23 November 2011

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:


* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.


* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.


* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.


* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.


* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.


* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.


* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.


* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.


பழங்கள் சாப்பிடும் முறை:
 
* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.


* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

  
* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.


* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.  அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.


* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.


* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.  அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.


                                                                       
                 
            

04 November 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றமாம் !
ஆசியாவின்  2-வது  பெரிய  நூலகம் என்று  பெயர்  பெற்ற,சென்னை கோட்டூபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் விரைவில் குழந்தைகள்  நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு, தமிழர்களின் நெஞ்சங்களில் அதிர்ச்சி நெருப்பை அள்ளிக்கொட்டியிருக்கிறது.                                                                                 
         
                                                
கலைஞரால் உருவாக்கப்பட்டது என்னும் ஒரே காரணத்திற்காக, அதனை இழுத்து மூடிவிட வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு.  புதிய  சட்டசபை  கட்டிடம்  கட்டியது  கருணாநிதி  என்பதற்காக  அதை  பயன்படுத்தாமல்  விட்டார்.ஏற்கனவே கோட்டையில் இருந்து அகற்றப்பட்ட, புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்திருந்த செம்மொழி ஆய்வு நூலகத்தின் நூல்கள் எல்லாம் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியவில்லை.               
                
            
 5 ஆயிரம் பேர் அமர்ந்து படிக்கக் கூடிய ஒரு நூலகத்தை, அதுவும் ஆட்சிக்கு வந்து 8 மாத காலத்தில், அப்படியே குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவோம் என்று இன்றைய அதிமுக அரசு அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது. இது எந்த வகையிலும் ஏற்புடையது ஆகாது.

  
தமிழக அரசின் இந்த தவறான முடிவிற்கு கல்வியாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள், மாணவர்கள் இளைஞர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

  
தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதா அரசால் சிதைக்கப்படுகிறது.  இது  மிகவும்  கண்டிக்கத்தக்கது .இது  மக்கள்  சொத்து  என்பதை  உணரவேண்டும். 


நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் விவரம்:

முதல் தளம் இதழ்கள், குழந்தைகள் பிரிவு, இரண்டாவது தளம்   தமிழ்ப் புத்தகங்கள்,

 மூன்றாவது தளம்   கணினி அறிவியல், நூலகத் தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், சமூகவியல், மதங்கள், புள்ளியியல், அரசியல் அறிவியல்.


 நான்காவது தளம்   பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், இலக்கியம்.


 ஐந்தாவது தளம்   பொது அறிவியல், கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மருத்துவம்.


 ஆறாவது தளம்   பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டடக் கலை, நுண் கலை, விளையாட்டு.


 ஏழாவது தளம்   வரலாறு, புவியியல், சுற்றுலா, பயண மேலாண்மை.


 எட்டாவது தளம்   நிர்வாகப் பணிகள் தொடர்பான பிரிவுகள்.

 
இவை தவிர திறந்தவெளி அரங்கம், பிரமாண்ட உள் அரங்கம், சிறிய நிகழ்ச்சிகள் நடத்த கருத்தரங்க அறை, குழந்தைகளுக்கான விளையாட்டுகளுடன் கூடிய படிக்கும் பிரிவு என முழுக்க முழுக்க நூலகத்துக்காக எழுப்பப்பட்டது


ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.                                                                              


                                                                           
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக முதல் அமைச்சருக்கு நல்ல ஒரு அறிவுரையை வழங்கினார்கள்:
இதுகுறித்து பேராசிரியர் மார்க்ஸ் கூறுகையில்,

கல்வி சூழல் நிரம்பிய இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக முதல் அமைச்சருக்கு நல்ல ஒரு அறிவுரையை வழங்கினார்கள். கல்வி சார்ந்த விஷயங்களில் உங்களுடைய அரசியல் பகை உணர்ச்சிகளையெல்லாம் காட்டாதீர்கள் என்று குறிப்பிட்டார்கள். ஆனாலும் கூட தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ச்சியாக கல்வி சார்ந்த விஷயங்களில் தொடுக்கக்கூடிய ஒரு தாக்குதலை பார்க்கும்போது தான், இவ்வளவு பகை, இந்த பகை என்பதை சாதாரணமாக முந்தையை ஆட்சி செய்த அத்தனையையும் மாற்றி அமைக்க வேண்டும் என்கிற பகை என்கிறது, கிட்டதட்ட ஒரு இனப் பகை போன்று தோன்றுகிறது என்றார்.
 
