06 October 2011

கருணை காட்டுங்கள்....



                                                                                   


ஆப்பிரிக்க   முஸ்லிம்  நாடான   சோமாலியாவில்  கடும்  வறட்சி  நிலவுகிறது.
சுமார்  40  இலட்சம்  பேர்  பஞ்சத்தால்   பட்டினி  கிடக்கிறார்கள்.  இப்படியே   இது   நீடித்தால்  இன்னும்  சில  மாதங்களில்  ஏழரை   இலட்சம்  பேர்   இறந்து  விடுவார்கள். சோமாலியாவில்   உணவு,  குடி நீர், குடியிருப்பு, ஆரோக்கியம்
என  அத்தனையுமே   கேள்வி  குறிதான்.


பால்   சுரக்க  முடியாத  தாய்மார்கள்  இங்கு தான்  வாழ்கிறார்கள். குழந்தைகள்  முற்றிலும்  உடல்  வளர்ச்சி  குன்றியுள்ளனர்.  கல்வி  வேலை  வாய்ப்பு  என்பது   அம்மக்களுக்கு  எட்டாக்கனியே.  சுகாதாரமான  உணவு, குடி  நீர்,மருந்து  இல்லாததால்   தொற்றுநோய்  பரவுகிறது.   நாளொன்றுக்கு  இரண்டு   முதல்  ஆறு பேர்  பட்டினிக்கு  பலியாகி  வருகின்றனர்.


இந்த   சூழ்நிலையில்  பிற  நாடுகளில்   முஸ்லிம்கள்  தேவைக்கு  அதிகமான  சொத்து   சுகங்களுடன்  வாழ்ந்து  வருகின்றனர்.  அணிகலன்களாகவும், ஆடம்பர   தேவைக்காகவும், பிரம்மாணடமான   பார்வைக்காகவும்   முஸ்லிம்  பணக்கார   நாடுகளில்  பணம்  தண்ணீராக   செலவிடப்படுகிறது. உயரமான   கட்டிடங்களை   எழுப்ப  முஸ்லிம்  நாடுகளில்  போட்டி  நடக்கிறது.  செல்வத்தில்   சிறந்த  முஸ்லிம்  நாடுகளின்  பார்வைக்கு, சோமாலியா  நாட்டின்  வறட்சி   தெரிவதில்லை.


சோமாலியா  போன்ற  முஸ்லிம்  நாடுகளிருந்து   ஏழ்மையை  விரட்ட  சர்வேதேச   அளவில்  முஸ்லிம்  நாடுகள்  அளவிலும், தொண்டு  நிறுவனங்கள்   மூலமாகவும், தனிநபர்   முயற்சிக்காகவும்   சர்வேதேச  அளவில்  நிதி  திரட்டும்  திட்டம்  கொண்டு  வரவேண்டும்.


நிதியை  முறையாக  வசூலித்து   பஞ்சம், பசி,பட்டினி  என்று  கொடும்  வதைக்கு  ஆளாகி  இருக்கும்  சோமாலியா  போன்ற  ஏழை  நாடுகளுக்கு  பகிர்ந்தளிக்க  வேண்டும். இதன்  மூலமாக  சோமாலியா   போன்ற  ஏழ்மை  நாடுகளின்  பஞ்சத்தை   விரட்டியடிக்க  முடியும் !
                                                                                        

                                                    இறைவன்  நாடுவானாக !
                 
                                                
  உங்கள்  சகோதரி


                     


28 comments:

  1. "ஏழ்மையை விரட்ட சர்வேதேச அளவில் முஸ்லிம் நாடுகள் அளவிலும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், தனிநபர் முயற்சிக்காகவும் சர்வேதேச அளவில் நிதி திரட்டும் திட்டம் கொண்டு வரவேண்டும்". உங்கள் நியாயமான எண்ணம் ஈடேற இறைவனை வேண்டிக் கொள்வோம்

    ReplyDelete
  2. வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இந்த சோமாலிய மக்களை
    ஐ நா சபையும்,உலக நாடுகளும் உடனடியாக காப்பாற்ற முன் வரவேண்டும்.
    தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அங்கு பட்டினிசாவுகள் கூடிக்கொண்டே போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
    போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. ஸலாம் சகோ.ஆயிஷா பானு,
    மிக நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவு. கடைசி இரண்டு பாராக்களும் மிக மிக அருமை. சோமாலிய மக்கள் சுபிட்சம் பெற துவா செய்வோம்.

    ReplyDelete
  4. //சோமாலியா போன்ற முஸ்லிம் நாடுகளிருந்து ஏழ்மையை விரட்ட சர்வேதேச அளவில் முஸ்லிம் நாடுகள் அளவிலும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், தனிநபர் முயற்சிக்காகவும் சர்வேதேச அளவில் நிதி திரட்டும் திட்டம் கொண்டு வரவேண்டும்.


    நிதியை முறையாக வசூலித்து பஞ்சம், பசி,பட்டினி என்று கொடும் வதைக்கு ஆளாகி இருக்கும் சோமாலியா போன்ற ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இதன் மூலமாக சோமாலியா போன்ற ஏழ்மை நாடுகளின் பஞ்சத்தை விரட்டியடிக்க முடியும் !

    இறைவன் நாடுவானாக !//

    பாவம் அந்த சோமாலியா நாட்டு ஏழை மக்கள். நிச்சயமாக தாங்கள் சொல்லியபடி போர்க்கால அடிப்படையில் ஏதாவது துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் தான். நாமும் பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete
  5. //வியபதி சொன்னது…

    "ஏழ்மையை விரட்ட சர்வேதேச அளவில் முஸ்லிம் நாடுகள் அளவிலும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், தனிநபர் முயற்சிக்காகவும் சர்வேதேச அளவில் நிதி திரட்டும் திட்டம் கொண்டு வரவேண்டும்". உங்கள் நியாயமான எண்ணம் ஈடேற இறைவனை வேண்டிக் கொள்வோம்//


    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  6. //abul bazar/அபுல் பசர் சொன்னது…

    வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இந்த சோமாலிய மக்களை ஐ நா சபையும்,உலக நாடுகளும் உடனடியாக காப்பாற்ற முன் வரவேண்டும்.
    தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அங்கு பட்டினிசாவுகள் கூடிக்கொண்டே போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
    போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.//

    தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  7. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…

    ஸலாம் சகோ.ஆயிஷா பானு,
    மிக நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவு. கடைசி இரண்டு பாராக்களும் மிக மிக அருமை. சோமாலிய மக்கள் சுபிட்சம் பெற துவா செய்வோம்.//


    வ அலைக்கும் சலாம் சகோ
    நம் துஆவை இறைவன் கபூலாக்குவனாக!ஆமீன்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

    பாவம் அந்த சோமாலியா நாட்டு ஏழை மக்கள். நிச்சயமாக தாங்கள் சொல்லியபடி போர்க்கால அடிப்படையில் ஏதாவது துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் தான். நாமும் பிரார்த்தனை செய்வோம்.//


    நம் அனைவருடைய பிரார்த்தனையில் சோமாலியா நாட்டுக்கு இறைவனுடைய நல்லருள் கிடைக்கட்டும்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  9. ஜாதி மதம் பார்க்காமல் மனித நேயம் மிளிர அனைத்து தரப்பினரும் உணர்ந்து உதவ முன் வரவேண்டும்.. இறைவனின் பார்வை இந்த ஏழைகள் பக்கம் திரும்பட்டும் நாம் அதற்காக பிரார்த்தனை செய்வோம்

    ReplyDelete
  10. இறைவன் அடுத்த முறை உலகை படைக்கும் போது இப்படி ஒரு ஏற்ற தாழ்வு இல்லாமல் படைப்பானாக..... இந்த முறை இந்த ஏழைகளின் வாழ்வில் விரைவில் ஒளி தருவானாக.....

    ReplyDelete
  11. Hi Ayisha,Appreciate ur concern for this under-privileged ppl.Luv to join U in voicing my support for the ppl of Somaliya.

    ReplyDelete
  12. நிதியை முறையாக வசூலித்து பஞ்சம், பசி,பட்டினி என்று கொடும் வதைக்கு ஆளாகி இருக்கும் சோமாலியா போன்ற ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இதன் மூலமாக சோமாலியா போன்ற ஏழ்மை நாடுகளின் பஞ்சத்தை விரட்டியடிக்க முடியும் !


