16 February 2011

சிரி சிரி சிரி.... கல கலவென சிரி ...

காதலன்   :  டார்லிங்  நாம  இரண்டு  பேரும்  மோதிரம்  மாத்திக்கலாமா ?

காதலி      :   வேணாம் 

காதலன்   :   ஏன்  ?

காதலி      :   உன் மோதிரம்  ரெண்டு கிராம். என்  மோதிரம் எட்டு கிராம்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆண   ஹலோ    யார்   பேசறது  ?

பெண்   நான்     செல்லம்மா   பேசுறேன் .

ஆண    :  நாங்க  மட்டும்   என்ன  கோவமாவா  பேசறோம் ..
                   யாருன்னு   சொல்லும்மா ...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டிரைவர்  : என்ன  சார்  கார்  டேங்க்கை  ஓபன்  பண்ணிட்டு  சிரிக்கீறிங்க

கார் ஒனர் மனசு  விட்டு  சிரிச்சா  ஆயில்  கூடும்னு  சொன்னாங்க 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவன்  : என்னுடைய   அகராதியில்   முடியாது   என்கிற வார்த்தையே                       கிடையாது.

மற்றொருவன் இப்ப   சொல்லி  என்ன  பிரயோசனம், அகராதியை
                               வாங்கும்  போது  பார்த்து  வாங்கியிருக்கணும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 பெரியவர்      :   உங்க  மாப்பிள்ளை  பெரிய  இடத்தில   வேலையாமே ?


ம .பெரியவர்   :   ஆமாம்   பீச்ல   சுண்டல்   விக்கிறார் .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பேஷன்ட்    எதுக்கு   டாக்டர்   நர்ஸ்  இடுப்பை   தொடச்  சொல்றீங்க ?

டாக்டர்       :   உங்களுக்கு   கரண்ட் ஷாக்  கொடுகலாமேன்னு    தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நண்பன்       :    சத்து   குறைஞ்சுடுச்சுனு  டாக்டரிடம்  போனேண்டா
 
ம.நண்பன்   :    என்னாச்சுடா 

நண்பன்       :    சொத்து   குறைஞ்ச்சுடுச்சுடா .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மனைவி      :    என்னங்க...உங்க  கைக்கடிகாரம்  ஓடாம நின்னு  போய்  

                          இருக்கு.

கணவன்     :   நேரத்தை  வீணாக்க  கூடாதுன்னு   நான்தான்  நிறுத்தி 
                          வைச்சேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நண்பன்           :  உங்க  பொண்ணுக்கு  ஏதாவது  மாப்பிள்ளை கிடைச்சுதா?

பெண்ணின் அப்பா என்னத்த  சொல்ல   ஒன்னு  இருந்தா,ஒன்னு இல்ல 
                                     ஆமா,  உனக்கு  தெரிஞ்ச நல்ல  மாப்பிள்ளை    
                                         இருந்தா   சொல்லேம்ப்பா .
 
நண்பன்               :       என்  அக்கா  பையனுக்குத்தான்  வரன்  பார்த்துட்டு
                                      இருக்கோம். பையன்   ராசா  மாதிரி  இருப்பான்.


பெண்ணின் அப்பா ரெம்ப  நல்லதா  போச்சு...ராசா  மாதிரி   இருந்தாத் 
                                        தானே  இப்போ  இருக்கிற  விலைவாசிக்கு 
                                      கட்டுப்படி  ஆகும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நம்ம  மாணவன்  சிம்பு  சார்        :   செய்யாத  தப்புக்கு  நீங்க  தண்டனை
                                                                   தருவீங்களா  சார்

நம்ம   வாத்தியார்  கருண்  சார் :   தரமாட்டேன். ஏன் ?

நம்ம  மாணவன்  சிம்பு  சார்       :   நான்   ஹோம்  ஒர்க்  செய்யலை சார்.
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


53 comments:

 1. //சொத்து குறைஞ்ச்சுடுச்சுடா //
  Super! :-)

  ReplyDelete
 2. திரட்டிகளில் இணைக்கல?

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  என்ன சிரிப்பு பதிவா

  நன்றி சகோ

  ReplyDelete
 4. //என்னுடைய அகராதியில் முடியாது என்கிற வார்த்தையே கிடையாது.

  இப்ப சொல்லி என்ன பிரயோசனம், அகராதியை
  வாங்கும் போது பார்த்து வாங்கியிருக்கணும்//

  haha சூப்பர் :D

  ReplyDelete
 5. முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அவருடைய மருமகன் அலி இருவரும் ஒன்றாக அமர்ந்து பேரீச்சை பழங்களை சப்பிட்டு கொண்டிருந்தனர்.

  அப்போது அலி அவர்கள் பேரிச்சை பழத்தை தின்றுவிட்டு கொட்டையை முஹம்மது நபி உக்கந்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் போட்டு விட்டு
  என்ன அல்லாஹ்வின் தூதரே இவ்வளவு பேரிச்ச பழத்தையும் தின்று விட்டீர்களா? என்று கேட்கிறார்

  அதற்கு முஹம்மது நபியவர்கள் நானாவது தின்றுவிட்டு கொட்டையை கீழே போட்டேன் ஆனால் நீ கொட்டையோடு அல்லவா தின்று இருக்கிறாய் என்று சொல்லி சிரித்தார்களாம்

  ReplyDelete
 6. ஜோக்ஸ் எல்லாமே செம்ம கலக்கல்.. :))

  சூப்பர்

  ReplyDelete
 7. //நம்ம மாணவன் சிம்பு சார் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை
  தருவீங்களா சார்

  நம்ம வாத்தியார் கருண் சார் : தரமாட்டேன். ஏன் ?

  நம்ம மாணவன் சிம்பு சார் : நான் ஹோம் ஒர்க் செய்யலை சார். //

  ஆஹா... எங்கள வச்சே காமெடியா.... நல்லாருக்குங்க சகோ :))

  மாணவன் சிம்புன்னே போட்ருக்கலாம் சார் வேண்டாம் நான் சின்ன பையன்தான்... :))

  நன்றிங்க சகோ

  ReplyDelete
 8. அருமை மேடம் அருமை
  3 ஓட்டு

  ReplyDelete
 9. காமெடிகள் அருமை..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. கவிதை வீதி தங்களை அன்போடு அழைக்கிறது..

  ReplyDelete
 11. //ரெம்ப நல்லதா போச்சு...ராசா மாதிரி இருந்தாத்
  தானே இப்போ இருக்கிற விலைவாசிக்கு
  கட்டுப்படி ஆகும்.
  // நக்கல்ஸ் அருமை, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. ஹா..ஹா எல்லாம் சூப்பர்....

  ச்சே..ஒரு வாரம் ஒரே டென்சன் சிஸ்ட்டர்,அதான் வலைப் பக்கம் வர முடியலை.தெரியாத்தனமா என் சிஸ்ட்டர் வீட்டிற்கு அல் அயனுக்கு போயிட்டு நான் பட்டப் பாடு இருக்கே ..சொல்லவே முடியாது அவ்வளவு குளிரு காலையில் வாக்கிங் போனால் போதும் நடு வழியிலியே ஐஸா போகிடுவோம் அப்படியொரு குளிரு.

  வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 13. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் ஒரு வாரகாலமாக பேச்சுவார்த்தை இல்லை.... அதனால் ஒருவருக்கொருவர் தங்கள் தேவைகளை சீட்டில் எழுதிவைத்துத் தெரிவித்துக்கொண்டு செயல் படுவார்கள். அப்படி எழுதி தெரிவிக்கும் பாணியில் மனைவியானவள் நன் என் அம்மா வீட்டுக்குப் போகிறேன் திரும்பிவர 10 நாள் ஆகும் என்று எழுதி வைத்தாள்.
  அதற்க்கு கணவன் எழுதித்தெரிவித்த பதில் மாற்று ஏற்பாடு செய்துவிட்டு போகவும்.

  மிக்க நன்றி. நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
 14. நகைச்சுவை கலக்கல்.

  ReplyDelete
 15. மோதிரம்,மணிக்கூடுன்னு எல்லாமே நகைச்சுவையா இருக்கு ஆயிஷா !

  ReplyDelete
 16. இருக்குறதிலேயே ஆயில் - டிரைவர் ஜோக் தான் செம சூப்பர்... புதுசா இருந்துச்சு...

  ReplyDelete
 17. நான் செல்லம்மா பேசுரேன் ஹா..ஹா.. :-)))))))))

  ReplyDelete
 18. எல்லா ஜோக்ஸ்சும் சிரிக்க வச்சதுங்க..

  ReplyDelete
 19. நல்ல நகைச்சுவை. அருமையான பதிவு ..
  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 20. நம்ம மாணவன் சிம்பு சார் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை
  தருவீங்களா சார்

  நம்ம வாத்தியார் கருண் சார் : தரமாட்டேன். ஏன் ?

  நம்ம மாணவன் சிம்பு சார் : நான் ஹோம் ஒர்க் செய்யலை சார். ///
  படித்தேன் அதுக்கு என் மாணவனே பதில் சொல்லிட்டாரேன்னு விட்டுட்டேன்..

  ReplyDelete
 21. எல்லா நகைச்சுவையும் மிக அருமைங்க

  ReplyDelete
 22. ஆண : ஹலோ யார் பேசறது ?

  பெண் : நான் செல்லம்மா பேசுறேன் .

  ஆண : நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசறோம் ..
  யாருன்னு சொல்லும்மா ...
  //
  இது மற்றதை விட கூடுதல் நகைச்சுவைங்க...

  ReplyDelete
 23. இந்த பத்துமே முத்தான ஜோக்குகள். படித்தேன். சிரித்தேன். பதிவுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 24. //செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை
  தருவீங்களா சார்....//
  super jokes!
  Enjoyed all the jokes.

  ReplyDelete
 25. அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. எல்லா ஜோக்-ஸும் நல்லா இருக்குங்க. அந்த ராசா ஜோக் குபீர் சிரிப்பு.

  ReplyDelete
 27. அருமையான நகைச்சுவைகள்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

  ReplyDelete
 28. ஆயிஷா..எல்லா ஜோக்ஸ் ம் செம க்ளாஸ்...

  ReplyDelete
 29. ஆயிஷா! பின்னுறீங்க!

  ReplyDelete
 30. ஆயிஷா ஜோக் எல்லாமே சூப்பர்மா. வாய் விட்டு நல்லா சிரிச்சேன்.

  ReplyDelete
 31. ரெண்டாவது ஜோக் செம டாப்!!

  நல்ல பகிர்வு ஆயிஷாக்கா. நன்றி.

  ReplyDelete
 32. செம கலக்கல் ஜோக்ஸ்

  ReplyDelete
 33. ஹஹஹா சூப்பர்

  ReplyDelete
 34. உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது வருகை தரவும்.
  http://blogintamil.blogspot.com/2011/02/6-sunday-in-valaichcharam-rahim-gazali.html

  ReplyDelete
 35. எல்லா ஜோக்ஸுமே நல்லாருந்தது...எங்க புடிச்சீங்க;)...கணவரோடு சேர்ந்து நிஜமாவே வாய்விட்டு சிரிச்சாச்சு...பகிர்ந்ததுக்கு நன்றி.

  ReplyDelete
 36. //ஒருவன் : என்னுடைய அகராதியில் முடியாது என்கிற வார்த்தையே கிடையாது.
  மற்றொருவன் : இப்ப சொல்லி என்ன பிரயோசனம், அகராதியை வாங்கும் போது பார்த்து வாங்கியிருக்கணும்.//

  !!! அந்த அகராதி வாங்குனது நீங்கதான?

  ReplyDelete
 37. எல்லாமே நல்ல இருக்குங்க

  தொடருங்கள்.

  ReplyDelete
 38. செம்ம செம்மா சிரிப்ப்ப்ப்ப்ப்ப்பு போங்க

  ReplyDelete
 39. முதலே ஒரு தடவ படிச்சிட்டே,இப்ப இரண்டாவது தடவை

  ReplyDelete
 40. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

  http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

  ReplyDelete
 41. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

  http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

  ReplyDelete
 42. செம கலக்கல்:) Enjoyed!

  ReplyDelete
 43. செம கலக்கல்.அடுத்த பதிவை
  ஆவலுடன் எதிர்பார்கிறோம்

  ReplyDelete
 44. உங்கள் அனைவருடைய வருகைக்கும், கருத்துக்கும்,

  அன்புக்கும் ரெம்ப ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை

  தாருங்கள்.

  ReplyDelete
 45. நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
 46. Good orticle sister. cheer up.
  azifair-sirkali.blogspot.com

  ReplyDelete
 47. //மாதேவி சொன்னது…
  நல்ல நகைச்சுவை..//

  நன்றி மாதேவி

  ReplyDelete
 48. //AZIFAIR-SIRKALI சொன்னது…

  Good orticle sister. cheer up.
  azifair-sirkali.blogspot.com//

  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ

  ReplyDelete