26 September 2011

சிரியுங்கள... சிரியுங்கள... சிரியுங்கள...


                                 
                                                  
பயணி  -1 :     என்ன   சார்   திடீர்னு   ரயிலு   நின்னுடுச்சு           

பயணி  -2 :     டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.

பயணி  -1 :    எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது  தடுமாறி    கீழே   விழும்னு நினைச்சேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவர்     :   பேஷண்ட்டோட நெஞ்சுல பண்ண வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டாரு டாக்டர்!
 
மற்றொருவர்:   "மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்ன்னு சொன்னாங்க. அதுக்காக இப்பிடியா?'          

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வந்தவர்:     எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க? 


 ஆசிரியர்:    வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு சொன்னால், கல் உப்புக்கா, தூள் உப்புக்கான்னு கேட்கிறானே!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அவர் :      நேத்து    உங்க   காருக்கு   எப்படி   Accident   ஆச்சு..?


இவர் :      அதோ,  அங்கே   ஒரு   மரம்  தெரியுதா..?


அவர் :      தெரியுது...


இவர் :      அது நேத்து எனக்கு தெரியலை..!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
தோழி : 1:   உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
                      மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார்   ஏண்டி


தோழி :2 :     ஓ   அதுவா   நான்   மேக்கப்பை   கலைத்தது   தான்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அம்மா...      இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு
                       ஒழுங்காக இருக்காங்களோஅவங்களுக்கு
                       நானொரு பரிசு தரப்போறேன்

பிள்ளைகள்....   போம்மாஇந்த விளையாட்டுக்கு நாங்கள்
                               வரவில்லை எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


டா‌க்ட‌ர் :  உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி       சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.


நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


டீச்சர்         :    உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?


மாணவன்:    96 பேர்...


டீச்சர்:            என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?


மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என்  கூட  பிறந்தவங்களை  சொன்னேன்  ...


டீச்சர்:         ?????


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


(டிவி ஷோ ரூம் ஒன்றில்)


விற்பனையாளர்  : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி

வாங்குபவர்   :          நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.


பொண்டாட்டி:   என்னங்க, இந்த நேரத்துல...

புருஷன்          :   ஒரு அதிசயம் நடந்துருச்சிடி.. 

பொண்டாட்டி:   என்ன  அதிசயம்?


புருஷன்   :   ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே    லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா? 


பொண்டாட்டி : அறிவுகெட்ட  முண்டம்   தூக்க  கலக்கத்துல  பாத்ரூம்ன்னு  நினைச்சி  பிரிட்ஜ  திறந்து  ஒண்ணுக்கு  இருந்துட்டு  கதை  சொல்றியா, மூடிகிட்டு படு..


புருஷன் :  !!!!!!!?????????????? 

  உங்கள்  சகோதரி                                                                                         

                                                   

50 comments:

 1. சூப்பர் காமடி

  ReplyDelete
 2. ஒரே சிரிப்பு தான் !
  அந்த கடைசி ஜோக் ரொம்ப டாப் !!

  ReplyDelete
 3. சிரித்தேன்...
  சிரித்தேன்...
  சிரித்தேன்...

  சிரியுங்கள - என்பதை
  சிரியுங்க'ள்'
  என்று மாற்றுங்கள்.

  நகைச்சுவை இரசித்தவை 16:
  http://nizampakkam.blogspot.com/2011/09/16.html

  ReplyDelete
 4. காலையில் நல்லா சிரித்தேன் .எல்லா ஜோக்ஸும் சூப்பர்

  ReplyDelete
 5. ஹா ஹா சூப்பர்ர்,ரசித்தேன்....

  ReplyDelete
 6. எல்லாம் கலக்கல்... ஹா... ஹா... ஹாஹாஹா...

  ReplyDelete
 7. ஆயிஷா...செம காமெடி.சூப்பர் ஜோக்ஸ்.

  ReplyDelete
 8. அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?

  இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

  அவர் : தெரியுது...

  இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!//

  ஹா ஹா ஹா ஹா அண்ணன் நேற்று நல்லா மப்பு போல, ரசிச்சி சிரிச்சேன்....

  ReplyDelete
 9. அனைத்தும் ரசிக்கும் படியான நகைச்சுவைகள்... அருமை..