                       

18 October 2011

தமிழ்மணத்தின் பெயரிலியே ......

                                                                                                                                                             

                                                                                                                                         
கடந்த   சில   நாட்களுக்கு  முன்   டெரர்கும்மி   தளத்தில்  சகோ  ராமசாமி  ஒரு   பயோடேட்டா  போட்டு, அதில்  நீங்கள்  போட்ட  பின்னூட்டம்  தான்  இத்தனை  பிரச்சனைக்கும்  காரணம்.


ராமசாமி  அவர்களின்  பதிவிற்கு  பின்னூட்டமிட்ட,   தமிழ்மணத்தின்  நிர்வாகியாகிய  நீங்கள், ராமசாமி  பதிவுக்கு  பதில்  சொல்வதை  விட்டுவிட்டு   "சாந்தியும்  அவ  அக்காவும்  சமாதானியும்  உங்களுடன்  கூடிய..சே!  பதிவு  தோஷம் "   என்ற  வார்த்தையை  பயன் படுத்தி  இருக்கிறீர்கள்.   
             
               
இஸ்லாமியர்கள்  ஒருவரை  ஒருவர்  சந்தித்து  கொள்ளும்  போது  அஸ்ஸலாமு  அலைக்கும்    என்று  சலாம்  சொல்லி கொள்வோம். அதை  நீங்களும்   அறிந்ததே!      

அதன்  பொருள்  "உங்கள்  மீது  சாந்தியும், சமாதானமும்  உண்டாகட்டும்"         
என்பதாகும். அந்த  வார்த்தையை  அவமதிக்கும்  விதமாக  "சாந்தியும்  அவ  அக்காவும்  சமாதானியும்  உங்களுடன்  கூடிய..சே!  பதிவு  தோஷம் "  என்று  அருவெறுக்க  தக்க  வார்த்தையை  பயன்படுத்தி  இருக்கிறீர்கள்.        


பெண்களை    கேலி  செய்யும்  விதமாகவும்   அமைத்துள்ளன. தாங்கள்  எழுதியதை  வைத்து   பார்க்கும்  போது  தமிழ்மணத்தை  நிர்வகிக்கும்  ஆணாதிக்கவாதி  என்ற  -------  எழுதியுள்ளீர்கள்.    


இஸ்லாமியர்களைகளையும்,  இஸ்லாத்தையும்   கொச்சைபடுத்த  தான்   அந்த வார்த்தையை   பயன் படுத்தி  இருக்கீறீர்கள் .  இப்படி  ஒரு  வார்த்தையை  பயன்படுத்தியது    எந்த வகையிலும்  எங்களால்  ஏற்று கொள்ள முடியாது.  


ஒரு  நாலாந்தர   மனிதனை  போல  நாகரீகம்  இல்லாமல்  எழுதிய   அந்த  பின்னூட்டம்  எத்தனை  பேர்  உள்ளங்களை  வேதனை  படுத்தி  இருக்கும்  என்பதை   என் சகோதர  சகோதரிகள்  எழுதிய  பதிவுகளிருந்து  நீங்கள்  அறிந்திருப்பீர்கள்.


கட்டணசேவை  என்று  என்று  நீங்கள்  அடிக்கும்  கொள்ளையை  தான்  ராமசாமி  அவர்கள்  பதிவில்  வெளியிட்டு  இருந்தார். அவருக்கு  பதில்  சொல்வதை   விட்டுவிட்டு   இஸ்லாமியர்கள்  மீதும்,இஸ்லாத்தின்  மீதும்
பாய்வதன்  நோக்கம்  என்ன ?    


