16 February 2011

சிரி சிரி சிரி.... கல கலவென சிரி ...

காதலன்   :  டார்லிங்  நாம  இரண்டு  பேரும்  மோதிரம்  மாத்திக்கலாமா ?

காதலி      :   வேணாம் 

காதலன்   :   ஏன்  ?

காதலி      :   உன் மோதிரம்  ரெண்டு கிராம். என்  மோதிரம் எட்டு கிராம்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆண   ஹலோ    யார்   பேசறது  ?

பெண்   நான்     செல்லம்மா   பேசுறேன் .

ஆண    :  நாங்க  மட்டும்   என்ன  கோவமாவா  பேசறோம் ..
                   யாருன்னு   சொல்லும்மா ...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டிரைவர்  : என்ன  சார்  கார்  டேங்க்கை  ஓபன்  பண்ணிட்டு  சிரிக்கீறிங்க

கார் ஒனர் மனசு  விட்டு  சிரிச்சா  ஆயில்  கூடும்னு  சொன்னாங்க 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவன்  : என்னுடைய   அகராதியில்   முடியாது   என்கிற வார்த்தையே                       கிடையாது.

மற்றொருவன் இப்ப   சொல்லி  என்ன  பிரயோசனம், அகராதியை
                               வாங்கும்  போது  பார்த்து  வாங்கியிருக்கணும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 பெரியவர்      :   உங்க  மாப்பிள்ளை  பெரிய  இடத்தில   வேலையாமே ?


ம .பெரியவர்   :   ஆமாம்   பீச்ல   சுண்டல்   விக்கிறார் .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பேஷன்ட்    எதுக்கு   டாக்டர்   நர்ஸ்  இடுப்பை   தொடச்  சொல்றீங்க ?

டாக்டர்       :   உங்களுக்கு   கரண்ட் ஷாக்  கொடுகலாமேன்னு    தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நண்பன்       :    சத்து   குறைஞ்சுடுச்சுனு  டாக்டரிடம்  போனேண்டா
 
ம.நண்பன்   :    என்னாச்சுடா 

நண்பன்       :    சொத்து   குறைஞ்ச்சுடுச்சுடா .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மனைவி      :    என்னங்க...உங்க  கைக்கடிகாரம்  ஓடாம நின்னு  போய்  

                          இருக்கு.

கணவன்     :   நேரத்தை  வீணாக்க  கூடாதுன்னு   நான்தான்  நிறுத்தி 
                          வைச்சேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நண்பன்           :  உங்க  பொண்ணுக்கு  ஏதாவது  மாப்பிள்ளை கிடைச்சுதா?

பெண்ணின் அப்பா என்னத்த  சொல்ல   ஒன்னு  இருந்தா,ஒன்னு இல்ல 
                                     ஆமா,  உனக்கு  தெரிஞ்ச நல்ல  மாப்பிள்ளை    
                                         இருந்தா   சொல்லேம்ப்பா .
 
நண்பன்               :       என்  அக்கா  பையனுக்குத்தான்  வரன்  பார்த்துட்டு
                                      இருக்கோம். பையன்   ராசா  மாதிரி  இருப்பான்.


பெண்ணின் அப்பா ரெம்ப  நல்லதா  போச்சு...ராசா  மாதிரி   இருந்தாத் 
                                        தானே  இப்போ  இருக்கிற  விலைவாசிக்கு 
                                      கட்டுப்படி  ஆகும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நம்ம  மாணவன்  சிம்பு  சார்        :   செய்யாத  தப்புக்கு  நீங்க  தண்டனை
                                                                   தருவீங்களா  சார்

நம்ம   வாத்தியார்  கருண்  சார் :   தரமாட்டேன். ஏன் ?

நம்ம  மாணவன்  சிம்பு  சார்       :   நான்   ஹோம்  ஒர்க்  செய்யலை சார்.
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


09 February 2011

கவிதைகள் !

                                  முதியோர்   இல்லத்தில்  ஒரு  தாயின்   கண்ணீர் !

                                           மகனே !
                                                   
                                           நீ    இருக்க   ஒரு
                                           கருவறை  இருந்தது
                                           என்  வயற்றில்
                                           ஆனால் ,
                                            நான்  இருக்க  ஒரு 
                                            இருட்டறை  கூடவா 
                                            இல்லை 
                                            உனது  வீட்டில் ?
              
                                                                   சந்தேகம் !         
  
                                       புற்று   நோயைப்   போல,
                               தொடங்கி   விட்டது   சந்தேகம் 
                               மிகவும்   கொடியது                                                                               இதயத்தில்   வேர்   வைத்து
                               மார்பு   வரை   பாசியாகப்   பரவி 
                                       தவணையில்   குடிக்கிறது   உயிரை !

                                                    புலம்பல்ஸ் 

                                                காதலித்து 
                                                மனம்   புரிந்தவனும்
                                                புலம்புகிறான் !
                                                நிச்சயித்து 
                                                திருமணம்   புரிந்தவனும் 
                                                புலம்புகிறான் !
                                                இரண்டையும்   புரிந்தவன்
                                                சன்யாசி !


                                                        காதல் 
      
                                          என்னோடு    வாழும் 
                                          உனது    ஞாபகங்கள் .....
                                          நான்   இல்லாத  போதும் 
                                          வாழ்ந்து   கொண்டிருக்கும் ! 

                                                          மரணம்  

                                               கடைசி    நாளில் 
                                               சிலரின்   கண்ணீர்   துளிகள்  தான் 
                                               வாழ்ந்த   நாளில்  
                                               நாம்   சேர்த்து  வைத்த   சொத்து ! 
  

01 February 2011

கொள்ளை போகும் கோடிகள்!அமைதி காக்கும் அரசு!

                                                                                                              
                                                                           
ஒவ்வொரு   நாளும்   இந்தியாவிலிருந்து   240 கோடி  ரூபாய  சட்ட  விரோதமாக  வெளியே  போகிறது. அதை  தடுக்க  வழியே  இல்லையா ?


லீக்டான்ஸ்டைன்{liechtenstein }  என்ற  சிறிய  நாட்டின்  வங்கியில்  கருப்பு  பணத்தை சேமித்து  வைத்திருக்கும்  50  இந்தியர்களின்   பெயரை  வெளி  இட  மறுத்து,  அடம்  பிடித்து  வருகிறது  மத்திய  அரசு.  இந்த  50  பேரின்   கணக்கு  பற்றிய  விவரங்கள்  2008ம்    ஆண்டு  மத்திய  அரசிடம்  கொடுக்கப்பட்டது.  ஆனால்  இதுவரை  ஒருவர்  மீது  கூட   நடவடிக்கை   எடுக்கப்படவில்லை. 



லீக்டான்ஸ்டைன்   மேற்கு  ஐரோப்பாவில்,  ஆல்ப்ஸ்  மலையின்  அடியில்
அமைந்துள்ள  சின்னஞ்  சிறிய  தேசம். மொத்த  மக்கள்  தொகையே  35,000  பேர்  தான்.  பரப்பளவு  160 சதுர அடி கிலோ மீட்டர்தான்.  ஜெர்மன்  மொழி 
பேசும்  நாடு.  நாடாளுமன்றத்துடன்  கூடிய  அரசாட்சி  நடக்கிறது. கடவுள்,
இளவரசர்,  நாடு  இவற்றுக்கு  விசுவாசமாக  இருப்போம்  என்பதைக்  கொள்கையாக  அறிவித்து  கடவுளை  மடியில்  கட்டிக்  கொண்டிருக்கும்  
இந்த  நாடு,  வரி  ஏய்ப்பவர்களுக்கு  ஒரு  சொர்க்கம்.


 
இதைப்  போன்று  உலகில்  70க்கும்   மேற்பட்ட  சொர்க்கங்கள்  இருகின்றன. அவை  எல்லாமே  அநேகமாக  குட்டிக் குட்டி  நாடுகள் . அவற்றில்  சுமார்  40  நாடுகளின்  வங்கிகள்  உலகெங்கும்  மிகத்  தீவிரமாக விளம்பரம்  செய்து  கணக்குகளைப்  பிடிக்கின்றன. இந்த  வரி ஏய்ப்புச்  சொர்கங்களில்  முக்கியமானது   சுவிட்சர்லாந்து.