  ReplyDelete
 10. //போம்மாஇந்த விளையாட்டுக்கு நாங்கள்
  வரவில்லை எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார் //


  என் வீட்டு ரகசியம் உங்களுக்கு யாரு சொன்னது ஹி...ஹி. :-))

  ReplyDelete
 11. நல்ல ஜோக்ஸ் சிலது சிந்திக்கவும் இருக்கு :-)

  ReplyDelete
 12. அம்மாடி.... கடிதாங்கமுடியலை
  நன்றாக உள்ளது

  ReplyDelete
 13. சிரிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை பதிவு.

  அம்மா.
  இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு
  ஒழுங்காக இருக்காங்களோஅவங்களுக்கு
  நானொரு பரிசு தரப்போறேன்


  பிள்ளைகள்....
  போம்மாஇந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்
  இது எங்கேயோ கேட்ட மாதிரி தெரிகிறதே.

  ReplyDelete
 14. நல்லா இருக்குங்கோவ்!

  ReplyDelete
 15. //naan சொன்னது…

  சூப்பர் காமடி//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 16. //வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

  ஒரே சிரிப்பு தான் !
  அந்த கடைசி ஜோக் ரொம்ப டாப் !!//  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 17. //NIZAMUDEEN சொன்னது…

  சிரித்தேன்...
  சிரித்தேன்...
  சிரித்தேன்...

  சிரியுங்கள - என்பதை
  சிரியுங்க'ள்'
  என்று மாற்றுங்கள்.

  நகைச்சுவை இரசித்தவை 16:
  http://nizampakkam.blogspot.com/2011/09/16.html//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ

  //நகைச்சுவை இரசித்தவை 16://

  இதுவும் சூப்பர் காமெடி .

  ReplyDelete
 18. //angelin சொன்னது…

  காலையில் நல்லா சிரித்தேன் .எல்லா ஜோக்ஸும் சூப்பர்//

  எல்லோரும் சிரிக்கத்தானே இந்த பதிவு ஏஞ்சலின் .
  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. //S.Menaga சொன்னது…

  ஹா ஹா சூப்பர்ர்,ரசித்தேன்....//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா.

  ReplyDelete
 20. //சே.குமார் சொன்னது…

  எல்லாம் கலக்கல்... ஹா... ஹா... ஹாஹாஹா...//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 21. //ஸாதிகா சொன்னது…

  ஆயிஷா...செம காமெடி.சூப்பர் ஜோக்ஸ்.//

  நல்லா சிரிச்சீங்களா ?

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 22. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?

  இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

  அவர் : தெரியுது...

  இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!//

  ஹா ஹா ஹா ஹா அண்ணன் நேற்று நல்லா மப்பு போல, ரசிச்சி சிரிச்சேன்....//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 23. //சிநேகிதி சொன்னது…

  அனைத்தும் ரசிக்கும் படியான நகைச்சுவைகள்... அருமை..//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி பாய்சா.

  ReplyDelete
 24. //ஜெய்லானி சொன்னது…

  //போம்மாஇந்த விளையாட்டுக்கு நாங்கள்
  வரவில்லை எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார் //


  என் வீட்டு ரகசியம் உங்களுக்கு யாரு சொன்னது ஹி...ஹி. :-))//


  சகோ ரகசியத்தை மாத்தீட்டீனகளே

  கடைசி காமெடிதான் உங்கள் வீட்டு இரகசியமாமே ஹா ஹா ஹா

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 25. //ஜெய்லானி சொன்னது…

  நல்ல ஜோக்ஸ் சிலது சிந்திக்கவும் இருக்கு :-)//

  நன்றி சகோ

  ReplyDelete
 26. //அம்பலத்தார் சொன்னது…

  அம்மாடி.... கடிதாங்கமுடியலை
  நன்றாக உள்ளது//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 27. //abul bazar/அபுல் பசர் சொன்னது…

  சிரிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை பதிவு.

