13 October 2011

புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி



                                                                         

சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது.  மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?  ஏன் அடிக்கிறீர்கள்  என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.


பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.  சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம்.  நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்படி திட்டுவார்கள். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல.  நம்மை மையப்படுத்தி இருக்கிறது.  முதலில் அதை உணர்வோம். 


அடுத்து குழந்தை தன்னையோ,  மற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும்.  சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும்.  விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்க வேண்டும். 

 
குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது.  சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும்.  இப்படி  ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு.  முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.  பொறுமை யின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன.  அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.  

 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.  இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா?  இப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது.  உதாரணமாக 

 
8 மாதக்  குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார்.  அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு, மகிழ்ச்சி.  தன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்தி.  ஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு  என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.

 
 
இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது.  ஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது.  வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார்.  ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது.  இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.
  

இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று நினைப்பார்கள். 


 
இதைப் பார்க்கும்போது, கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல.  அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்.  ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல.  அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு.  உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள்.  அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு.  நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள்.  ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.  ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்ற வரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல.  நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக்குள்ளாகக் கூடாது.



அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது.  அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா?  பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாம்.  நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால், வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான்.

 
இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான்.  நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள்.


ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும்.  நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது.  தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா.
 

குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள்.  நல்ல பலன்தரும் விதைகளாக, விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும்.   பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசி வளர்க்க வேண்டும்.  

 
உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், நீ எதற்குத்தான் லாயக்கு.. நீ பொறந்ததே வேஸ்ட் என்று திட்டிக்கொண்டே இருந்தால்,  அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக் குள்ளேயே தங்கிவிடும்.  சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே  அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும். 
பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும்.  
 

எனவே, மனதளவில் பாதிப்பிற்குள்ளாக்கும் இம்மாதிரியான சொற்களை பெற்றோர்கள் பேசுவது குற்றமாகவே கருத வேண்டும். இப்படிப் பாதிக்கப்பட்ட  குழந்தைகள் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.
 

கண்டிப்பது என்பது வேறு, தண்டிப்பது என்பது வேறு.
கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது.
 

தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக்குள்ளாக்குவது.  

 

ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால், அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும்.  மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்துவிடக்கூடாது.
 

குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது.  தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். 

 
பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை  குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள்.  அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.


 






39 comments:

  1. Arumaiyaka Solli Irukireerkal Aysha.அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால், வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான்.
    Azhakana Karuthukkal.Nantri.

    ReplyDelete
  2. குழந்தை வளர்ப்பு பற்றிய மிகவும் பயனுள்ள பதிவு.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு.தாய்மார்கள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டியவை,

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள பதிவு

    ReplyDelete
  5. கண்டிப்பு கனிவு இரண்டிற்கும் இடையேயான லாகவம் பயிலுதல் வேண்டும். கம்பி மேல் நடக்கும் லாகவம். எல்லை மாறிவிட்டால் இரண்டும் உதவாது. உண்மையென்னவென்றால் இந்த விகிதத்தினை நிர்ணயிப்பது குழந்தையின் இயல்புகள்தான். சில சின்ன முகமாறுதலுக்குக்கூட வாடிவிடும் அனிச்ச மலர்கள். சில குழந்தைகளுக்கு எல்லை மாறும்.

    ReplyDelete
  6. #//குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது. தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்.#//

    சரியாக சொல்லி இருக்கிறீர்கள். குழந்தை வளர்ப்பு பற்றிய அருமையான பதிவு.

    ReplyDelete
  7. குழந்தை வளர்ப்பு பற்றிய அருமையான பதிவு...

    ReplyDelete
  8. கண்டிப்பு , செல்லம் குடுப்பது என்பது தாய் ,தந்தை ஒரே நேரத்தில் செய்யக்கூடாது . ஒருவர் கண்டிப்புடன் இருந்தால் மற்றவர் கொஞ்சம் விட்டுக்குடுக்கனும் . அப்போதுதான் வளரும் குழந்தை பொற்றோரை வெறுக்காது .முதியோர் இல்லம் வளர இதுவே முக்கிய காரணம் .


