06 March 2011

பெண்கள் முன்னேற்றம் !

                                                             வளர்ச்சியா,வீக்கமா ?  


கடத்த  சில  ஆண்டுகளில்  கற்பனை  பண்ணிபார்க்க  முடியாத  அளவில்
பழக்கவழக்கங்களிலும்  சிந்தனைகளிலும், முக்கியமாய்  பெண்கள் நிலையில்  பெரும்  மாற்றங்கள்  வந்துள்ளன. இந்த  மாற்றங்கள் வளர்ச்சியா, வீக்கமா?  உறுதியாய்  பெருமளவில் வளர்ச்சிதான்... ஆனால், ஆங்காங்கே  வீக்கங்களும்  தோன்றி  உள்ளதை  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.



அறியாப்பருவத்தில்  திருமணம்  நடந்து, கல்வி  அறிவு  மறுக்கப்பட்டு 
உனக்கென்று  தனியாய்  எந்த  விருப்பு, வெறுப்பும்  இல்லாமல்  வாழப்பழகு 
என்று  காலங்காலமாய்  விதிக்கப்பட்டிருந்த  சட்டங்களை  உடைத்து கொண்டு  பெண்கள்  சமுதாயம்  இன்று  முன்னேறி  உள்ளது.



மிக  பெரிய  அளவில்  கல்வித்தகுதியை  பெற்றதுமல்லாமல், ஆண்களில் உலகம்  என்று  முத்திரை  குத்தப்பட்ட  பிரிவுகளான  ராணுவம், காவல்துறை, அரசியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம்  என்று  சகலத்திலும் புகுந்து  இன்றையப்  பெண்  வெற்றிக்கொடி  நாட்டி  வருகிறாள். சில பெண்கள்  லாரி, ஆட்டோ  ஓட்டுவதிலிருந்து   பி.பீ.ஒ.வில்  இரவு  வேலை பார்ப்பது, எக்ஸ்போர்ட்  கம்பெனிகளில்  பணிபுரிவது  என்று  மிக அற்புதமாய்  தங்கள்  செயல்பாடுகளை  விரிவுசெய்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்களிடையே  பரவலாகத்  தன்னம்பிக்கை, சுயமரியாதை  உணர்வுகள் அதிகரித்திருப்பதைக்  கண்கூடாக  காணமுடிகிறது.



ஆனால், இந்த  விழிப்புணர்வே  சில  பெண்களிடம்  எல்லை  மீறி வளர்ச்சிக்குப்  பதில்  வீக்கத்தைத்  தரும். நான்  சம்பாதிக்கிறேன், என் வாழ்க்கையை  என்னால்  பார்த்துக்  கொள்ள  முடியும். யாருடைய  தயவும் எனக்குத்  தேவையில்லை, என்று  சில  பெண்கள் பெற்றோரையும், கணவனையும்  குடும்பத்தையும்  தூக்கி  எறியும்  போது  வீக்கத்திற்கு ஆளாகிறார்கள்.



கல்லானாலும்  கணவன், புல்லானாலும்  புருஷன்  என்று கண்மூடித்தனமாய்  அடிமைப்பட்டிருப்பது  தேவையே  இல்லை என்றாலும், விட்டு கொடுப்பதும், அனுசரித்துச்  செல்வதும், நாளைக்கு  கண்டிப்பாய் விடியும் என்று  நம்பிக்கையுடன்  வாழ்வதும், வாழ்க்கைக்கு  அர்த்தம் சேர்க்கும்  என்பதை  மறந்து  விட்டால்  எப்படி!



வசதியாய்  வாழ  பணம்  அவசியமான  ஒன்று. ஆனால், பணம்  இருந்தால் 
சந்தோஷமாக  வாழ்ந்து  விடலாம்  என்பது  பேதைமை  அல்லவா?
இன்றைய  சமுதாயத்தில்  பலரும்,{ஆண்களையும் சேர்த்துதான்} பணத்தை 
சுற்றி  வாழ்க்கையை  பின்னத்  தொடங்கி  விட்டதை  மனித  நேயத்தின் வீழ்ச்சி.