நீங்கள்  பயன்படுத்தி  இருக்கும்  இந்த  வார்த்தைகளிருந்து  நீங்கள் "ஒரு  தரம்  தாழ்ந்த  மனிதர்"  என்பதை  அழகாக  சொல்லி  இருக்கிறீர்கள். உங்களை  நீங்களே  அசிங்கப்  படுத்தி  கொண்டு  விட்டீர்கள். மல்லாக்க  படுத்து  கொண்டு   எச்சில்  துப்பினால்   அது நம்  மீது  படும்  என்று  தெரிந்தே  செய்ததன்  விளைவு  தான்  இது.


பதிவர்களை  வைத்துதான்  திரட்டிகள்  பயன் அடைகின்றது . திரட்டிகளை  வைத்து  பதிவர்களுக்கு  எந்த பயனும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் 
நீங்கள்  பணம்   பார்ப்தற்கு எங்களை  போன்ற  பதிவர்களை  பயன்படுத்தி  கொள்கிறீர்கள். அது  தானே  உண்மை 


காலங்களில்   பதிவுகள்  எப்படி  இருந்தாலும்  சேர்த்துப்போம்  என்று  கூறி பதிவர்களை  இழுப்பது.  பின்னர்  ஒரு அளவுக்கு  முன்னேறிய  பிறகு  ஏறிவந்த ஏணியை  எட்டி  உதைப்பது.  கேடு  கெட்ட  இந்த  செயலை  தான்  இப்போது செய்து  இருக்கிறீர்கள்.


பொறுப்பான   இடத்தில்  இருக்கும்  நீங்கள்  ஒரு ............போல   எங்களை  கேலி செய்ததை    எவராலும்  ஏற்றுக் கொள்ளமுடியாத  ஒன்று.  சில  மாற்றுமத  சகோதரர்  பதிவிலும்  நீங்கள்  அறிவீர்கள்.


நடந்த   சம்பவங்களுக்கு   மனம்  வருந்தி  மன்னிப்பு  கேட்டு  இந்த  பிரச்னைக்கு   ஒரு  முற்று புள்ளி  வையுங்கள். ஏனென்றால்  இதை  ஆரம்பித்து   வைத்தது  நீங்கள்  தானே. நீங்கள்  தான்  முடித்தும்  வைக்க  வேண்டும். அதுதான்  தமிழ்மணத்திற்கும், உங்களுக்கும்  நல்லது.


நம்பிக்கையுடன்  காத்திருக்கிறோம் .காலம்  தாழ்த்தாமல்  முடிவெடுங்கள்.


==========================================================================

 
///"சாந்தி, சமாதானி" என்பவர்கள் பெண்கள் என்பதாக நான் பதிந்ததால் ("சாந்தி அவ அக்கா சமாதானி") பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்கமென்ற கருத்தினை கருதப்படலாம் என்று சுட்டிக்காட்டிய பெண்பதிவர்கள் இருவரிடமும் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன்.///


என்று  மேற்கண்ட  அவருடைய    தளத்தில்  எழுதி   உள்ளார்கள்  


மிக்க  நன்றி   பெயரிலி  என்ற   சகோ  இரமணிதரன்  அவர்கள்   

13 October 2011

புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி                                                                         

சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது.  மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?  ஏன் அடிக்கிறீர்கள்  என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.


பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.  சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம்.  நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்படி திட்டுவார்கள். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல.  நம்மை மையப்படுத்தி இருக்கிறது.  முதலில் அதை உணர்வோம். 


அடுத்து குழந்தை தன்னையோ,  மற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும்.  சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும்.  விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்க வேண்டும். 

 
குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது.  சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும்.  இப்படி  ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு.  முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.  பொறுமை யின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன.  அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.  

 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.  இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா?  இப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது.  உதாரணமாக 

 
8 மாதக்  குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார்.  அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு, மகிழ்ச்சி.  தன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்தி.  ஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு  என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.

 
 
இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது.  ஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது.  வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார்.  ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது.  இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.
  

இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று நினைப்பார்கள். 


 
இதைப் பார்க்கும்போது, கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல.  அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்.  ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல.  அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு.  உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள்.  அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு.  நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள்.  ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.  ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்ற வரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல.  நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக்குள்ளாகக் கூடாது.அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது.  அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா?  பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாம்.  நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால், வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான்.

 
இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான்.  நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள்.


ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும்.  நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது.  தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா.
 

குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள்.  நல்ல பலன்தரும் விதைகளாக, விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும்.   பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசி வளர்க்க வேண்டும்.  

 
உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், நீ எதற்குத்தான் லாயக்கு.. நீ பொறந்ததே வேஸ்ட் என்று திட்டிக்கொண்டே இருந்தால்,  அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக் குள்ளேயே தங்கிவிடும்.  சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே  அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும். 
பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும்.  
 

எனவே, மனதளவில் பாதிப்பிற்குள்ளாக்கும் இம்மாதிரியான சொற்களை பெற்றோர்கள் பேசுவது குற்றமாகவே கருத வேண்டும். இப்படிப் பாதிக்கப்பட்ட  குழந்தைகள் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.
 

கண்டிப்பது என்பது வேறு, தண்டிப்பது என்பது வேறு.
கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது.
 

தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக்குள்ளாக்குவது.  

 

ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால், அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும்.  மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்துவிடக்கூடாது.
 

குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது.  தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். 

 
பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை  குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள்.  அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.


 


06 October 2011

கருணை காட்டுங்கள்....                                                                                   


ஆப்பிரிக்க   முஸ்லிம்  நாடான   சோமாலியாவில்  கடும்  வறட்சி  நிலவுகிறது.
சுமார்  40  இலட்சம்  பேர்  பஞ்சத்தால்   பட்டினி  கிடக்கிறார்கள்.  இப்படியே   இது   நீடித்தால்  இன்னும்  சில  மாதங்களில்  ஏழரை   இலட்சம்  பேர்   இறந்து  விடுவார்கள். சோமாலியாவில்   உணவு,  குடி நீர், குடியிருப்பு, ஆரோக்கியம்
என  அத்தனையுமே   கேள்வி  குறிதான்.


பால்   சுரக்க  முடியாத  தாய்மார்கள்  இங்கு தான்  வாழ்கிறார்கள். குழந்தைகள்  முற்றிலும்  உடல்  வளர்ச்சி  குன்றியுள்ளனர்.  கல்வி  வேலை  வாய்ப்பு  என்பது   அம்மக்களுக்கு  எட்டாக்கனியே.  சுகாதாரமான  உணவு, குடி  நீர்,மருந்து  இல்லாததால்   தொற்றுநோய்  பரவுகிறது.   நாளொன்றுக்கு  இரண்டு   முதல்  ஆறு பேர்  பட்டினிக்கு  பலியாகி  வருகின்றனர்.


இந்த   சூழ்நிலையில்  பிற  நாடுகளில்   முஸ்லிம்கள்  தேவைக்கு  அதிகமான  சொத்து   சுகங்களுடன்  வாழ்ந்து  வருகின்றனர்.  அணிகலன்களாகவும், ஆடம்பர   தேவைக்காகவும், பிரம்மாணடமான   பார்வைக்காகவும்   முஸ்லிம்  பணக்கார   நாடுகளில்  பணம்  தண்ணீராக   செலவிடப்படுகிறது. உயரமான   கட்டிடங்களை   எழுப்ப  முஸ்லிம்  நாடுகளில்  போட்டி  நடக்கிறது.  செல்வத்தில்   சிறந்த  முஸ்லிம்  நாடுகளின்  பார்வைக்கு, சோமாலியா  நாட்டின்  வறட்சி   தெரிவதில்லை.


சோமாலியா  போன்ற  முஸ்லிம்  நாடுகளிருந்து   ஏழ்மையை  விரட்ட  சர்வேதேச   அளவில்  முஸ்லிம்  நாடுகள்  அளவிலும், தொண்டு  நிறுவனங்கள்   மூலமாகவும், தனிநபர்   முயற்சிக்காகவும்   சர்வேதேச  அளவில்  நிதி  திரட்டும்  திட்டம்  கொண்டு  வரவேண்டும்.


