15 September 2011

ஸ்வீட்டோடு வருகிறேன்.....

அனைவரும் நலமா? நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்  நிலவட்டுமாக...ஆமீன்...!



உங்களை  எல்லாம்  நீண்ட  நாட்களுக்கு  பின்  சந்திப்பதால், ஸ்வீட்டோடு   வந்திருக்கிறேன். பேரு வட்லப்பம். டேஸ்ட் சூப்பரோ சூப்பர்.ஹெல்தியான புட். செய்து   பார்த்துட்டு   எப்படின்னு   சொல்லுங்கோ


                                                                              
                                                                  ட்லப்பம்

தேவையான  பொருட்கள் 


தேங்காய் பெரியது--1
முட்டை ---------------10
சர்க்கரை -------------- 1/2 கி
பாதாம் பருப்பு ---------25 கிராம்
முந்திரி         -----------50கிராம்
திராட்சை    -----------25கிராம்
ஏலக்காய்-------------10கிராம்
பொரி கடலை-------10கிராம்{ஒடச்ச கடலை}


செய்முறை 

முதலில்   தேங்காயை   உடைத்து,  நறுக்கி  மிக்சியில்   போட்டு   அரைத்து  கெட்டியாக  பால்  எடுத்து  கொள்ளவும். {பாலின்  அளவு  முக்கால் லிட்டர்  கெட்டியாக}தண்ணீர்   கூடிவிட்டால் சொதப்பி விடும் .கவனம்.


அதில்  சர்க்கரையை  போட்டு  நன்றாக  கரைத்து  வடிகட்டி வைக்கவும்.


முட்டையை   உடைத்து   மிக்சி  ஜாரில்  ஊற்றி  மிக்சியை  இடது  பக்கம்  சுற்றி, முட்டை  கலவையை     தேங்காய்   பாலில்   ஊற்றவும்.


{பாதம்  பருப்பை  ஊற  வைத்து  மேல்  தோல்  நீக்கி  கொள்ளவும்.}


பாதம் 25கிராம் ,   முந்திரி 25கிராம்,  ஒடச்சகடலை 10கிராம்
ஏலக்காய்  10கிராம்   அனைத்தையும்   மிக்சியில்  நன்றாக  பவுடர்  பண்ணி,
முட்டைபால்  கலவையில்  ஊற்றி  கட்டி  விழாமல்  கலக்கவும்.


இந்த   கலவையை  குக்கருக்குள்   வைக்குமாறு   ஒரு   பாத்திரத்தில்
வைத்து ,  குக்கர்   அடியில்   கொஞ்சம்   தண்ணி   வைத்து . இந்த  பாத்திரத்தை
உள்ளே   வைத்து   வேகவைக்கவும்.  இரண்டு   விசில்   வந்தவுடன்  திறந்து {கொஞ்சம் கொல கொல என்று இருக்கும்  போது} முந்திரி  25கிராம், திராச்சை  25கிராம்   எடுத்து   அதில்  தூவி, திரும்ப   மூடி வேக   வைக்கவும். 6,7   விசில்  வந்தவுடன்  ஆப பண்ணிவிட்டு ,ஏர்  போனவுடன் திறக்கவும்.அல்லது  நைட்  செய்து விட்டு  காலையில் எடுக்கவும்.


சூப்பெரான... சுவையான ... வட்லப்பம்  ரெடி ......

தாராளமாக  10பேர் சாப்பிடலாம். 

உங்கள்  தேவைக்கு  ஏற்ப  அளவை  கூட்டி கொள்ளவும்.

எங்களுடைய  பெருநாளைக்கு {பண்டிகை} கண்டிப்பாக  செய்வோம்.

இதை  யாருலாம்  செய்து  இருக்கீங்க ? சாப்பிட்டு  இருக்கீங்க ?