நாம்  வாழ  பணம்  தேவை. கடுமையாக  உழைத்து  சம்பாதிப்பது  மிக அவசியம். ஆனால்,  பந்தங்களையும், பொறுப்புகளையும், கடமையையும் விலையாக  கொடுத்து  வரும்  முன்னேற்றம்  வளர்ச்சி அல்ல...
மனித  நேயத்தையும், மதிப்புகளையும்  வேர்களாகக்  கொண்ட  பெண்கள்
முன்னேற்றம்தான்  ஆரோக்கியமான  வளர்ச்சி.


 


              
                                             அன்புடன் 
                                                      ஆயிஷா.

60 comments:

  1. மிகச் சரியான ஒரு பதிவு

    ReplyDelete
  2. என் உடல் நிலை காரணமாக,/// என்னாச்சு..

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    நல்ல நடுநிலையான பதிவு

    இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்

    ஆமா சிஸ்டர் ரோம்ப நாளா ஆளே கானமே

    என்ன விஷயம்

    ReplyDelete
  4. ஆயிஷா....அருமையான பதிவு.வாழ்க்கைக்குப் பணம் தேவைதான்.ஆனால் பணமே வாழ்க்கையல்ல.பெண்கள் எல்லா வழிகளிலும் முன்னேறியிருந்தாலும் அவர்களது அடிப்படைக் குணங்களில் இப்பவும் மாற்றங்கள் குறைவுதான் !

    ReplyDelete
  5. சிந்தனையைத் தூண்டும்
    தற்போதைய நிலையில்
    அவசியம் அனைவரும்
    சிந்திக்கவேண்டிய
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //மைதீன் சொன்னது…

    மிகச் சரியான ஒரு பதிவு//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி சகோ

    ReplyDelete
  7. //வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

    என் உடல் நிலை காரணமாக,/// என்னாச்சு..//

    உடல் நிலை சரி இல்லாமல் ஆகி விட்டது.

    உங்கள் அன்புக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. ஹைதர் அலி சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    வ அழைக்கும் சலாம் வரஹ்..

    //நல்ல நடுநிலையான பதிவு

    இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி சகோ.


    //ஆமா சிஸ்டர் ரோம்ப நாளா ஆளே கானமே

    என்ன விஷயம்//

    எனக்கும், பையனுக்கும் உடம்பு சரி இல்லாமல்

    ஆகி விட்டது.அதனால் தான் பிளாக் பக்கம்

    வரவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி சகோ.

    துஆ செய்யவும்.

    ReplyDelete
  9. ஹேமா சொன்னது…

    ஆயிஷா....அருமையான பதிவு.வாழ்க்கைக்குப் பணம் தேவைதான்.ஆனால் பணமே வாழ்க்கையல்ல.பெண்கள் எல்லா வழிகளிலும் முன்னேறியிருந்தாலும் அவர்களது அடிப்படைக் குணங்களில் இப்பவும் மாற்றங்கள் குறைவுதான் !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி ஹேமா.

    ReplyDelete
  10. //Ramani சொன்னது…

    சிந்தனையைத் தூண்டும்
    தற்போதைய நிலையில்
    அவசியம் அனைவரும்
    சிந்திக்கவேண்டிய
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்

    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  11. பகிர்வு அருமை ஆயிஷா.ரொம்ப நாளாய் பதிவு போடலை.

    ReplyDelete
  12. வாங்க வாங்க பையனுக்கு என்னாச்சு
    பத்திரம்
    வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு

    அடிக்கடி வாங்க

    ReplyDelete
  13. //வளர்ச்சியா,வீக்கமா ?// நல்ல அலசல்.. மீண்டும் இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  14. சொல்லவந்த விஷயத்தை அழகாக, நாசூக்காக, யாருமே ஏற்றுக்கொள்ளும் விதமாக சொன்னவிதம் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. தேவையான தகவல்களை தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க சகோ...