வரி  கட்டாமல்  மறைத்து  வைக்கப்படுகிற  பணம்  தான்  கருப்பு  பணம்.
வெளிநாட்டிலிருந்து  ராணுவத்  தளவாடங்கள்  வாங்கும்  போது  பெறப்படும்
கமிஷன், உள்நாட்டில்  காண்ட்ராக்ட்களில்  கிடைக்கும்  லஞ்சம்,போதைப்
பொருள்  கடத்தலில்  கிடைக்கும்  பணம், ஏற்றுமதி   இறக்குமதியின் போது 
தொகையைக்  கூடுதலாகவோ,  குறைவாகவோ  போட்டு  அந்த  வித்தியாசத்தில்  கிடைக்கும்  பணம், ஹவாலா  பேரங்களில் கிடைக்கும் 
பணம்  எனப்  பலவழிகளில்  பணம்  கடத்தப்  படுகிறது. 


அண்மைக்காலமாக  மும்பை, டெல்லியிலிருந்து  ஒரு  முழு  விமானத்தை 
வாடகைக்கு  அமர்த்தி  கொண்டு, நேரடியாகவே  பணத்தை  மூட்டை  கட்டி 
எடுத்துக்  கொண்டு  போய்  போட்டு  விட்டு  வருவதாக  கூறப்படுகிறது.
விமானங்களை   சொந்தமாக  வாங்க  பலர்  ஆர்வம்  காட்டுவது  அதிகரித்து 
வருவதற்கு  இந்தக்  கடத்தலும்  ஒரு காரணமாக  இருக்கக்கூடும் எனக் 
கருதப்படுகிறது. 


சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி,ஜெர்மனி,மேமன்  தீவுகள்,அமேரிக்கா 
இந்த  நாடுகள்  கருப்பு  பணம்  சேமிக்க  ஏற்ற  இடமாக  உள்ளன.இந்த  நிதி 
ஆதாரத்தைக்  கொண்டு  தங்கள்  நாட்டைக்  அவை  வளப்படுத்திக்  கொள்கின்றன.{ எதோ ஒரு  திரைப்படத்தில்  கவுண்டமணியின்  கடையிலிருந்து   இளநீர்காய்களைப்  கயிறு  போட்டு  இழுத்து  தங்கள் கடையில்  வைத்து  செந்திலும்,  வடிவேலும்  வியாபாரம்  செய்வதைப் போன்றது  இது.}


கறுப்புப்   பண  சொர்க்கங்களுக்கு   பணத்தை  சேமிப்பது  மட்டுமல்ல,
அங்கிருந்து   அவற்றை  இங்கே  வெள்ளையாக்கி  எடுத்து  வருவது  இன்னும்   சுலபமாகி  விட்டது. இந்தக்  குட்டி  தேசங்களில்  ஏதாவது  ஒரு
லெட்டர்  பேட்  கம்பெனி  ஆரம்பிக்க  வேண்டியது. பின்  அந்த  கம்பெனி  இந்தியாவில்  முதலீடு  செய்வது  போல   பணத்தைக்  கொண்டு  வந்து விட 
வேண்டியது.  அவ்வளவுதான் {லீக்டான்ஸ்டைனில்  மட்டும்  73,000 லெட்டர்  பேட்  கம்பெனிகள்  இருக்கின்றன. அந்த  நாட்டின்  மக்கள்  தொகையை  விட  இந்த  எண்ணிக்கை  அதிகம்.}


ஏன்  நம்மால்  ஒன்றும்  செய்ய  முடியவில்லை ?

உலகம்  நம்மை  நம்புவது  முக்கியமா அல்லது  அரசு மக்களின்  நம்பிக்கையைப்  பெற்றிருக்க  வேண்டுமா  என்பது  பிரதமரின்  சாய்ஸ். இந்தியா  உறுதியான  நடவடிக்கை  எதையும்  மேற்கொள்ளாததற்கு  காரணம்,இந்த  நாட்டின்  வங்கிகளில்  கார்ப்பரேட்  நிறுவனங்கள்,சினிமா 
நடசத்திரங்களின்  பணம்  மட்டுமல்ல,அரசியல்வாதிகள்  பணமும்  பதுக்கப்  பட்டிருக்கலாம்  என  பரவலாக  நம்பப்படுகிறது.

 
இந்திய  கருப்பு  பணத்தில்  70  சதவிகிதம்  அயல்  நாட்டில்  பதுக்கப்பட்டிருக்கிறது   என  தெரிந்தும், ஏன்  சுறுசுறுப்பாக  செயலில் 
இறங்காமல்   சாக்கு  போக்கு  சொல்லி  கொண்டு,அமைதி  காக்கும்  அரசு.


                     அந்த  அரசியல்  வாதிகளுக்கே  வெளிச்சம். 
                         
                                              நன்றி  
                                      புதிய தலைமுறை.