குறிப்பு :   தேங்காயில்  மேல் இருக்கும்  கருப்பு  தோடை  நீக்கி  விட்டு  பால் எடுத்தால்  வட்லப்பம்  வெள்ளையாக  இருக்கும்.அப்படியே  பால்  எடுத்தால்
கொஞ்சம்  கலர்  கருப்பாகி  விடும். எப்படி  வேண்டுமானாலும்  செய்யலாம். பாதம்  பருப்பு  சேர்ப்பது  உங்கள் விருப்பத்தை  பொறுத்து.

                                                                             
                                                                

51 comments:

  1. வாங்க வாங்க..அஸ்மா(உங்கள் வீட்டுக்கே வந்து உங்களை வாங்க வாங்கன்னு அழைகிறேன் பாருங்க.)இஸ்லாமிய இல்லங்களில் இன்றியமையாத ஒரு இனிப்பு இந்த வட்டலப்பம்.திருமணம்,பெருநாட்கள்,விஷேஷ தினங்கள்.விருந்து அனைத்திலும் பறிமாறப்படுவது.எல்லா இஸ்லாமியர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஐட்டம்.காலையிலே ஸ்வீட் தந்து அசத்திய அஸ்மாவுக்கு நன்றி(என்ன உங்கள் வீட்டு பெருநாள காலை வைத்த வட்டலப்பமா?) :-)

    ReplyDelete
  2. ///ஸாதிகா சொன்னது…

    வாங்க வாங்க.. அஸ்மா {ஆயிஷாவுக்கு அஸ்மா}

    வந்துட்டேன் .வந்துட்டேன்.

    ////(உங்கள் வீட்டுக்கே வந்து உங்களை வாங்க வாங்கன்னு அழைகிறேன் பாருங்க.)இஸ்லாமிய இல்லங்களில் இன்றியமையாத ஒரு இனிப்பு இந்த வட்டலப்பம்.திருமணம்,பெருநாட்கள்,விஷேஷ தினங்கள்.விருந்து அனைத்திலும் பறிமாறப்படுவது.எல்லா இஸ்லாமியர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஐட்டம்.காலையிலே ஸ்வீட் தந்து அசத்திய அஸ்மாவுக்கு நன்றி///


    ///(என்ன உங்கள் வீட்டு பெருநாள காலை வைத்த வட்டலப்பமா?) :-)///

    பெருநாள் அன்று கேம்ரா கிளிக் பண்ண மறந்துட்டேன்

    இது நேற்றைய ஸ்பெஷல்.

    தங்கள் வருகைக்கும்,முதல் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நாக்கு ஊருது

    ReplyDelete
  4. வட்லப்பம் சூப்பர்.

    ReplyDelete
  5. ஐயோ...ஆயிஷாவை அச்மாவாக்கி விட்டேன்...ஸாரி..ஸாரி..ஸாரி..அது சரி நேற்று என்ன விஷேஷம்.சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  6. அசத்தல் பதார்த்தம், லேட்டா வந்தாலும் லேட்டஸ்...!!!

    ReplyDelete
  7. ஓ நான் சாப்பிட்டிருகேனே .ரொம்ப ருசியா இருக்கும் .உங்கள் ரெசிப்பி படி செய்தும் பார்க்கிறேன் ஆயிஷா .பகிர்வுக்கு நன்றி .ஒரு சிறு டௌட் சர்க்கரை என்று நீங்க குறிப்பிட்டு இருப்பது வெல்லம் தானே

    ReplyDelete
  8. எச்சில் ஊறுகிறது. அம்மாகிட்ட சொல்லி செய்ய சொல்றேன்.

    ReplyDelete
  9. //"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
    நாக்கு ஊருது//


    அம்மா கிட்ட சொல்லி செய்து சாப்பிடுங்கோ சகோ.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  10. //"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

    என்று என் வலையில்
    உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?//


    பயனுள்ளது சகோ படித்து கமெண்ட் போட்டு விட்டேன்.

    ReplyDelete
  11. ///சே.குமார் சொன்னது…

    Super.....

    Vanga.... inippodu vanthu irukinga...///

    aamaam sako

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  12. ///asiya omar சொன்னது…

    வட்லப்பம் சூப்பர்.///

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  13. ///ஸாதிகா சொன்னது…

    ஐயோ...ஆயிஷாவை அச்மாவாக்கி விட்டேன்...ஸாரி..ஸாரி..ஸாரி..///

    இப்பகூட அஸ்மாவை அச்மா. நோ ஐயோ..நோ ஸாரி.

    ///அது சரி நேற்று என்ன விஷேஷம்.சொல்லவே இல்லையே?///

    நாம் சாட்டில் பேசும்போது சொல்கிறேன் ஓகேவா

    இன்ஷா அல்லாஹ்...

    ReplyDelete
  14. ///MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    அசத்தல் பதார்த்தம், லேட்டா வந்தாலும் லேட்டஸ்...!!!///

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  15. //பாலா சொன்னது…
    எச்சில் ஊறுகிறது. அம்மாகிட்ட சொல்லி செய்ய சொல்றேன்.//

    கண்டிப்பாக சொல்லவும் .சாப்பிட்டு எப்படின்னு சொலுங்கோ சகோ.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ .

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா! தேங்காய்ப்பால் வட்டிலப்பமா... நல்லா இருக்கு. காயல்பட்டிணத்தில் இருக்கும்போது சாப்பிட்டிருக்கேன், ஆனா செய்தது கிடையாது :) நாங்க பசும்பால் சேர்த்துதான் செய்வோம். மற்ற பொருட்களும் கொஞ்சம் வித்தியாசப்படும். நானும் இந்த முறை ஃபோட்டோ எடுக்கணும்னு நினைத்தேன், நேரமில்லை. அடுத்த முறை இன்ஷா அல்லாஹ் க்ளிக் பண்ணி போடுகிறேன்.

    //பிளாக் அட்ரஸ் போடவில்லை.யார் வேண்டுமானாலும் சுருட்டிக் கொள்ளலாம்//

    நம் போஸ்ட்டை/ரெசிபியைக் காப்பி பண்ணி நம்ம ப்ளாக் லிங்க்கை கொடுத்தால்கூட நாம் சந்தோஷம்தான் பட்டுக்குவோம். ஃபோட்டோஸில் பிளாக் அட்ரஸை வாட்டர் மார்க் பண்ணினால் கூட அதையும் அப்படியே எரேஸ் பண்ணிவிட்டு போட்டுக்குறாங்க தோழி. என்ன சொல்ல..?

    @ ஸாதிகா அக்கா...

    முதல்ல ஆயிஷாவை அஸ்மான்னு போட்டதைப் பார்த்து 'ஆஹா.. ஸாதிகா அக்கா நம்மை நினைச்சிட்டே இருக்காங்கன்னு சந்தோஷமா இருந்துச்சி :-) பிறகு பார்த்தால் அஸ்மாவை 'அச்'மா..?? ஓ.. என் பெயரை எழுதும்போது தும்மல் வந்துடுச்சோ..? :))) எப்படியோ என்னை மறக்காம இருந்தா போதும் ;)

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    அருமையான ஸ்வீட்.
    வாழ்த்துக்கள்!

    இனி அடுத்தடுத்த பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  18. //angelin சொன்னது…

    ஓ நான் சாப்பிட்டிருகேனே .ரொம்ப ருசியா இருக்கும் .உங்கள் ரெசிப்பி படி செய்தும் பார்க்கிறேன் ஆயிஷா .//

    கண்டிப்பாக செய்து பாருங்கள்.

    //பகிர்வுக்கு நன்றி .ஒரு சிறு டௌட் சர்க்கரை என்று நீங்க குறிப்பிட்டு இருப்பது வெல்லம் தானே//

    எங்கள் ஊரில் சீனி..
    சென்னையில் சர்க்கரை..

    ஆக மொத்தத்தில் வெள்ளையாக பொடி,பொடியாக இருக்குமே அதான் சர்க்கரை..சீனி...

    நாங்கள் கருப்பட்டி போல் வெள்ளையாக இருப்பதைத்தான் வெல்லம் என்று சொல்வோம்.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. //அஸ்மா சொன்னது…
    அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா! //

    வ அலைக்கும் சலாம் அஸ்மா

    ///தேங்காய்ப்பால் வட்டிலப்பமா... நல்லா இருக்கு. காயல்பட்டிணத்தில் இருக்கும்போது சாப்பிட்டிருக்கேன், ஆனா செய்தது கிடையாது :) நாங்க பசும்பால் சேர்த்துதான் செய்வோம். மற்ற பொருட்களும் கொஞ்சம் வித்தியாசப்படும். நானும் இந்த முறை ஃபோட்டோ எடுக்கணும்னு நினைத்தேன், நேரமில்லை. அடுத்த முறை இன்ஷா அல்லாஹ் க்ளிக் பண்ணி போடுகிறேன்.///

    தேங்காய்பாலில் செய்து பாருங்கள்.சூப்பெராக இருக்கும். கண்டிப்பாக பதிவு போடணும்.

    //பிளாக் அட்ரஸ் போடவில்லை.யார் வேண்டுமானாலும் சுருட்டிக் கொள்ளலாம்//

    நம் போஸ்ட்டை/ரெசிபியைக் காப்பி பண்ணி நம்ம ப்ளாக் லிங்க்கை கொடுத்தால்கூட நாம் சந்தோஷம்தான் பட்டுக்குவோம். ஃபோட்டோஸில் பிளாக் அட்ரஸை வாட்டர் மார்க் பண்ணினால் கூட அதையும் அப்படியே எரேஸ் பண்ணிவிட்டு போட்டுக்குறாங்க தோழி. என்ன சொல்ல..?


    இப்படியும் நடக்குதா.
    செய்வது தவறு என்று அவர்கள் தான் உணரனும் அஸ்மா.நானும் பிளாக் அட்ரஸ் போட்டு விட்டேன்.

    ///@ ஸாதிகா அக்கா...

    முதல்ல ஆயிஷாவை அஸ்மான்னு போட்டதைப் பார்த்து 'ஆஹா.. ஸாதிகா அக்கா நம்மை நினைச்சிட்டே இருக்காங்கன்னு சந்தோஷமா இருந்துச்சி :-) பிறகு பார்த்தால் அஸ்மாவை 'அச்'மா..?? ஓ.. என் பெயரை எழுதும்போது தும்மல் வந்துடுச்சோ..? :))) எப்படியோ என்னை மறக்காம இருந்தா போதும் ;)///

    படித்து விட்டு ரெம்பவும் சிரித்தேன் தோழி.
    உங்கள் பெயரை சொல்லுபோதுதான் தும்மல் வரணுமா.இன்று பதிவு போட்டவுடன் மொத ஆளா ஸ்வீட்டை வாங்கிட்டு என்னையும் உங்களையும் கொல்றாங்கோ.


    ஸாதிகா அக்கா இங்கே கவனிங்கோ...

    ReplyDelete
  20. ///அந்நியன் 2 சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.///
    வ அலைக்கும் சலாம் சகோ.

    //அருமையான ஸ்வீட்.வாழ்த்துக்கள்!
    இனி அடுத்தடுத்த பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.//

    இனி பதிவுகள் தொடரும் சகோ. நீங்களும் வருகை தாருங்கள்.

    உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  21. வெகு நாட்களுக்குப் பின் இனிப்போடு வந்திருக்கிறீர்கள்
    வருக வருக அன்புடன் வரவேற்கிறேன்
    உங்கள் அற்புதமான பதிவுகளை மீண்டும்
    அள்ளித்தர அன்புடன் வேண்டுகிறேன்

    ReplyDelete
  22. ///Ramani சொன்னது…
    வெகு நாட்களுக்குப் பின் இனிப்போடு வந்திருக்கிறீர்கள்
    வருக வருக அன்புடன் வரவேற்கிறேன்
    உங்கள் அற்புதமான பதிவுகளை மீண்டும்
    அள்ளித்தர அன்புடன் வேண்டுகிறேன்//

    இனி பதிவுகள் தொடரும் சகோ.

    உங்கள் கருத்துக்கும்,வரவேற்புக்கும் ,வருகைக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  23. muttai -10 patham 25gm ahha. imm koluppu koluppu enakku vendam. vendave vendam. nan dayartula irukken.


    usssh ayisha appurama yarukkum theriyama enakku oru pathu valattuppam anuppi vaiyunga super.

    intha ragasiyam yarukkum theriyakk koodathu. ok

    ReplyDelete
  24. ஆக மொத்தத்தில் வெள்ளையாக பொடி,பொடியாக இருக்குமே அதான் சர்க்கரை..சீனி...

    aaka aaka enna kandu pidippu. piramatham

    ReplyDelete
  25. நாங்கள் கருப்பட்டி போல் வெள்ளையாக இருப்பதைத்தான் வெல்லம் என்று சொல்வோம்.

    vellai karupadiya?????

    ayisha karuppaka iruppathal than athukku peyar karuppatti. ithu karanap peyar. ithu kuuda enn vellathai pottu kulupukinrirkal. vellam veru karuppattu veru. vellam karumpu saru la sevathu. karuppatti panai saru la seivathu.
    panai vellam enru solvarkal

    ReplyDelete
  26. ரொம்ப அருமையான முட்டை வட்லாப்பாம்

    எங்க வீட்டு பேமஸ் ஸ்வீட்

    இடியாப்பத்துடன் , கால், பாயா, இடியாப்பம், வட்லாப்பம் கண்டிப்பா திருமன விஷேஷ்த்தில் இருக்கும்

    முதல் முதல் சமையலில் நான் செய்தெதே வட்லாப்பாம்
    தான் .

    அருமை

    ReplyDelete
  27. ஆயிஷா உங்க பக்கம் கூப்பிட்டீங்க இல்லே அதான் வந்தேன். நாங்கல்லாம் முட்டை சாப்பிட மாட்டோம். அதனால இந்தக்குறிப்புக்கு கருத்து சொல்ல முடியல்லேம்மா சாரி.

    ReplyDelete
  28. சலாம் சகோ,

    வட்லப்பம்...இது பெரும்பாலும் இஸ்லாமியர்கள் செய்யும் இனிப்பு வகை..சத்தானதும் கூட..அதிக இனிப்பும்,கூடவே,முட்டை தேங்காய் போன்ற கொழுப்பு புரத சத்துள்ள பொருட்கள்.வயோதிகர்களை போருட்படுத்தலாம்...செய்முறையும் போட்டோவும் அருமை...

    வட்லப்பம்:..இது பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.வட்லப்பம்,வட்டலப்பம்,வட்லாப்பம்,எனவாறு..
    ஆனால்..இது ஒரு காரணப்பெயர்...அதாவது வட்டில் ஊற்றி செய்யப்படும் ஆப்பம் இது.அதனால் இதன் ஒரிஜினல் பெயர் வட்டில் ஆப்பம் என்பதாகும்.காலப்போக்கில் வட்டிலாப்பம் ஆகி...ஓர் ஊருக்கு இப்படி சொல்வழக்கு,வார்த்தை திரிபு காரணமாக பல பெயர் பெற்றது...

    அப்புறம் சகோ...
    உங்க இன்கிரிடியன்ஸ் ல ஒரு ஐட்டம் மட்டும் புரியல..
    "பாதம்" பருப்பு ---------25 கிராம்
    இந்த பருப்பு எங்க கெடைக்கும் சகோ..
    எனக்கு தெரிஞ்சு பாதாம் பருப்பு இருக்கு...இது?????? -

    லிட்டார் - இது என்ன யூனிட்???

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  29. ///பித்தனின் வாக்கு சொன்னது…

    muttai -10 patham 25gm ahha. imm koluppu koluppu enakku vendam. vendave vendam. nan dayartula irukken.


    usssh ayisha appurama yarukkum theriyama enakku oru pathu valattuppam anuppi vaiyunga super.

    intha ragasiyam yarukkum theriyakk koodathu. ok///


    இப்பவே கொழுப்பு ரெம்ப இருக்கு.
    நான் வட்லப்பம் அனுப்பி, அதையும் தின்னுபுட்டு
    இன்னும் ஓவரா கொழுப்பு ஏறிடும்.
    வேண்டவே வேண்டாம்.நான் அனுப்ப வேண்டாம்.
    இதை யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க.ஓகே.

    ReplyDelete
  30. ///பித்தனின் வாக்கு சொன்னது…

    ஆக மொத்தத்தில் வெள்ளையாக பொடி,பொடியாக இருக்குமே அதான் சர்க்கரை..சீனி...

    aaka aaka enna kandu pidippu. piramatham///

    அட நம்ம கண்டுபிடிப்புக்கு பாராட்டா. பராட்டியவற்கு நன்றி.

    ReplyDelete
  31. ///பித்தனின் வாக்கு சொன்னது…

    நாங்கள் கருப்பட்டி போல் வெள்ளையாக இருப்பதைத்தான் வெல்லம் என்று சொல்வோம்.

    vellai karupadiya?????

    ayisha karuppaka iruppathal than athukku peyar karuppatti. ithu karanap peyar. ithu kuuda enn vellathai pottu kulupukinrirkal. vellam veru karuppattu veru. vellam karumpu saru la sevathu. karuppatti panai saru la seivathu.
    panai vellam enru solvarkal///


    உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் , கருப்பட்டி,வெல்லம் விளக்த்திற்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  32. ///Jaleela Kamal சொன்னது…

    ரொம்ப அருமையான முட்டை வட்லாப்பாம்
    எங்க வீட்டு பேமஸ் ஸ்வீட்
    இடியாப்பத்துடன் , கால், பாயா, இடியாப்பம், வட்லாப்பம் கண்டிப்பா திருமன விஷேஷ்த்தில் இருக்கும்
    முதல் முதல் சமையலில் நான் செய்தெதே வட்லாப்பாம் தான் .அருமை.///

    உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  33. ///Lakshmi சொன்னது…

    ஆயிஷா உங்க பக்கம் கூப்பிட்டீங்க இல்லே அதான் வந்தேன். நாங்கல்லாம் முட்டை சாப்பிட மாட்டோம். அதனால இந்தக்குறிப்புக்கு கருத்து சொல்ல முடியல்லேம்மா சாரி.///

    ஸாரிமா. அடுத்த பதிவுக்கு வாங்கோ.

    ReplyDelete
  34. ///RAZIN ABDUL RAHMAN சொன்னது…

    சலாம் சகோ,

    வாங்கோ...வாங்கோ...

    வ அலைக்கும் சலாம்

    பெயர் போடும் போது அப்படி போடுமா,இப்படி போடுமா என்று குழம்பி இப்படி போட்டேன்.

    உங்கள் பெயர் விளக்கத்திற்கு நன்றி.

    ///அப்புறம் சகோ...
    உங்க இன்கிரிடியன்ஸ் ல ஒரு ஐட்டம் மட்டும் புரியல.."பாதம்" பருப்பு ---------25 கிராம்
    இந்த பருப்பு எங்க கெடைக்கும் சகோ..///

    இது அங்குதான் கிடைக்கும்.

    ///எனக்கு தெரிஞ்சு பாதாம் பருப்பு இருக்கு...இது?????? -///

    ஆஹா ....

    சகோ உதாரணம்
    கிடைக்கும் எழுத்து சொல் ....பாதாம்
    கெடைக்கும் பேச்சு சொல் ....பாதம்

    நாம் கடைகளில் பாதம் பருப்பு அப்படிதானே கேட்கிறோம்.

    ///லிட்டார் - இது என்ன யூனிட்???///

    சகோ நீங்க வந்துட்டு சும்மா போகக்கூடாதுன்னு தான்.அந்த புது யூனிட்.

    திருத்திவிட்டேன் நன்றி சகோ.

    இனி முதல் கமேண்ட்டில் வந்துடுங்கோ சகோ.{பிழை திருதம்ஸ்}

    உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும், விளக்த்திற்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  35. ஆயிஷா... உங்கள் சுவீட் குறிப்போடு, நானும் வழிகண்டுபிடிச்சு வந்திட்டேன்.

    சூப்பர் வடிலப்பம். எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    //இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?//

    செய்ய நினைப்பதுண்டு, இன்னும் செய்யவில்லை. கொஞ்சம் கிடைத்துச் சாப்பிட்டிருக்கிறேன் முன்பு:).

    ReplyDelete
  36. ///athira சொன்னது…

    ஆயிஷா... உங்கள் சுவீட் குறிப்போடு, நானும் வழிகண்டுபிடிச்சு வந்திட்டேன்.

    சூப்பர் வடிலப்பம். எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    //இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?//

    செய்ய நினைப்பதுண்டு, இன்னும் செய்யவில்லை. கொஞ்சம் கிடைத்துச் சாப்பிட்டிருக்கிறேன் முன்பு:).//

    வழி கண்டுபிடிச்சி வந்ததற்கு நன்றி அதிரா.
    கண்டிப்பாக செய்து சாப்பிடவும்.

    உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி.

    ReplyDelete
  37. வட்டிலப்பம் பிரமாதமாக இருக்கிறது ஆயிஷா! முட்டை நிறைய என்பதால் நான் இதை செய்து பார்த்ததில்லை!

    புகைப்படம் செய்யத் தூன்டுகிறது!

    ReplyDelete
  38. //இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?//

    இருக்கிற (ஊரிலிருந்து வந்த ) சோகத்தை நிறைய சொரிந்து விட்டீங்களே அவ்வ்வ்வ்...ஊரிலிருந்து இங்கே வரும் தினம் சாப்பிட்டது ..((இங்கே செய்ய ரொம்ப கஷடம் , அதுக்குன்னு ஸ்பெஷலா சட்டி வேனும் , ஒரு தடவை டிரை செய்து தண்ணீரும் , முட்டை கலவையும் மிக்ஸ் ஆகி ....அதிலிருந்து இங்கே முயற்சிப்பது இல்லை ))

    ReplyDelete
  39. //இரண்டு விசில் வந்தவுடன் திறந்து {கொஞ்சம் கொல கொல என்று இருக்கும் //

    இந்த கொழ கொழ -தான் ச்சே...சொல்ல வந்தது மறந்துப்போச்சே :-))

    ReplyDelete
  40. ///மனோ சாமிநாதன் சொன்னது…

    வட்டிலப்பம் பிரமாதமாக இருக்கிறது ஆயிஷா! முட்டை நிறைய என்பதால் நான் இதை செய்து பார்த்ததில்லை!
    புகைப்படம் செய்யத் தூன்டுகிறது!///


    கண்டிப்பாக செய்து சாப்பிடவும்.

    உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி.

    ReplyDelete
  41. ///ஜெய்லானி சொன்னது…

    //இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?//

    இருக்கிற (ஊரிலிருந்து வந்த ) சோகத்தை நிறைய சொரிந்து விட்டீங்களே அவ்வ்வ்வ்...ஊரிலிருந்து இங்கே வரும் தினம் சாப்பிட்டது ..((இங்கே செய்ய ரொம்ப கஷடம் , அதுக்குன்னு ஸ்பெஷலா சட்டி வேனும் , ஒரு தடவை டிரை செய்து தண்ணீரும் , முட்டை கலவையும் மிக்ஸ் ஆகி ....அதிலிருந்து இங்கே முயற்சிப்பது இல்லை ))///


    திரும்ப ட்ரை பண்ணி பாருங்கள் சகோ.

    திரும்பவும் மிக்ஸ் ஆகிவிட்டால் ஜூஸா அடிச்சிவுடுங்கோ

    ReplyDelete
  42. //ஜெய்லானி சொன்னது…

    //இரண்டு விசில் வந்தவுடன் திறந்து {கொஞ்சம் கொல கொல என்று இருக்கும் //

    இந்த கொழ கொழ -தான் ச்சே...சொல்ல வந்தது மறந்துப்போச்சே :-))///


    அப்படியா சகோ. திருத்தி விடுகிறேன்.
    சகோ ரஜின் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.


    உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  43. ஸ்வீட் தந்து அசத்தியற்கு நன்றி

    ReplyDelete
  44. ///இராஜராஜேஸ்வரி சொன்னது…

    ஸ்வீட் தந்து அசத்தியற்கு நன்றி///


    உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி.

    ReplyDelete
  45. நானும் இப்ப நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன்.. ஸ்வீட் நல்லா இருக்கு.. எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகையில் இதுவும் ஒன்று

    ReplyDelete
  46. ///சிநேகிதி சொன்னது…

    நானும் இப்ப நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன்.. ஸ்வீட் நல்லா இருக்கு.. எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகையில் இதுவும் ஒன்று///


    வாங்க பாயிஷா

    அஸ்ஸலாமு அலைக்கும்

    உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி.

    ReplyDelete
  47. வட்டிலாப்பம் எங்க ஊரின் ஃபேமஸ் ஸ்வீட். ஆனாலும், இந்தப் பெருநாளைக்குத்தான் முதன்முறையா நானே செய்தேன்!! தேங்காய்ப்பால்+முட்டையே ஹெவி என்பதால், நட்ஸ் சேர்ப்பதில்லை நான். மற்றபடி, நாகர்கோவில் இனிப்புகளான கிண்ணத்தப்பம், முட்டையப்பம் செய்வதுண்டு.

    ReplyDelete
  48. //ஹுஸைனம்மா சொன்னது…

    வட்டிலாப்பம் எங்க ஊரின் ஃபேமஸ் ஸ்வீட். ஆனாலும், இந்தப் பெருநாளைக்குத்தான் முதன்முறையா நானே செய்தேன்!! தேங்காய்ப்பால்+முட்டையே ஹெவி என்பதால், நட்ஸ் சேர்ப்பதில்லை நான். மற்றபடி, நாகர்கோவில் இனிப்புகளான கிண்ணத்தப்பம், முட்டையப்பம் செய்வதுண்டு.//


    //அஸ்ஸலாமு அலைக்கும்

    உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி.

    ReplyDelete
  49. //இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?// ;) எனக்கு மிகவும் பிடித்த டெசர்ட். இது கலர் வித்தியாசமாகத் தெரியுது ஆயிஷா. சர்க்கரை!! சீனியா?
    இதற்கு சீனிக்குப் பதில் கித்துள் கருப்பட்டி போட்டால் சூப்பராக இருக்கும். ;P
    எனக்கு நட்ஸ் எதுவும் இல்லாமல் இருந்தால் பிடிக்கும். ஸ்டீம் பண்ணுவதை விட பேக் செய்வது நன்றாக இருப்பதாக எங்கள் வீட்டார் அபிப்பிராயம்.

    ஸாதிகா... ;))))

    ReplyDelete
  50. //இமா சொன்னது…

    //இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?// ;) எனக்கு மிகவும் பிடித்த டெசர்ட். இது கலர் வித்தியாசமாகத் தெரியுது ஆயிஷா. சர்க்கரை!! சீனியா?//

    சீனிதான் இமா.


    //இதற்கு சீனிக்குப் பதில் கித்துள் கருப்பட்டி போட்டால் சூப்பராக இருக்கும். ;//

    இன்னொருநாள் கித்துள் கருப்பட்டி செய்து பார்கிறேன்.


    //
    எனக்கு நட்ஸ் எதுவும் இல்லாமல் இருந்தால் பிடிக்கும். ஸ்டீம் பண்ணுவதை விட பேக் செய்வது நன்றாக இருப்பதாக எங்கள் வீட்டார் அபிப்பிராயம்.

    ஸாதிகா... ;))))//

    செய்து சாப்பிட்டு பாருங்கள்.

    உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி இமா.

    ReplyDelete