நிதியை  முறையாக  வசூலித்து   பஞ்சம், பசி,பட்டினி  என்று  கொடும்  வதைக்கு  ஆளாகி  இருக்கும்  சோமாலியா  போன்ற  ஏழை  நாடுகளுக்கு  பகிர்ந்தளிக்க  வேண்டும். இதன்  மூலமாக  சோமாலியா   போன்ற  ஏழ்மை  நாடுகளின்  பஞ்சத்தை   விரட்டியடிக்க  முடியும் !
                                                                                        

                                                    இறைவன்  நாடுவானாக !
                 
                                                
  உங்கள்  சகோதரி


                     


26 September 2011

சிரியுங்கள... சிரியுங்கள... சிரியுங்கள...


                                 
                                                  
பயணி  -1 :     என்ன   சார்   திடீர்னு   ரயிலு   நின்னுடுச்சு           

பயணி  -2 :     டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.

பயணி  -1 :    எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது  தடுமாறி    கீழே   விழும்னு நினைச்சேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவர்     :   பேஷண்ட்டோட நெஞ்சுல பண்ண வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டாரு டாக்டர்!
 
மற்றொருவர்:   "மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்ன்னு சொன்னாங்க. அதுக்காக இப்பிடியா?'          

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வந்தவர்:     எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க? 


 ஆசிரியர்:    வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு சொன்னால், கல் உப்புக்கா, தூள் உப்புக்கான்னு கேட்கிறானே!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அவர் :      நேத்து    உங்க   காருக்கு   எப்படி   Accident   ஆச்சு..?


இவர் :      அதோ,  அங்கே   ஒரு   மரம்  தெரியுதா..?


அவர் :      தெரியுது...


இவர் :      அது நேத்து எனக்கு தெரியலை..!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
தோழி : 1:   உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
                      மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார்   ஏண்டி


தோழி :2 :     ஓ   அதுவா   நான்   மேக்கப்பை   கலைத்தது   தான்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அம்மா...      இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு
                       ஒழுங்காக இருக்காங்களோஅவங்களுக்கு
                       நானொரு பரிசு தரப்போறேன்

பிள்ளைகள்....   போம்மாஇந்த விளையாட்டுக்கு நாங்கள்
                               வரவில்லை எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


டா‌க்ட‌ர் :  உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி       சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.


நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


டீச்சர்         :    உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?


மாணவன்:    96 பேர்...


டீச்சர்:            என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?


மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என்  கூட  பிறந்தவங்களை  சொன்னேன்  ...


டீச்சர்:         ?????


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


(டிவி ஷோ ரூம் ஒன்றில்)


விற்பனையாளர்  : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி

வாங்குபவர்   :          நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.


பொண்டாட்டி:   என்னங்க, இந்த நேரத்துல...

புருஷன்          :   ஒரு அதிசயம் நடந்துருச்சிடி.. 

பொண்டாட்டி:   என்ன  அதிசயம்?


புருஷன்   :   ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே    லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா? 


பொண்டாட்டி : அறிவுகெட்ட  முண்டம்   தூக்க  கலக்கத்துல  பாத்ரூம்ன்னு  நினைச்சி  பிரிட்ஜ  திறந்து  ஒண்ணுக்கு  இருந்துட்டு  கதை  சொல்றியா, மூடிகிட்டு படு..


புருஷன் :  !!!!!!!?????????????? 

  உங்கள்  சகோதரி                                                                                         

                                                   

22 September 2011

மணி மொழிகள் ....


                                                                                                                         
 
நம்  அனைவர்   மீதும்  ஏக  இறைவனின்  சாந்தியும்  சமாதானமும்  நிலவட்டுமாக... ஆமீன்...!
                                                                  

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
 
3. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
 
4. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

5. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

6. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

7. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

8. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

9. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

10. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

11. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

12. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

13. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

14. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

15. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

16. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

17. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

18. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

19. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

20. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

21. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

22. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

23. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

24. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

25. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

26. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

27. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

28. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!


29.சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

  உங்கள்  சகோதரி
                                                                                                                          

15 September 2011

ஸ்வீட்டோடு வருகிறேன்.....

