22 September 2011

மணி மொழிகள் ....


                                                                                                                         
 
நம்  அனைவர்   மீதும்  ஏக  இறைவனின்  சாந்தியும்  சமாதானமும்  நிலவட்டுமாக... ஆமீன்...!
                                                                  

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
 
3. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
 
4. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

5. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

6. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

7. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

8. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

9. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

10. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

11. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

12. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

13. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

14. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

15. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

16. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

17. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

18. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

19. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

20. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

21. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

22. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

23. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

24. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

25. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

26. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

27. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

28. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!


29.சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

  உங்கள்  சகோதரி
                                                                                                                          

37 comments:

  1. அனைத்தும் அருமை.. நோட் பண்ணி வச்சு தினமும் பார்த்தாலே நாம் பாதி திருந்திடுவோம்.

    ReplyDelete
  2. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.


    எல்லாமே நல்லா இருக்கு. எனக்குப்பிடித்தவரிகள்மேலே.

    ReplyDelete
  3. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!/

    அருமையான மணிமொழிகளுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன்
    அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!//

    ம்ம்..

    எல்லாமே நல்ல மொழிகள். பகிர்வுக்கு நன்றி ஆயிஷாக்கா.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    அருமையான தத்துவங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தமிழ் மணம் 3

    சகோ இது நீங்கள் எழுதியதா?

    ReplyDelete
  8. //athira சொன்னது…

    அனைத்தும் அருமை.. நோட் பண்ணி வச்சு தினமும் பார்த்தாலே நாம் பாதி திருந்திடுவோம்.//

    உங்கள் வருகைக்கும்,முதல் கருத்துக்கும் நன்றி அதிரா.

    நீங்கள் சொன்ன வரியை நீக்கி விட்டேன்.

    ReplyDelete
  9. //Lakshmi சொன்னது…

    சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

    Lakshmi சொன்னது…

    சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

    //எல்லாமே நல்லா இருக்கு. எனக்குப்பிடித்த வரிகள் மேலே.//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  10. //இராஜராஜேஸ்வரி சொன்னது…

    இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!/

    அருமையான மணிமொழிகளுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.


    உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  11. முத்தான மணி மொழிகள் .எல்லாமே அற்புதம்

    ReplyDelete
  12. //Ramani சொன்னது…
    இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன்
    அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  13. //Ramani சொன்னது…

    த.ம 2//

    நன்றி.

    ReplyDelete
  14. //ஹுஸைனம்மா சொன்னது…

    //உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!//

    ம்ம்..

    எல்லாமே நல்ல மொழிகள். பகிர்வுக்கு நன்றி ஆயிஷாக்கா.//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. //அந்நியன் 2 சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    அருமையான தத்துவங்கள் வாழ்த்துக்கள்.//

    வ அலைக்கும் சலாம்

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  16. //அந்நியன் 2 சொன்னது…

    தமிழ் மணம் 3//நன்றி சகோ.


    சகோ இது நீங்கள் எழுதியதா?//

    மெயிலில் வந்தவை சகோ.போட்டோ கூகுளார்.

    எல்லாம் அருமையான மொழிகள்.அதனால் பதிவில் வெளியிட்டேன்.

    ReplyDelete
  17. //angelin சொன்னது…

    முத்தான மணி மொழிகள் .எல்லாமே அற்புதம்//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. @ayeshaji

    thanks for this blog link. good post.
    keep posting good gems like this...

    thanks once again.

    ReplyDelete
  19. மணிமொழிகள் அனைத்தும் சூப்பர்...
    அதுவும் நம்ம குருநாதர் விவேகானந்தரின் வரிகளோடு ஆரம்பித்த விதம் அருமை...

    பகிர்வுக்கு நன்றிங்க!

    ReplyDelete
  20. முத்தான மணி மொழிகள் அனைத்தும் அருமை ஆயிஷா.

    ReplyDelete
  21. //sriganeshh சொன்னது…
    @ayeshaji

    thanks for this blog link. good post.
    keep posting good gems like this...

    thanks once again.//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  22. //மாணவன் சொன்னது…

    மணிமொழிகள் அனைத்தும் சூப்பர்...
    அதுவும் நம்ம குருநாதர் விவேகானந்தரின் வரிகளோடு ஆரம்பித்த விதம் அருமை...

    பகிர்வுக்கு நன்றிங்க!//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  23. //ஸாதிகா சொன்னது…
    முத்தான மணி மொழிகள் அனைத்தும் அருமை ஆயிஷா.//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  24. மணி மொழிகள் அனைத்தும் அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  25. இதையும் படிக்கலாமே!
    http://newstbm.blogspot.com/2010/10/33.html

    அந்நியன் 2, சகோ.அய்யூப் உங்களின் ஞாபக சக்திக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. மணிமொழிகள் அனைத்துமே அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  27. //சே.குமார் சொன்னது…

    மணி மொழிகள் அனைத்தும் அருமை.
    பகிர்வுக்கு நன்றி.//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  28. //மு.ஜபருல்லாஹ் சொன்னது…

    இதையும் படிக்கலாமே!
    http://newstbm.blogspot.com/2010/10/33.html//

    இப்பதான் படித்தேன் சகோ.
    உங்கள் தளத்தில் வெளியிட்டு இருப்பது தெரிந்து
    இருந்தால் கண்டிப்பாக நான் வெளியிட்டு இருக்க மாட்டேன்.