    ReplyDelete
  16. /பந்தங்களையும், பொறுப்புகளையும், கடமையையும் விலையாக கொடுத்து வரும் முன்னேற்றம் வளர்ச்சி அல்ல...
    மனித நேயத்தையும், மதிப்புகளையும் வேர்களாகக் கொண்ட பெண்கள்
    முன்னேற்றம்தான் ஆரோக்கியமான வளர்ச்சி./

    அருமையான கருத்து... ஒவ்வொரு வார்த்தையும் முத்து முத்தாக இருக்கிறது. நல்ல பதிவு.

    ReplyDelete
  17. சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. ஸலாம் சகோ
    வீக்கங்களை அத்துனை எளிதாக எடுத்துக் கோள்ள முடியாது சகோ,அது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.அதிலும் அர்த்தமில்லா வீக்கங்களை என்னதான் சொல்வது...

    ஆண்கள் பாடு திண்டாட்டம்தான்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    நலமுடன் வாழ துவா செய்கின்றேன்,பதிவு அருமை நல்லவிதமாக எழுதி இருக்கின்றிர்கள் வாழ்த்துக்கள்.
    என்னுடைய கருத்து என்னவென்றால் பெண்கள் தற்பொழுது ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் வேலை செய்வதை எதிர்க்கிறேன்.

    ஒரு ஆண் தன்னந்தனியாக எந்த வேலைக்கும் போயிட்டு வந்தாலும் சமூகம் ஒன்றும் சொல்லாது அது பகலானாலும் சரி அல்லது இரவானாலும் சரி,அதே நேரத்தில் பெண் அப்படி அல்ல,அவளுக்கென்று சில வரைமுறை இருக்கு அதைப் பேணி நடந்தாலே அவளுக்கும் அவளின் குடும்பத்திற்கும் நன்மை பயக்கும்.

    காலத்தின் கொடுமை கணவனும் மனைவியும் தனித்தனியாகவே வேலைப் பார்த்து தமது குடும்பத்தை வழி நடத்தி செல்லக் கூடிய கட்டாயத்தில் தள்ளப் பட்டுள்ளார்,இதுக்கெல்லாம் காரணம் பணம்,அதி நவீன வாழ்க்கையில் நாம் அன்றாட புனங்கும் பொருளை வாங்கக் கூட ஆயிர ருபாய் நோட்டு தேவைப் படுகிறது.

    பெண்ணானவள் கணவனுக்கு நல்ல மனைவியாகவும்,பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாகவும்,மாமியாளுக்கு நல்ல மருமகளாகவும்,வீட்டிலியே இருப்பதுதான் அவளுக்குப் பெருமை,மலரால் சூழப்பட்ட அவள் பலரால் பல ஏச்சுக்கும் ஆளாகாமல் மல்லிகை மலரின் அற்ப்புத மலரைப் போல் அவளின் மனம் வீட்டிலியே மனக்கனும்.

    ஆண்களாகிய நாம் சபதம் எடுப்போம் இனி பெண்களை வேலைக்கு அனுப்புவதில்லை என்று.

    உங்களுக்காக சில சமூக பொறுப்புள்ள பதவிகள் தரப்படுகின்றது,...ஏற்று, வெற்றி கொள்ளுங்கள்.

    ஒரு மருத்துவராய் திகழ்ந்து ஏழைகளின் நோயினைப் போக்கிடுங்கள்.
    ஒரு மத போதகராக இருந்து நன்மை பயக்கும் செய்திகளை எத்தி வையுங்கள்.
    ஒரு நீதி தேவதையாக சேரில் அமர்ந்து அநீதியை ஒழியுங்கள்.
    ஒரு வக்கீலாக உலா வந்து நீதிக்கு குரல் கொடுங்கள்.
    ஒரு சிறந்த ஆசிரியராக திகழ்ந்து கல்விக்கு மெருகூட்டுங்கள்.
    ஒரு மாவட்ட ஆட்ச்சியர் பொறுப்பில் சேர்ந்து வறுமையை போக்குங்கள்.
    எத்தனையோ சுய தொழில்கள் இருக்கின்றது அதை வீட்டினுள் வைத்தே கை தேருங்கள்.

    பெண்கள் இந்த துறைகளில் மட்டும் சேர்வதற்கு முயற்சி எடுக்கணும்.

    இரவு நேர வேலை,ஆண்கள் குழுமி இருக்கும் அழுவலகம்,கால் செண்டர்,கை செண்டர்னு போகாமல் கவுரவமான மற்றும் பாது காப்பான வேலையை தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.

    ReplyDelete
  20. சரியாக சொல்லி இருக்கின்றிர்கள் ஆயிஷா

    ReplyDelete
  21. நல்ல அருமையான பதிவு!!

    // ஏற்கனவே இந்த பதிவை {இனிய வசந்தத்தில} வெளியிட்டுள்ளேன.//

    வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  22. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

    ReplyDelete
  23. //நாம் வாழ பணம் தேவை. கடுமையாக உழைத்து சம்பாதிப்பது மிக அவசியம். ஆனால், பந்தங்களையும், பொறுப்புகளையும், கடமையையும் விலையாக கொடுத்து வரும் முன்னேற்றம் வளர்ச்சி அல்ல...//
    நல்ல பல கருத்துக்களை நாசூக்காக சொல்லிருக்கீங்க.

    ReplyDelete
  24. வீக்கம் மாறி ஆக்கப் பாதையில் அடியெடுத்து வைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. பெண்மை
    ஆண்மை

    குறில்
    நெடில் எனவே
    வகைப்படுத்தப்பட்ட
    உண்மை..

    குறிலில் இருந்துதான்
    நெடிலின் கால்
    நெடிலின் காலும்
    உணர்ந்து உடையும்
    குறில் எனும்
    பெண்மை முன்...


    வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  26. //asiya omar சொன்னது…

    பகிர்வு அருமை ஆயிஷா.ரொம்ப நாளாய் பதிவு போடலை.//

    உடல்நிலை காரணமாக பதிவு போடவில்லை.

    உங்கள் வருகைக்கும், அன்புக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  27. //Speed Master சொன்னது…

    வாங்க வாங்க பையனுக்கு என்னாச்சு பத்திரம்
    வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு

    அடிக்கடி வாங்க//


    பையன் நல்ல சுகம். உங்கள் அன்புக்கு நன்றி சகோ.

    இப்பவே வெயில் 100 டிகிரி. ஏப்ரல்,மே எப்படி
    தாங்க போறமோ ?

    ReplyDelete
  28. //வசந்தா நடேசன் சொன்னது…

    //வளர்ச்சியா,வீக்கமா ?// நல்ல அலசல்.. மீண்டும் இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி..//


    உங்கள் வருகைக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  29. //வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

    சொல்லவந்த விஷயத்தை அழகாக, நாசூக்காக, யாருமே ஏற்றுக்கொள்ளும் விதமாக சொன்னவிதம் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி ஐயா.

    ReplyDelete
  30. //மாணவன் சொன்னது…

    தேவையான தகவல்களை தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க சகோ...//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சிம்பு.

    ReplyDelete
  31. //enrenrum16 சொன்னது…

    /பந்தங்களையும், பொறுப்புகளையும், கடமையையும் விலையாக கொடுத்து வரும் முன்னேற்றம் வளர்ச்சி அல்ல...
    மனித நேயத்தையும், மதிப்புகளையும் வேர்களாகக் கொண்ட பெண்கள் முன்னேற்றம்தான் ஆரோக்கியமான வளர்ச்சி./

    அருமையான கருத்து... ஒவ்வொரு வார்த்தையும் முத்து முத்தாக இருக்கிறது. நல்ல பதிவு.//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  32. //சி.கருணாகரசு சொன்னது…

    சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.//

    உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  33. RAZIN ABDUL RAHMAN சொன்னது…

    ஸலாம் சகோ
    வீக்கங்களை அத்துனை எளிதாக எடுத்துக் கோள்ள முடியாது சகோ,அது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.அதிலும் அர்த்தமில்லா வீக்கங்களை என்னதான் சொல்வது...

    ஆண்கள் பாடு திண்டாட்டம்தான்...//

    வ அழைக்கும் சலாம்

    நல்ல கருத்தை சொல்லி இருக்கீர்கள் சகோ

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  34. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    நலமுடன் வாழ துவா செய்கின்றேன்,பதிவு அருமை நல்லவிதமாக எழுதி இருக்கின்றிர்கள் வாழ்த்துக்கள்.

    வ அழைக்கும் சலாம் சகோ.

    உங்கள் துஆவுக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சகோ.


    உங்கள் கருத்தை அருமையாக விளக்கி உள்ளீர்கள். நன்றி சகோ.பெண்கள் எந்த துறையில் முன்னேறினாலும் வளர்ச்சியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர வீக்கமாக இருக்க கூடாது.

    ReplyDelete
  35. //ஸாதிகா சொன்னது…

    சரியாக சொல்லி இருக்கின்றிர்கள் ஆயிஷா//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  36. //எம் அப்துல் காதர் சொன்னது…

    நல்ல அருமையான பதிவு!!

    // ஏற்கனவே இந்த பதிவை {இனிய வசந்தத்தில} வெளியிட்டுள்ளேன.//

    வாழ்த்துகள் சகோ.

    உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  37. //பாரத்... பாரதி... சொன்னது…

    வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..//


    நன்றி..நன்றி..நன்றி..

    ReplyDelete
  38. //FOOD சொன்னது…

    //நாம் வாழ பணம் தேவை. கடுமையாக உழைத்து சம்பாதிப்பது மிக அவசியம். ஆனால், பந்தங்களையும், பொறுப்புகளையும், கடமையையும் விலையாக கொடுத்து வரும் முன்னேற்றம் வளர்ச்சி அல்ல...//
    நல்ல பல கருத்துக்களை நாசூக்காக சொல்லிருக்கீங்க.//

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  39. //இராஜராஜேஸ்வரி சொன்னது…

    வீக்கம் மாறி ஆக்கப் பாதையில் அடியெடுத்து வைக்க வாழ்த்துக்கள்.//

    ரெம்ப நன்றி.

    ReplyDelete
  40. சந்தான சங்கர் சொன்னது…

    பெண்மை
    ஆண்மை

    குறில்
    நெடில் எனவே
    வகைப்படுத்தப்பட்ட
    உண்மை..

    குறிலில் இருந்துதான்
    நெடிலின் கால்
    நெடிலின் காலும்
    உணர்ந்து உடையும்
    குறில் எனும்
    பெண்மை முன்...


    வாழ்த்துக்கள் தோழி..//

    உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  41. நல்ல அலசல் ஆயிஷா....சில நேரங்களில் வளர்ச்சி போலத் தோன்றினாலும் பல நேரங்களில் வீக்கம் போலத்தான் தெரிகிறது....காலப்போக்கில் எல்லாம் மாறும் என்று நம்புவோம்..நம்புவோம்..

    ReplyDelete
  42. //பாச மலர் / Paasa Malar சொன்னது…

    நல்ல அலசல் ஆயிஷா....சில நேரங்களில் வளர்ச்சி போலத் தோன்றினாலும் பல நேரங்களில் வீக்கம் போலத்தான் தெரிகிறது....காலப்போக்கில் எல்லாம் மாறும் என்று நம்புவோம்..நம்புவோம்..//


    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  43. அக்கறையான பதிவுங்க.. நீங்க சொல்றது உண்மை தான், பெண்கள் முன்னேற்றம்.. ஒரு பக்கம் சந்தோசம் தந்தாலும்... சில குடும்பங்களில் நடக்கும், அவசர முடிவுகள்.. வருத்தத்தை தான் தருகிறது..

    பகிர்வுக்கு நன்றிங்க :)

    ReplyDelete
  44. //Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

    அக்கறையான பதிவுங்க.. நீங்க சொல்றது உண்மை தான், பெண்கள் முன்னேற்றம்.. ஒரு பக்கம் சந்தோசம் தந்தாலும்... சில குடும்பங்களில் நடக்கும், அவசர முடிவுகள்.. வருத்தத்தை தான் தருகிறது..

    பகிர்வுக்கு நன்றிங்க :)//


    வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி ஆனந்தி.

    ReplyDelete
  45. பொறுப்போடு கூடிய சுதந்திரம் தேவைன்னு நல்லா சொல்லி இருகீங்க ஆயிஷா..