அனைவரும் நலமா? நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்  நிலவட்டுமாக...ஆமீன்...!உங்களை  எல்லாம்  நீண்ட  நாட்களுக்கு  பின்  சந்திப்பதால், ஸ்வீட்டோடு   வந்திருக்கிறேன். பேரு வட்லப்பம். டேஸ்ட் சூப்பரோ சூப்பர்.ஹெல்தியான புட். செய்து   பார்த்துட்டு   எப்படின்னு   சொல்லுங்கோ


                                                                              
                                                                  ட்லப்பம்

தேவையான  பொருட்கள் 


தேங்காய் பெரியது--1
முட்டை ---------------10
சர்க்கரை -------------- 1/2 கி
பாதாம் பருப்பு ---------25 கிராம்
முந்திரி         -----------50கிராம்
திராட்சை    -----------25கிராம்
ஏலக்காய்-------------10கிராம்
பொரி கடலை-------10கிராம்{ஒடச்ச கடலை}


செய்முறை 

முதலில்   தேங்காயை   உடைத்து,  நறுக்கி  மிக்சியில்   போட்டு   அரைத்து  கெட்டியாக  பால்  எடுத்து  கொள்ளவும். {பாலின்  அளவு  முக்கால் லிட்டர்  கெட்டியாக}தண்ணீர்   கூடிவிட்டால் சொதப்பி விடும் .கவனம்.


அதில்  சர்க்கரையை  போட்டு  நன்றாக  கரைத்து  வடிகட்டி வைக்கவும்.


முட்டையை   உடைத்து   மிக்சி  ஜாரில்  ஊற்றி  மிக்சியை  இடது  பக்கம்  சுற்றி, முட்டை  கலவையை     தேங்காய்   பாலில்   ஊற்றவும்.


{பாதம்  பருப்பை  ஊற  வைத்து  மேல்  தோல்  நீக்கி  கொள்ளவும்.}


பாதம் 25கிராம் ,   முந்திரி 25கிராம்,  ஒடச்சகடலை 10கிராம்
ஏலக்காய்  10கிராம்   அனைத்தையும்   மிக்சியில்  நன்றாக  பவுடர்  பண்ணி,
முட்டைபால்  கலவையில்  ஊற்றி  கட்டி  விழாமல்  கலக்கவும்.


இந்த   கலவையை  குக்கருக்குள்   வைக்குமாறு   ஒரு   பாத்திரத்தில்
வைத்து ,  குக்கர்   அடியில்   கொஞ்சம்   தண்ணி   வைத்து . இந்த  பாத்திரத்தை
உள்ளே   வைத்து   வேகவைக்கவும்.  இரண்டு   விசில்   வந்தவுடன்  திறந்து {கொஞ்சம் கொல கொல என்று இருக்கும்  போது} முந்திரி  25கிராம், திராச்சை  25கிராம்   எடுத்து   அதில்  தூவி, திரும்ப   மூடி வேக   வைக்கவும். 6,7   விசில்  வந்தவுடன்  ஆப பண்ணிவிட்டு ,ஏர்  போனவுடன் திறக்கவும்.அல்லது  நைட்  செய்து விட்டு  காலையில் எடுக்கவும்.


சூப்பெரான... சுவையான ... வட்லப்பம்  ரெடி ......

தாராளமாக  10பேர் சாப்பிடலாம். 

உங்கள்  தேவைக்கு  ஏற்ப  அளவை  கூட்டி கொள்ளவும்.

எங்களுடைய  பெருநாளைக்கு {பண்டிகை} கண்டிப்பாக  செய்வோம்.

இதை  யாருலாம்  செய்து  இருக்கீங்க ? சாப்பிட்டு  இருக்கீங்க ?


குறிப்பு :   தேங்காயில்  மேல் இருக்கும்  கருப்பு  தோடை  நீக்கி  விட்டு  பால் எடுத்தால்  வட்லப்பம்  வெள்ளையாக  இருக்கும்.அப்படியே  பால்  எடுத்தால்
கொஞ்சம்  கலர்  கருப்பாகி  விடும். எப்படி  வேண்டுமானாலும்  செய்யலாம். பாதம்  பருப்பு  சேர்ப்பது  உங்கள் விருப்பத்தை  பொறுத்து.

                                                                             
                                                                

06 March 2011

பெண்கள் முன்னேற்றம் !

                                                             வளர்ச்சியா,வீக்கமா ?  