  அம்மா.
  இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு
  ஒழுங்காக இருக்காங்களோஅவங்களுக்கு
  நானொரு பரிசு தரப்போறேன்


  பிள்ளைகள்....
  போம்மாஇந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்

  இது எங்கேயோ கேட்ட மாதிரி தெரிகிறதே.//

  எல்லோர் வீட்லேயும் அப்பாக்கள் தான் ஜெயப்பர்கள்
  உங்கள் வீட்லேயும் கூட இருக்கலாம்

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 28. //ChitraKrishna சொன்னது…

  நல்லா இருக்குங்கோவ்!//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா

  ReplyDelete
 29. ஜோக்ஸ் 1.,3,4,5,படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன். அடடா காயம் படும் அளவுக்கு இல்லீங்க..:))

  ReplyDelete
 30. //சகோ ரகசியத்தை மாத்தீட்டீனகளே

  கடைசி காமெடிதான் உங்கள் வீட்டு இரகசியமாமே ஹா ஹா ஹா //


  இதுவும் தெரிஞ்சுப்போச்சா ..!!!அவ்வ்வ்வ்வ் :-)))

  ReplyDelete
 31. //தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

  ஜோக்ஸ் 1.,3,4,5,படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன். அடடா காயம் படும் அளவுக்கு இல்லீங்க..:))//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. //ஜெய்லானி சொன்னது…

  //சகோ ரகசியத்தை மாத்தீட்டீனகளே

  கடைசி காமெடிதான் உங்கள் வீட்டு இரகசியமாமே ஹா ஹா ஹா //


  இதுவும் தெரிஞ்சுப்போச்சா ..!!!அவ்வ்வ்வ்வ் :-)))//

  ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 33. //யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

  கடைசி அருமை//

  உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 34. luvly blog of good posts and nice joke.I come from South Tamilnadu.following u.

  ReplyDelete
 35. //MyKitchen Flavors-BonAppetit!. சொன்னது…

  luvly blog of good posts and nice joke.I come from South Tamilnadu.following u.//

  thanks for your coming and for your comments

  ReplyDelete
 36. ஹா ஹா மரம் விழுந்த காமெடிய நெனச்சு நெனச்சு நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்... சூப்பர்

  ReplyDelete
 37. மரம் தெரியுதா... ஹா ஹா இதுல உங்க ஹியுமர் சென்ஸ் தெரியுது... இதுவும் சூப்பர்

  ReplyDelete
 38. எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?.//

  டாக்டர் உயிரோட இருக்காராஆஆஆஆஅ? :-)))))

  ReplyDelete
 39. கடைசி காமெடி கலக்கல்.. ஹய்யோ என்னால சிரிப்ப அடக்கமுடியலைங்க.... சோகத்துடன் வந்த என்னை பயங்கரமா சிரிக்க வச்சுட்டீங்க...... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 40. இன்ட்லிய இணைச்சு all voted

  ReplyDelete
 41. கல கல கலக்கல் பதிவு நண்பா

  ReplyDelete
 42. பூவாய் மலர்ந்து சிரிக்கவைத்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 43. //மாய உலகம் சொன்னது…

  ஹா ஹா மரம் விழுந்த காமெடிய நெனச்சு நெனச்சு நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்... சூப்பர்//

  சகோ காயம் ஏதும் படவில்லை தானே

  ReplyDelete
 44. //மாய உலகம் சொன்னது…

  மரம் தெரியுதா... ஹா ஹா இதுல உங்க ஹியுமர் சென்ஸ் தெரியுது... இதுவும் சூப்பர்//

  nandri sako

  ReplyDelete
 45. //மாய உலகம் சொன்னது…

  எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?.//

  டாக்டர் உயிரோட இருக்காராஆஆஆஆஅ? :-)))))//

  தெரியலையே சகோ.

  ReplyDelete
 46. //மாய உலகம் சொன்னது…

  கடைசி காமெடி கலக்கல்.. ஹய்யோ என்னால சிரிப்ப அடக்கமுடியலைங்க.... சோகத்துடன் வந்த என்னை பயங்கரமா சிரிக்க வச்சுட்டீங்க...... வாழ்த்துக்கள்//


  உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.


  //மாய உலகம் சொன்னது…

  இன்ட்லிய இணைச்சு all voted//

  நன்றி சகோ. தொடர்ந்து வருகை தாருங்கள்

  ReplyDelete
 47. //Mahan.Thamesh சொன்னது…

  கல கல கலக்கல் பதிவு நண்பா//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 48. //இராஜராஜேஸ்வரி சொன்னது…

  பூவாய் மலர்ந்து சிரிக்கவைத்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

  உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

  ReplyDelete
 49. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete