பிறகு நாலு,ஐந்து
பூக்களாக எடுத்து சிறியதாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம்,பச்சை மிளகாய் இரண்டையும் தனித் தனியாக சிறியதாக 
வெட்டி வைக்கவும்.தேங்காயைத் பொடியாக துருவி வைக்கவும்.

கடாய் அடுப்பில் வைத்து காய்ந்ததும்.ஒரு மேஜைகரண்டி எண்ணெய் 
ஊற்றவும்.சூடானதும் வெங்காயத்தைப் போடவும்.வெங்காயம் சிவப்பாக 
பொன்னிறமாக வெந்ததும் வாழைப்பூவைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 
வதக்கவும்.

வாழைப்பூ வெந்ததும் பச்சை மிளகாய்,தேங்காய்ப் பூவையும் போட்டு நன்றாக வதக்கவும்.

ஊறிய கடலைப் பருப்பை வடைப் பக்குவத்திற்கு அரைத்து,அதில் சீரகம்,
தேவைக்கேற்ப உப்பு,வதக்கி வைத்த வாழைப்பூ பொரியல் எல்லாவற்றையும்  போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாய்யை  அடுப்பில் வைத்து சூடு ஆனதும், வடை பொரிக்க தேவையான 
அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.எண்ணெய் சூடானதும் வடைகளைத் 
தட்டிப் போட்டு வேகவிடவும்.இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுத்து சாப்பிட்டு பாருங்கோ.

இதற்கு தொட்டு கொள்ள தக்காளிச் சட்னி,தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.
பொதுவாக எல்லோரும் விரும்பி சாப்பிடுவதில்லை.வேலை அதிகம்.

வாழைப்பூ உடம்புக்கு மிகவும் நல்லது.வாழைப்பூவின் துவர்ப்பு சத்து சர்க்கரை  வியாதி உள்ளவர்களுக்கு ஏற்றது.துவர்ப்பு சத்து நம் எல்லோருக்கும் நல்லது.சுவையாக,வித்தியாசமான வாழப்பூவில் வடை 
செய்து கொடுத்தால் எல்லோருக்கும் பிடிக்கும்.
                                                                                                                                                                            லொள்ளு
                                                                                   
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய வசந்தத்தில் 'கலங்க வைத்த விலைவாசி' படித்து விட்டு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்த
புதிய தலைமை செயலகத்தில்,முதல்வர் தலைமையில் ஆலோசனைக் 
கூட்டம் நடந்தது.     {ஆயிஷாவிற்கு ரெம்ப தான் லொள்ளு}