கடத்த  சில  ஆண்டுகளில்  கற்பனை  பண்ணிபார்க்க  முடியாத  அளவில்
பழக்கவழக்கங்களிலும்  சிந்தனைகளிலும், முக்கியமாய்  பெண்கள் நிலையில்  பெரும்  மாற்றங்கள்  வந்துள்ளன. இந்த  மாற்றங்கள் வளர்ச்சியா, வீக்கமா?  உறுதியாய்  பெருமளவில் வளர்ச்சிதான்... ஆனால், ஆங்காங்கே  வீக்கங்களும்  தோன்றி  உள்ளதை  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.அறியாப்பருவத்தில்  திருமணம்  நடந்து, கல்வி  அறிவு  மறுக்கப்பட்டு 
உனக்கென்று  தனியாய்  எந்த  விருப்பு, வெறுப்பும்  இல்லாமல்  வாழப்பழகு 
என்று  காலங்காலமாய்  விதிக்கப்பட்டிருந்த  சட்டங்களை  உடைத்து கொண்டு  பெண்கள்  சமுதாயம்  இன்று  முன்னேறி  உள்ளது.மிக  பெரிய  அளவில்  கல்வித்தகுதியை  பெற்றதுமல்லாமல், ஆண்களில் உலகம்  என்று  முத்திரை  குத்தப்பட்ட  பிரிவுகளான  ராணுவம், காவல்துறை, அரசியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம்  என்று  சகலத்திலும் புகுந்து  இன்றையப்  பெண்  வெற்றிக்கொடி  நாட்டி  வருகிறாள். சில பெண்கள்  லாரி, ஆட்டோ  ஓட்டுவதிலிருந்து   பி.பீ.ஒ.வில்  இரவு  வேலை பார்ப்பது, எக்ஸ்போர்ட்  கம்பெனிகளில்  பணிபுரிவது  என்று  மிக அற்புதமாய்  தங்கள்  செயல்பாடுகளை  விரிவுசெய்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்களிடையே  பரவலாகத்  தன்னம்பிக்கை, சுயமரியாதை  உணர்வுகள் அதிகரித்திருப்பதைக்  கண்கூடாக  காணமுடிகிறது.ஆனால், இந்த  விழிப்புணர்வே  சில  பெண்களிடம்  எல்லை  மீறி வளர்ச்சிக்குப்  பதில்  வீக்கத்தைத்  தரும். நான்  சம்பாதிக்கிறேன், என் வாழ்க்கையை  என்னால்  பார்த்துக்  கொள்ள  முடியும். யாருடைய  தயவும் எனக்குத்  தேவையில்லை, என்று  சில  பெண்கள் பெற்றோரையும், கணவனையும்  குடும்பத்தையும்  தூக்கி  எறியும்  போது  வீக்கத்திற்கு ஆளாகிறார்கள்.கல்லானாலும்  கணவன், புல்லானாலும்  புருஷன்  என்று கண்மூடித்தனமாய்  அடிமைப்பட்டிருப்பது  தேவையே  இல்லை என்றாலும், விட்டு கொடுப்பதும், அனுசரித்துச்  செல்வதும், நாளைக்கு  கண்டிப்பாய் விடியும் என்று  நம்பிக்கையுடன்  வாழ்வதும், வாழ்க்கைக்கு  அர்த்தம் சேர்க்கும்  என்பதை  மறந்து  விட்டால்  எப்படி!வசதியாய்  வாழ  பணம்  அவசியமான  ஒன்று. ஆனால், பணம்  இருந்தால் 
சந்தோஷமாக  வாழ்ந்து  விடலாம்  என்பது  பேதைமை  அல்லவா?
இன்றைய  சமுதாயத்தில்  பலரும்,{ஆண்களையும் சேர்த்துதான்} பணத்தை 
சுற்றி  வாழ்க்கையை  பின்னத்  தொடங்கி  விட்டதை  மனித  நேயத்தின் வீழ்ச்சி.நாம்  வாழ  பணம்  தேவை. கடுமையாக  உழைத்து  சம்பாதிப்பது  மிக அவசியம். ஆனால்,  பந்தங்களையும், பொறுப்புகளையும், கடமையையும் விலையாக  கொடுத்து  வரும்  முன்னேற்றம்  வளர்ச்சி அல்ல...
மனித  நேயத்தையும், மதிப்புகளையும்  வேர்களாகக்  கொண்ட  பெண்கள்
முன்னேற்றம்தான்  ஆரோக்கியமான  வளர்ச்சி.