    //அந்நியன் 2, சகோ.அய்யூப் உங்களின் ஞாபக சக்திக்கு வாழ்த்துக்கள்!//


    அந்நியன் என்றால் சும்மாவா
    நான் அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் கொடுத்த பதிலையும் படித்து இருப்பீர்கள்.


    எனக்கு பின்னூட்டமிட்ட யாரும் படிக்கவில்லை என நினைக்கிறேன் அவர்களுக்கு
    பயனுள்ளதாக இருந்திருக்கும்.


    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  29. //வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

    மணிமொழிகள் அனைத்துமே அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    //அந்நியன் என்றால் சும்மாவா என்று ஆயிஷா சகோ கூறியது.//

    இதை யார் எழுதி இருப்பார் என்று யாருக்குமே தெரியாதுலே?

    அப்படியே இருக்கட்டும்.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலத்தை சுட்டி காண்பிக்கின்றிர்கள் இதற்கு விடை சல்மா என்ற சகோதரி என்று நினைக்கிறேன்.

    ஏன் என்றால் இந்த பொன் மொழி இரண்டு வருசத்திற்கு முன்னாடி அந்த பயபுள்ளே எனக்கு மெயில் அனுப்புச்சு.

    அது எழுதியது என்றுதான் வாழ்த்தும் கிஃப்ட்டும் கொடுத்தேன்.

    யார் எழுதியாலும் படிப்பவர்களுக்கு நல்லதுதானே?

    ReplyDelete
  31. நான் இதை பிரிண்ட் அவுட் எடுத்து வச்சிட்டேன் :-)) ஒவ்வொரு வரியும் அருமை . ஒரு நாளைக்கு 2 தடவையாவது பார்க்கனும் :-))

    ReplyDelete
  32. //அந்நியன் 2 சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    வ அலைக்கும் சலாம் சகோ.

    //இதை யார் எழுதி இருப்பார் என்று யாருக்குமே தெரியாதுலே?

    அப்படியே இருக்கட்டும்.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலத்தை சுட்டி காண்பிக்கின்றிர்கள் //

    எனக்கு அனுப்பியவருக்கு மெயில் அனுப்பி கேட்டதில்,அவர் கொடுத்த லிங்க்

    பொக்கிஷங்கள்.காம்

    சகோ ஜபருல்லாஹ் அவர்கள் பதிவில் வெளியிட்டு ஒரு வருடம் ஆகிறது.


    //இதற்கு விடை சல்மா என்ற சகோதரி என்று நினைக்கிறேன்.

    ஏன் என்றால் இந்த பொன் மொழி இரண்டு வருசத்திற்கு முன்னாடி அந்த பயபுள்ளே எனக்கு மெயில் அனுப்புச்சு.

    அது எழுதியது என்றுதான் வாழ்த்தும் கிஃப்ட்டும் கொடுத்தேன்.//


    இரண்டு வருடத்திற்கு முன்னாடியே படித்துவிட்டு,
    கிஃப்ட்டும் கொடுத்து விட்டு அப்புறம் எதுக்கு இந்த கேள்வி.

    சகோ இது நீங்கள் எழுதியதா?

    போட்டு வாங்குனீங்களா சகோ அல்லது கிஃப்ட்டு கொடுக்கலாம் என்று கேட்டிங்களா ?

    //யார் எழுதியாலும் படிப்பவர்களுக்கு நல்லதுதானே?//

    அந்த நோக்கத்தில் தான் நானும் வெளியிட்டேன்.
    நல்ல விஷயம் யார்மூலமாகவும் பரவட்டும்.

    நன்றி சகோ.

    ReplyDelete
  33. //ஜெய்லானி சொன்னது…

    //நான் இதை பிரிண்ட் அவுட் எடுத்து வச்சிட்டேன் :-))
    ஒவ்வொரு வரியும் அருமை . ஒரு நாளைக்கு 2 தடவையாவது பார்க்கனும் :-))//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  34. அனைத்தும் அருமை!!

    ReplyDelete
  35. //S.Menaga சொன்னது…

    அனைத்தும் அருமை!!//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா

    ReplyDelete
  36. //இரண்டு வருடத்திற்கு முன்னாடியே படித்துவிட்டு,
    கிஃப்ட்டும் கொடுத்து விட்டு அப்புறம் எதுக்கு இந்த கேள்வி.//

    கொடுத்த கிஃப்ட்டை திருப்பி வாங்கிடலாம்னுதான்.
    (சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் சகோ)

    ReplyDelete