    ஆமா இது சரியான வழி முறைதானே.

    ReplyDelete
  13. சோமாலியாவையும் அங்குள்ள மக்களையும்,அவர்களது நலிந்து போன் உருவங்களையும் மீடியாக்களில் பார்க்கும் பொழுதெல்லாம் மனம் கனத்துப்போகும்.சீகிரம் நல்ல விமோசனம் கிட்டட்டும்

    ReplyDelete
  14. கண்டிப்பாக உதவவேண்டும்

    ReplyDelete
  15. மிகவும் வருத்தமான செய்தி! அவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்!

    ReplyDelete
  16. //மாய உலகம் சொன்னது…

    ஜாதி மதம் பார்க்காமல் மனித நேயம் மிளிர அனைத்து தரப்பினரும் உணர்ந்து உதவ முன் வரவேண்டும்.. இறைவனின் பார்வை இந்த ஏழைகள் பக்கம் திரும்பட்டும் நாம் அதற்காக பிரார்த்தனை செய்வோம்//

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  17. //ChitraKrishna சொன்னது…

    இறைவன் அடுத்த முறை உலகை படைக்கும் போது இப்படி ஒரு ஏற்ற தாழ்வு இல்லாமல் படைப்பானாக..... இந்த முறை இந்த ஏழைகளின் வாழ்வில் விரைவில் ஒளி தருவானாக.....//


    இறைவன் எல்லா மக்களையும் ஒரே மாதிரிதான் படைப்பான் சகோதரி. அந்த நாட்டுக்கு ஏன் இந்த சோதனை . அறியக்கூடியவன் இறைவன்
    ஒருவனே.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

    ReplyDelete
  18. //MyKitchen Flavors-BonAppetit!. சொன்னது…

    Hi Ayisha,Appreciate ur concern for this under-privileged ppl.Luv to join U in voicing my support for the ppl of Somaliya.//


    thanks for your coming and for your comments

    ReplyDelete
  19. //Lakshmi சொன்னது…

    நிதியை முறையாக வசூலித்து பஞ்சம், பசி,பட்டினி என்று கொடும் வதைக்கு ஆளாகி இருக்கும் சோமாலியா போன்ற ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இதன் மூலமாக சோமாலியா போன்ற ஏழ்மை நாடுகளின் பஞ்சத்தை விரட்டியடிக்க முடியும் !


    ஆமா இது சரியான வழி முறைதானே.//

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
    லட்சிமியம்மா.

    ReplyDelete
  20. //ஸாதிகா சொன்னது…

    சோமாலியாவையும் அங்குள்ள மக்களையும்,அவர்களது நலிந்து போன் உருவங்களையும் மீடியாக்களில் பார்க்கும் பொழுதெல்லாம் மனம் கனத்துப்போகும்.சீகிரம் நல்ல விமோசனம் கிட்டட்டும்//

    துஆ செய்வோம்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
    சகோதரி.

    ReplyDelete
  21. //"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

    இன்று என் வலையில் ...

    இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.//


    இன்று உங்கள் வலையில் நல்ல அலசல்.

    ReplyDelete
  22. //"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

    கண்டிப்பாக உதவவேண்டும்//

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  23. //Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…

    மிகவும் வருத்தமான செய்தி! அவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்!//

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  24. வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete
  25. கண்ணீரை பெருகச் செய்யும் பதிவு
    படங்களுடன் விளக்கிச் செல்லும் விதம்
    ம்னம் கலங்கச் செய்து போகிறது தங்கள் கோரிக்கை
    மிக மிக ஞாயமானதே த.ம 6

    ReplyDelete
  26. //Rathnavel சொன்னது…

    வேதனையாக இருக்கிறது.//


    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  27. //Ramani சொன்னது…

    கண்ணீரை பெருகச் செய்யும் பதிவு
    படங்களுடன் விளக்கிச் செல்லும் விதம்
    ம்னம் கலங்கச் செய்து போகிறது தங்கள் கோரிக்கை
    மிக மிக ஞாயமானதே த.ம 6//


    இதைவிட கொடுமையான படங்களை போட
    மனம் வரவில்லை சகோ.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் ஓட்டலித்தமைக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete