27 January 2011

கண்ணதாசன் அவர்கள் மணிமொழிகள் !


தேவைப்பட்டாலொழியக்    கோபம்  கொள்ளாதே.


நன்மை    செய்தவனுக்கு  நன்றி  காட்டு.


தீமை  செய்தவனை  மறந்து  விடு.


எதையும்  சாதிக்க  நிதானம், அற்புதமான  ஆயுதம்.


வென்றவனுக்கு  மலையும்  கடுகு. தோற்றவனுக்கு  கடுகும்  மலை.

ஆணவமும்,  அழிவும்  இறைட்டைக்  குழந்தைகள்.

அற்ப  ஆசைகள்  பெரிய  வெற்றியைத்  தேடித்  தருவதில்லை.

சோம்பி  நிற்கும்  மனிதனிடம்  துன்பங்கள்  உற்ப்பத்தியாகின்றன.

தாய்ப்பால்  கொடுக்காத  குழந்தைகளுக்கு  தாய்ப்பாசம்  இருக்காது.

இலக்கியங்கள்  எல்லாம்  மனிதர்களுடைய  அனுபவத்தில்  உதித்தவையே.

நீயாகவே  முடிவு  செய். நீயாகவே  செயல்  படு.

முடிந்தால்  நன்மை  செய். தீமை  செய்யாதே.

சினிமா-பயன்  படுத்த  தெரிந்தவனுக்கு  அற்புதமான  ஆயுதம்.

சிறு  வயதில்  வரவு  வையுங்கள்.  பெரிய  வயதில்  செலவளிங்கள்.

நம்  மனதளவு  எவ்வளவோ அவ்வளவு  தான்  உலகம்.

வாழ்வில்  நகைச்  சுவை  வேண்டும். சிரிக்காதவன்  மிருகம்.

அருங்குறள்  1330-ம்  கடலளவு.  அதன்  முன்  உலகம் கடுகளவு.

வாழ்ககையின்  ஒவ்வொரு  அணுவையும்  அனுபவிக்க  வேண்டும்.

எதையும்  தெரியாது  என்று  சொல்லாமல்  தெரியுமென  சொல்.

வாழ்வில்  துணிவு   வேண்டும்.

விதி  என்னும்  மூலத்தில்  இருந்து   முளைத்த  கிளையே  மதி.

காற்றுள்ள  போதே  தூற்றிக்கணும்  என்பதை  கவனத்தில்  வை.

வாழ்க்கையில்  முன்னேற  எந்த  விமர்சனத்தையும்  தாங்கிக்கொள்.

திறமை  உள்ளவனுக்கு  வாய்ப்பு  தூரமில்லை.
                                    

22 January 2011

பெட்ரோல் விலை உயர்வு !

எல்லா விலைவாசி உயர்வையும் எழுதி விட்டேன்.பெட்ரோல் விலைவாசி 
உயர்வையும் படிங்க !   


ஏற்கனவே  விலைவாசி  உயர்வால் மக்கள் வயிறு எரிந்து கொண்டிருந்தன.
பெட்ரோல் விலையையும் ஏற்றி இன்னும் அதிகமாக எரிய வைத்துவிட்டார்கள். 

அடிக்கடி பெட்ரோல் விலையை ஏற்றி, எண்ணெய் நிறுவனங்கள் மக்களை 
கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கின்றன.மத்திய அரசு இதைப் பற்றி அலட்டிக் 
கொள்வதாகவே தெரிவில்லை.என்ன விலை விற்றாலும் நாமும் பெட்ரோல் 
போட்டு வண்டி ஓட்டுவதை நிறுத்தப் போவதில்லை என்று அவர்களுக்கு 
தெரியும்.


குறைந்தபட்சம் மாநில அரசுகள்,பெட்ரோலுக்கு விதிக்கும் வரியினைக் 
குறைத்தாலே ஓரளவுக்கு சமாளிக்கலாம்.ஒவ்வொரு பெட்ரோல் விலை   ஏற்றத்தின் போதும்,போர்க்குரல் எழுப்பும் கம்யூனிஸ்டுகள் கூட இம்முறை 
மவுனமாக  இருப்பது ஏனென்று மக்களுக்கு புரியவில்லை.

பெட்ரோல் விலையை உயர்த்தினா,எல்லா விலைவாசியும் இன்னும் அதிகமாக ஏறிடுது.மக்கள் இரவு தூங்கும் முன்,காலையில் எழுந்திருச்சா 
என்னென்ன பொருளுக்கெல்லாம் கவர்மென்ட் விலையை ஏத்திடுவான்களோ என்ற சிந்தனையில் தூங்குகிறார்கள்.அதென்னமோ தெரிலீங்க,நடு
ராத்திரியில் தான் இந்த விலை உயர்வெல்லாம் அமுலுக்கு வருது.

கச்சா எண்ணெய் உலக மார்க்கெட்டில் ரெம்ப குறைவான விலையில் தான் 
இருக்கிறது.ஆனால் அரசு அதைக் காரணம் காட்டி எப்போதும் பெட்ரோல் 
விலையை  உயர்த்துகிறது.பொது மக்களின் நலன்காக்கும் அரசாங்கமாக 
இருந்தால் மற்ற நாடுகளில் உள்ளது போல இங்கேயும் விலை குறைவாக 
கொடுக்கலாம்.

எண்ணெய் கம்பெனிகளுக்கும்,முதலாளிகளுக்கும் சாதகமாக இருக்கும் 
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு,இந்த விலை ஏற்றத்தை 
மக்கள் மீது திணித்து அவர்கள் லாபம் பார்க்க வழிவகை செய்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கிற மாதிரி அரசாங்கம் கொஞ்சம் 
கொஞ்சமாக விலை ஏற்றி கொல்லுது. நீ சீக்கிரம் செத்துடக்கூடாது.ஆனா 
சாகுறவரைக்கும் நீ சித்திரவதை அனுபவிக்கனும் என்று சொல்வது மாதிரி 
இருக்கு என மக்கள் புலம்புகிறார்கள்.

மக்களுக்கு  வருமானத்துக்கு வழி செய்து கொடுப்பதில்லை அரசாங்கம்.
ஆனால் இருக்கிற காசையும் பிடுங்கி கொள்வதற்கு இது மாதிரி 
கன்னாபின்னான்னு விளையேத்துது.

அரிசி,கோதுமை,பருப்பு,எண்ணெய் போக்குவரத்து செலவு,படிப்பு செலவு 
மருத்துவச்செலவு,வீட்டு வாடகை உயர்வு போன்ற செலவுகளால்
நாள்தோறும் சந்தோஷத்தில் இருந்த மக்களை,பெட்ரோல் விலையை ஏற்றி 
இன்னும் அதிகமாக சந்தோஷத்தை கொடுத்து இருக்கு அரசாங்கம்.
                                                                                                                                    மக்களோட விடிவு அவர்கள்  கையில் தான்.
                          

17 January 2011

வாழைப்பூ வடை !

வாழைப்பூ வடை வித்தியாசமான வடைங்க.இப்பதான பொங்கலுக்கு வடையெல்லாம் செய்தோம்.இப்ப வடையைப் பற்றி போடுறீங்களே.அப்படீன்னு சொல்றீங்களா?இப்ப செய்யாட்டா பரவா இல்லங்க. அப்புறம் செய்து பாருங்க.இப்ப உங்க கருத்தும்,ஓட்டும் தான் வேணுங்க !

                 போட்டோ கூஹுள் இருந்து சுருட்டி,என் பிளாக் அட்ரஸ் போட்டேன்.   

                                                       வாழைப்பூ வடை             

தேவையான பொருட்கள் !

வாழைப்பூ -1.   வெங்காயம் -500 கி.   பச்சைமிளகாய்-6.  தேங்காய்-அரைமூடி. சீரகம்-2 ஸ்பூன்.கடலைப் பருப்பு-500 கி.தேவைக்கேற்ப 
எண்ணெய்,உப்பு.

செய்முறை !
கடலைப் பருப்பை சுத்தம் செய்து அரைமணி நேரம் நீரில் ஊறவிட 
வேண்டும்.வாழைப்பூவைப் பிரித்து பூக்களின் உள்ளே இருக்கும்,நரம்பு 
போன்ற பகுதியைக் கிள்ளி எடுத்து விட வேண்டும்.பிறகு நாலு,ஐந்து
பூக்களாக எடுத்து சிறியதாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம்,பச்சை மிளகாய் இரண்டையும் தனித் தனியாக சிறியதாக 
வெட்டி வைக்கவும்.தேங்காயைத் பொடியாக துருவி வைக்கவும்.

கடாய் அடுப்பில் வைத்து காய்ந்ததும்.ஒரு மேஜைகரண்டி எண்ணெய் 
ஊற்றவும்.சூடானதும் வெங்காயத்தைப் போடவும்.வெங்காயம் சிவப்பாக 
பொன்னிறமாக வெந்ததும் வாழைப்பூவைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 
வதக்கவும்.

வாழைப்பூ வெந்ததும் பச்சை மிளகாய்,தேங்காய்ப் பூவையும் போட்டு நன்றாக வதக்கவும்.

ஊறிய கடலைப் பருப்பை வடைப் பக்குவத்திற்கு அரைத்து,அதில் சீரகம்,
தேவைக்கேற்ப உப்பு,வதக்கி வைத்த வாழைப்பூ பொரியல் எல்லாவற்றையும்  போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாய்யை  அடுப்பில் வைத்து சூடு ஆனதும், வடை பொரிக்க தேவையான 
அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.எண்ணெய் சூடானதும் வடைகளைத் 
தட்டிப் போட்டு வேகவிடவும்.இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுத்து சாப்பிட்டு பாருங்கோ.

இதற்கு தொட்டு கொள்ள தக்காளிச் சட்னி,தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.
பொதுவாக எல்லோரும் விரும்பி சாப்பிடுவதில்லை.வேலை அதிகம்.

வாழைப்பூ உடம்புக்கு மிகவும் நல்லது.வாழைப்பூவின் துவர்ப்பு சத்து சர்க்கரை  வியாதி உள்ளவர்களுக்கு ஏற்றது.துவர்ப்பு சத்து நம் எல்லோருக்கும் நல்லது.சுவையாக,வித்தியாசமான வாழப்பூவில் வடை 
செய்து கொடுத்தால் எல்லோருக்கும் பிடிக்கும்.
                                                                                                                                                                            லொள்ளு
                                                                                   
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய வசந்தத்தில் 'கலங்க வைத்த விலைவாசி' படித்து விட்டு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்த
புதிய தலைமை செயலகத்தில்,முதல்வர் தலைமையில் ஆலோசனைக் 
கூட்டம் நடந்தது.     {ஆயிஷாவிற்கு ரெம்ப தான் லொள்ளு}
                                                                                                                                                                    

10 January 2011

ரிலாக்ஸ் கவிதைகள் !

என் முதல் பதிவிற்கு வருகை தந்து, என்னை ஊக்கம் அளித்த உங்கள் அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்.பின்னூட்டம
அளித்தவர்களுக்கும், ஒட்டு அளித்தவர்களுக்கும் நன்றி.இந்த கவிதைகளையும் படிங்க!!!
                                                                                                                     
                                                            அம்மா  
                  
            உன் கருவில் சுமந்து                                 
                               எனக்கு நீ தாயானாய்!!!                                       
                               என் மனதில் சுமந்து 
                               உனக்கு நான் தாயாவேன்!!!
                                                     இப்படிக்கு 
                               தாயைக் காதலிக்கும் 
                               தாயாகிய  மகள்!!!

                                                              புன்னகை 
                                          தொலைபேசி வாயிலாக 
                                  உன் சிரிப்பொலியைக் 
                                  கேட்டேன்....அந்த 
                                  நிமிடத்திலிருந்து மறந்து விட்டேன்
                                  என் தொலைபேசி எண்ணை!!!
                                                                 கண்ணீர்
                                             தாலி ஏறி திருமணம் முடிய,
                                    கண்ணீர் துளிர்க்கிறது
                                    மணமகளை 
                                    பக்கத்திலிருந்து பார்க்கும் 
                                    தாயின் கண்களிலும்,
                                    தூரத்திலிருந்து பார்க்கும் 
                                    காதலன் கண்களிலும்!!!
                                                                           பலன் 
                                              வாய் விட்டுச் சிரித்தாள் 
                                     நோய் விட்டு போகுமாம்!
                                     ஆனால்,பலமுறை 
                                     சிரித்தும் பயனில்லை 
                                     பைத்தியக்காரனுக்கு !!!
                                                           கவலை 
                                              இந்த பொங்கலுக்கு 
                                    அம்மாவின்  கவலையெல்லாம்,
                                    புக்  செய்த சிலிண்டர்
                                    பொங்கல் வைக்க 
                                    வந்து  விட வேண்டுமே என்பதுதான்!!!


     படித்து விட்டீர்களா? குறை,நிறை சொல்லிட்டு,ஓட்டையும் போடுங்க.
                                     அன்புடன்     
                                     ஆயிஷா.

04 January 2011

கலங்க வைக்கும் விலைவாசி !

தமிழ் நாட்டில் இப்ப எங்கும் விலைவாசி உயர்வு பற்றி பேச்சுதான் !
அதைப்பற்றி என் முதல்  பதிவில்  பதிக்கிறேன்.படித்துவிட்டு உங்க          கருத்தையும் சொல்லிட்டு போங்க.

வெங்காயம் கிலோ 80-100  ரூபாய்.  வெங்காயத்தை  நறுக்கினால்  தான் கண்ணீர் வரும்.இப்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது.

வெங்காயம் விலை உயர்ந்ததற்க்கு மழை மீதும்,வெள்ளத்தின் மீதும் 
பழி சுமத்தினார்கள் ஆட்சியாளர்கள்.மழை,வெள்ளம் ஒரு காரணம்தான் 
என்றாலும்கூட,வெங்காயத்தின் விலை உயர்வுக்கு பதுக்கலும் முக்கிய   காரணம் என்பது மறைக்கப்பட்டது.

காய்கறிகளின் விலை!  இன்றைக்கு என்ன குழம்பு வைக்கலாம்,கூட்டு பொரியலுக்கு என்ன காய்கறி வாங்கலாம் என்று தினந்தோறும் தலையைப் பிய்த்து கொள்கிறார்கள் குடும்ப தலைவிகள்.

வெங்காயத்தின் விலையை கேட்க்கும் போது  கண்ணீர்தான் வருகிறது.
ஆனால் தக்காளி,அவரை,வெண்டை....போன்ற காயகளின் விலையை கேட்டால் கண்களில் ரத்தமே வந்து விடும்.

பருப்பு  வகைகள் விலை !  துவரம் பருப்பின் விலை செஞ்சுரி அடித்து விட்டது என்று முன்பு பரப்பரப்பாக பேசப்பட்டது.ஆனால் இன்றைக்கு துவரம் பருப்பு,பாசிபருப்பு உட்பட பல பருப்புகளின் விலைகள் செஞ்சுரி அடித்துவிட்டன.

காய்கறிகளும்,மளிகை பொருட்களும் பர்சுக்கு சவால் விட்டு கொண்டிருக்கின்றன.
காய்கறிகளையோ,அரிசியையோ அப்படியே சாப்பிடமுடியாது.அவற்றை
சமைக்க எரிபொருள் கட்டாயம் வேண்டும்.விறகு பொருக்கி வந்து சமைப்பது
எல்லாம்  புராண காலத்தில் தான். ஏழை, பணக்காரர் என் வித்தியாசம்          
    இல்லாமல் எல்லோரும் கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தும் காலம் இது.  

  எதனுடைய  விலையை உயர்த்தினாலும்,தயவு செய்து கேஸ்                     சிலிண்டர்   விலையை  மட்டும் உயர்த்திவிடாதீர்கள் என்று பிரதமராக         பொறுப்பேற்றபோது மன்மோகன்சிங்கிடம் சொன்னாராம் அவரது மனைவி குர்ஷரன்.ஆனால் மனைவியின் வேண்டுகோளை அவர் காதில் வாங்கி     கொண்டதாக தெரியவில்லை.அவரது ஆட்சி காலத்தில் கேஸ் சிலிண்டர
    விலை பலமுறை  உயர்ந்து விட்டது .
                                 
கடந்த இரண்டு ஆண்டுகளாக விலைவாசி உயர்வால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்த மக்களை, மேலும் மேலும் உயரும் விலைவாசி கலங்கவைக்கிறது.                                                        

                                                விடிவு இவர்கள் கையில்.