    அருமையான பதிவு :-))

    ReplyDelete
  9. இப்போது உள்ள குழந்தைகள் ரொம்பவும் அட்வானஸ் ... நமக்குதான் ஸைகாலஜி தேவைப்படுது அவ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  10. //MyKitchen Flavors-BonAppetit!. சொன்னது…
    Arumaiyaka Solli Irukireerkal Aysha.அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது.//

    ஏன் அகோதரி உதவாது ?

    தாய் அடிப்பாள் பின்பு அனைத்து கொள்வாள்.
    அந்த சுகம் எந்த நட்புக்கும் ஈடாகாது.


    //நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால், வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான்.//
    Azhakana Karuthukkal.Nantri.//


    தங்கள் தொடர் வருகைக்கும். முதல் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  11. //வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…
    குழந்தை வளர்ப்பு பற்றிய மிகவும் பயனுள்ள பதிவு.
    பாராட்டுக்கள்.//

    தங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும ,பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  12. //ஸாதிகா சொன்னது…
    அருமையான பகிர்வு.தாய்மார்கள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டியவை,//

    தங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும மிக்க நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  13. //"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
    நல்ல பயனுள்ள பதிவு//

    தங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும மிக்க நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  14. //சாகம்பரி சொன்னது…

    கண்டிப்பு கனிவு இரண்டிற்கும் இடையேயான லாகவம் பயிலுதல் வேண்டும். கம்பி மேல் நடக்கும் லாகவம். எல்லை மாறிவிட்டால் இரண்டும் உதவாது. உண்மையென்னவென்றால் இந்த விகிதத்தினை நிர்ணயிப்பது குழந்தையின் இயல்புகள்தான். சில சின்ன முகமாறுதலுக்குக்கூட வாடிவிடும் அனிச்ச மலர்கள். சில குழந்தைகளுக்கு எல்லை மாறும்.//


    உங்களின் அருமையான கருத்துக்கும், வருகைக்கும் நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  15. abul bazar/அபுல் பசர் சொன்னது…
    #//குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது. தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்.#//

    சரியாக சொல்லி இருக்கிறீர்கள். குழந்தை வளர்ப்பு பற்றிய அருமையான பதிவு.


    உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி மைடியர்

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  16. //மாய உலகம் சொன்னது…
    குழந்தை வளர்ப்பு பற்றிய அருமையான பதிவு...//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும மிக்க நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  17. //middleclassmadhavi சொன்னது…
    பகிர்வுக்கு நன்றி!//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும மிக்க நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  18. //ஜெய்லானி சொன்னது…
    கண்டிப்பு , செல்லம் குடுப்பது என்பது தாய் ,தந்தை ஒரே நேரத்தில் செய்யக்கூடாது . ஒருவர் கண்டிப்புடன் இருந்தால் மற்றவர் கொஞ்சம் விட்டுக்குடுக்கனும் .//

    அருமையான கருத்து

    //அப்போதுதான் வளரும் குழந்தை பொற்றோரை வெறுக்காது .முதியோர் இல்லம் வளர இதுவே முக்கிய காரணம் .//

    இது தவறான கருத்து சகோ.

    பிள்ளைகளை கண்டித்தால் பெற்றோர்கள் முதியோர் இல்லமா

    இறைவனுக்கு அப்புறம் நம் பெற்றோர்கள் தான் என்று அவர்களுக்கு புரிய வைக்கணும்.

    அருமையான பதிவு :-))

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும மிக்க நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  19. //ஜெய்லானி சொன்னது…
    இப்போது உள்ள குழந்தைகள் ரொம்பவும் அட்வானஸ் ...//

    உண்மைதான் சகோ


    // நமக்குதான் ஸைகாலஜி தேவைப்படுது அவ்வ்வ்வ் :-)))

    கண்டிப்பாக ...

    உங்கள் பிள்ளைகள் அவங்க அம்மா மாதிரி தானே

    மால்வேர் பற்றி பதிவு போட்டவங்களுக்கே மால்வேர் உள்ளே போய்டுச்சே.

    இப்ப வெளியே போய இடுச்சா

    ReplyDelete
  20. சகோதரி ஆயிஷா அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    நிறைவான விழிப்புணர்வு ஊட்டும் பதிவு...ஜசாக்கல்லாஹ்

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  21. Aashiq Ahamed சொன்னது…

    //சகோதரி ஆயிஷா அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...//


    சகோதரர் ஆஷிக் அஹ்மத் அவர்களே வாங்க வாங்க

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    //நிறைவான விழிப்புணர்வு ஊட்டும் பதிவு... ஜசாக்கல்லாஹ்//


    தங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும துஆவிற்கும் மிக்க நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  22. இதில் “அடியாத மாடு படியாது” என்று பழமொழி வேறு கூறுவார்கள்.

    நம்மிடம் உள்ள முக்கிய தவறே கண்டிப்பு என்றால் உடனே அடித்துத் திருத்துவது என்ற நினைப்புதான். கண்டிப்பு வேறு; அடிப்பது வேறு என்ற அடிப்படை புரிதல் இல்லாதது தான் முக்கிய சிக்கல்.

    நல்ல அலசல்.

    ReplyDelete
  23. //வேங்கட ஸ்ரீனிவாசன் சொன்னது…

    இதில் “அடியாத மாடு படியாது” என்று பழமொழி வேறு கூறுவார்கள்.

    நம்மிடம் உள்ள முக்கிய தவறே கண்டிப்பு என்றால் உடனே அடித்துத் திருத்துவது என்ற நினைப்புதான். கண்டிப்பு வேறு; அடிப்பது வேறு என்ற அடிப்படை புரிதல் இல்லாதது தான் முக்கிய சிக்கல்.

    நல்ல அலசல்.//


    தங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும மிக்க நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  24. குழந்தை வளர்ப்பை பற்றி அருமையான பதிவு.
    நன்கு எழுதுங்கள்; நிறைய எழுதுங்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. //Rathnavel சொன்னது…

    குழந்தை வளர்ப்பை பற்றி அருமையான பதிவு.
    நன்கு எழுதுங்கள்; நிறைய எழுதுங்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//

    முகநூல் பக்கத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும வாழ்த்துக்கும
    மிக்க நன்றி சகோ

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  26. //athira சொன்னது…

    நல்ல, பயனுள்ள பதிவு.//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும மிக்க நன்றி அதிரா.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  27. எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க மச்சி..

    ReplyDelete
  28. //Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

    எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க மச்சி..//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும மிக்க நன்றி கொழுந்தன்

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  29. நல்லதொரு பதிவு ஆயிஷா

    முன்பே படுத்துவிட்டேன் கருத்திட தான் நேரமில்லாம போனது

    தம 7 :-)

    ReplyDelete
  30. //ஆமினா சொன்னது…

    நல்லதொரு பதிவு ஆயிஷா//

    வாங்க ஆமினா நீண்டநாள் அப்புறம் பின்னூட்டம்

    //முன்பே படுத்துவிட்டேன்//

    ஹா ஹா ஹா

    பிளாக்கில் படிச்சிட்டு படுதுட்டீன்களா ?

    நல்லா தூக்கம் வந்ததா

    இதுக்குதான் பிறரை {சகோ ரஜின்} கேலி பண்ண கூடாது.

    சகோ ரஜின் எங்கிருந்தாலும் உடன் வரவும்.


    //கருத்திட தான் நேரமில்லாம போனது

    தம 7 :-)//

    இப்ப வருகைதந்து கருத்திட்டமைக்கு, ஓட்டு போட்டமைக்கும்,தூங்கினதுக்கும் நன்றி ஆமினா.

    ReplyDelete
  31. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
    குழந்தைகளின் ஸைக்காலஜி குறித்த இந்தப்பதிவு,அதுகுறித்த பல செய்திகளை தாங்கள் உள்வாங்கி எழுதியிருப்பதை உணர்த்துகிறது..

    அருமை...சகோ..பயனுல்ல பதிவு..
    ---------------------னெக்ஸ்ட்டு...
    //சகோ ரஜின் எங்கிருந்தாலும் உடன் வரவும்.//
    ஆஜர்...

    என்னது பதிவ படிக்கும் போதே தூங்குறதா?.. என்ன கொடும சார் இது... இங்க ஒவ்வொருத்தரும் எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு டாப்பிக் செலக்ட் பண்ணி அத சுவாரஸ்யமா எழுதி...வெளியிட எவ்ளோ கஷ்டப்படுரோம் தெரியுமா?..அத படிக்கும் போது தூங்குரதும் இல்லாம..:)அத பின்னூட்டத்துல வேர சொல்றது...2மச்..2x3x4 also...

    (ஒத்த எழுத்து மிஸ் ஆனதுக்கு இவ்ளோவா??வெளியூர்ல இருந்துல்லா ஆள கூப்டுராகலேன்னு நெனக்கியலா...)
    என்ன பண்ரது...(இங்க எதாவது பஞ் டயலாக் வேணுமே!!..ம்ம்.

    மிய்யாவ்க்கு மணி கட்டுனாலும் அத தங்கத்துல கட்டித்தா எங்களுக்கு பழக்கம்..:( அதா அப்டி..(தங்கம் விக்கிர வெலைல இது கொஞ்சம் ஓவரோ..)

    //இதுக்குதான் பிறரை {சகோ ரஜின்} கேலி பண்ண கூடாது.//

    அதெல்லா ஒன்னுமில்ல சகோ..இப்போ நாம அவகல வாரலியா?..அதுமாதிரித்தே...அப்பப்ப கூடுர பொதுக்குழுல..எல்லாத்தையும் பைசல் பண்ணிப்புடுவோம்ல..:)

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  32. //இதுக்குதான் பிறரை {சகோ ரஜின்} கேலி பண்ண கூடாது...//

    நல்லாதானே போயிட்டு இருந்தீங்க...... ஏன் அவர கூப்டுறீங்க. செவனேன்னு பில்டிங்கையெல்லாம் போட்டோ எடுத்துட்டிருக்கிறவர் பாதில காமராவை தூக்கி போட்டுட்டு வந்துட்டாக பாருங்க!!

    ReplyDelete
  33. //அப்பப்ப கூடுர பொதுக்குழுல..எல்லாத்தையும் பைசல் பண்ணிப்புடுவோம்ல..:)//

    இதுக்காகவே பொது குழுவுக்காக காத்துட்டிருந்த மாதிரியே இருக்கே........

    :-))

    ReplyDelete
  34. //மிய்யாவ்க்கு மணி கட்டுனாலும் அத தங்கத்துல கட்டித்தா எங்களுக்கு பழக்கம்..:( //

    எங்க வீட்டு மிய்யாவ்வ அனுப்பி வைக்கிறேன். தங்கத்துல மணி கட்டி அனுப்பி விடுங்கோ ரஜின் அண்ணா.....

    :-)

    ReplyDelete
  35. //(ஒத்த எழுத்து மிஸ் ஆனதுக்கு இவ்ளோவா??வெளியூர்ல இருந்துல்லா ஆள கூப்டுராகலேன்னு நெனக்கியலா...)//

    அதானே.... சொன்னேனே ஆயிஷா கேட்டேளா??

    அவர் ரொம்ப பிசி.... ரோட்டுல படுத்து புரண்டு செல்போன் டவர்ல ஏறி போட்டோ எடுத்துட்டிருப்பாரு... பாருங்க உங்களுக்காக அப்படியே போட்டுட்டு இப்ப பஞ்ச் டயலாக்க தேடுறார்........

    ReplyDelete
  36. //காமராவ//
    இது புதுசால இருக்கு ...எங்கிட்ட "camera " தே இருக்கு..

    //இதுக்காகவே பொது குழுவுக்காக காத்துட்டிருந்த மாதிரியே இருக்கே........//
    இல்லையா பின்ன...:)

    //எங்க வீட்டு மிய்யாவ்வ அனுப்பி வைக்கிறேன். தங்கத்துல மணி கட்டி அனுப்பி விடுங்கோ ரஜின் அண்ணா..... //
    உங்க வீட்டு மியாவுக்கு தான இவ்ளோ நேரம் மாஞ்சு மாஞ்சு மணி கட்டிருக்கு...இப்டி திடீர்ன்னு திரும்பவும் கேட்ட, நா எங்க போவேன்..நேக்கு யார தெரியும்??? :)

    //அவர் ரொம்ப பிசி.... //
    அது என்னமோ உண்மைதான்...:)

    ///ரோட்டுல படுத்து புரண்டு செல்போன் டவர்ல ஏறி போட்டோ எடுத்துட்டிருப்பாரு... //

    போராம...நம்மளால இப்டில்லா போட்டோ எடுக்க முடியலையேன்னு...:)

    ReplyDelete
  37. உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் என் தீபத்திருநாள்
    வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........

    ReplyDelete
  38. என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (1/11/11 -செவ்வாய் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

    ReplyDelete