 


              
                                             அன்புடன் 
                                                      ஆயிஷா.

16 February 2011

சிரி சிரி சிரி.... கல கலவென சிரி ...

காதலன்   :  டார்லிங்  நாம  இரண்டு  பேரும்  மோதிரம்  மாத்திக்கலாமா ?

காதலி      :   வேணாம் 

காதலன்   :   ஏன்  ?

காதலி      :   உன் மோதிரம்  ரெண்டு கிராம். என்  மோதிரம் எட்டு கிராம்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆண   ஹலோ    யார்   பேசறது  ?

பெண்   நான்     செல்லம்மா   பேசுறேன் .

ஆண    :  நாங்க  மட்டும்   என்ன  கோவமாவா  பேசறோம் ..
                   யாருன்னு   சொல்லும்மா ...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டிரைவர்  : என்ன  சார்  கார்  டேங்க்கை  ஓபன்  பண்ணிட்டு  சிரிக்கீறிங்க

கார் ஒனர் மனசு  விட்டு  சிரிச்சா  ஆயில்  கூடும்னு  சொன்னாங்க 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவன்  : என்னுடைய   அகராதியில்   முடியாது   என்கிற வார்த்தையே                       கிடையாது.

மற்றொருவன் இப்ப   சொல்லி  என்ன  பிரயோசனம், அகராதியை
                               வாங்கும்  போது  பார்த்து  வாங்கியிருக்கணும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 பெரியவர்      :   உங்க  மாப்பிள்ளை  பெரிய  இடத்தில   வேலையாமே ?


ம .பெரியவர்   :   ஆமாம்   பீச்ல   சுண்டல்   விக்கிறார் .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பேஷன்ட்    எதுக்கு   டாக்டர்   நர்ஸ்  இடுப்பை   தொடச்  சொல்றீங்க ?

டாக்டர்       :   உங்களுக்கு   கரண்ட் ஷாக்  கொடுகலாமேன்னு    தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நண்பன்       :    சத்து   குறைஞ்சுடுச்சுனு  டாக்டரிடம்  போனேண்டா
 
ம.நண்பன்   :    என்னாச்சுடா 

நண்பன்       :    சொத்து   குறைஞ்ச்சுடுச்சுடா .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மனைவி      :    என்னங்க...உங்க  கைக்கடிகாரம்  ஓடாம நின்னு  போய்  

                          இருக்கு.

கணவன்     :   நேரத்தை  வீணாக்க  கூடாதுன்னு   நான்தான்  நிறுத்தி 
                          வைச்சேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நண்பன்           :  உங்க  பொண்ணுக்கு  ஏதாவது  மாப்பிள்ளை கிடைச்சுதா?

பெண்ணின் அப்பா என்னத்த  சொல்ல   ஒன்னு  இருந்தா,ஒன்னு இல்ல 
                                     ஆமா,  உனக்கு  தெரிஞ்ச நல்ல  மாப்பிள்ளை    
                                         இருந்தா   சொல்லேம்ப்பா .
 
நண்பன்               :       என்  அக்கா  பையனுக்குத்தான்  வரன்  பார்த்துட்டு
                                      இருக்கோம். பையன்   ராசா  மாதிரி  இருப்பான்.


பெண்ணின் அப்பா ரெம்ப  நல்லதா  போச்சு...ராசா  மாதிரி   இருந்தாத் 
                                        தானே  இப்போ  இருக்கிற  விலைவாசிக்கு 
                                      கட்டுப்படி  ஆகும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நம்ம  மாணவன்  சிம்பு  சார்        :   செய்யாத  தப்புக்கு  நீங்க  தண்டனை
                                                                   தருவீங்களா  சார்

நம்ம   வாத்தியார்  கருண்  சார் :   தரமாட்டேன். ஏன் ?

நம்ம  மாணவன்  சிம்பு  சார்       :   நான்   ஹோம்  ஒர்க்  செய்யலை சார்.
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++