    ReplyDelete
  46. //தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

    பொறுப்போடு கூடிய சுதந்திரம் தேவைன்னு நல்லா சொல்லி இருகீங்க ஆயிஷா..//

    வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி அக்கா.

    ReplyDelete
  47. //யாழ். நிதர்சனன் சொன்னது…

    ஆயிஷா..அருமையான பதிவு//

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ..தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  48. நல்ல பதிவு தோழி

    ReplyDelete
  49. //நாம் வாழ பணம் தேவை. கடுமையாக உழைத்து சம்பாதிப்பது மிக அவசியம். ஆனால், பந்தங்களையும், பொறுப்புகளையும், கடமையையும் விலையாக கொடுத்து வரும் முன்னேற்றம் வளர்ச்சி அல்ல//.

    ராக்கெட் வேக விலைவாசி உயர்வு...வேறு வழி இல்லை. பி.பி.ஓ நிறுவனங்களில் இரவுப்பணியில் சிக்கித்தவிக்கும் நடுத்தர மற்றும் ஏழை பணியாளர் நிலை..மிகக்கொடிது. கண்கூடாக பார்த்து வருகிறேன்..!!

    ReplyDelete
  50. என்ன ஆச்சு பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு
    வேளைப் பளு காரணமாய் இருக்கும் என நினைக்கிறேன்
    தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  51. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்
    படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
    போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/1.html

    ReplyDelete
  52. நல்ல பதிவு. உடல் நலமுடன் தொடர இறைவனை வேண்டுகின்றேன்

    ReplyDelete
  53. அன்புள்ள ஆனந்திக்கு
    உங்களுக்கு இன்னொரு கோரிக்கையும்..
    தங்களைப்போலவே
    மிக நல்ல பதிவுகளாகத் தந்து வந்த
    சகோதரி.ஆயிஷா அபுல் அவர்களும்
    உங்களைப்போலவே மௌனம்
    கலைத்து பதிவுலகுள் வந்து
    பதிவுகள் தந்தால் மிகவும்
    மகிழ்ச்சி கொள்வேன்

    ReplyDelete
  54. //reena சொன்னது…

    நல்ல பதிவு தோழி

    நன்றி தோழி.//

    ReplyDelete
  55. // சிவகுமார் ! சொன்னது… //

    //நாம் வாழ பணம் தேவை. கடுமையாக உழைத்து சம்பாதிப்பது மிக அவசியம். ஆனால், பந்தங்களையும், பொறுப்புகளையும், கடமையையும் விலையாக கொடுத்து வரும் முன்னேற்றம் வளர்ச்சி அல்ல//.

    ராக்கெட் வேக விலைவாசி உயர்வு...வேறு வழி இல்லை. பி.பி.ஓ நிறுவனங்களில் இரவுப்பணியில் சிக்கித்தவிக்கும் நடுத்தர மற்றும் ஏழை பணியாளர் நிலை..மிகக்கொடிது. கண்கூடாக பார்த்து வருகிறேன்..!!


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  56. //Lakshmi சொன்னது…

    உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்
    படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
    போது பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.com/2011/06/1.html//

    நன்றி லட்சுமி அம்மா.

    ReplyDelete
  57. //ஒ.நூருல் அமீன் சொன்னது…

    நல்ல பதிவு. உடல் நலமுடன் தொடர இறைவனை வேண்டுகின்றேன்//

    தங்களின் வருகைக்கும்,துஆவிற்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  58. //Ramani சொன்னது…

    என்ன ஆச்சு பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு
    வேளைப் பளு காரணமாய் இருக்கும் என நினைக்கிறேன்
    தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...//

    //Ramani சொன்னது…

    அன்புள்ள ஆனந்திக்கு
    உங்களுக்கு இன்னொரு கோரிக்கையும்..
    தங்களைப்போலவே
    மிக நல்ல பதிவுகளாகத் தந்து வந்த
    சகோதரி.ஆயிஷா அபுல் அவர்களும்
    உங்களைப்போலவே மௌனம்
    கலைத்து பதிவுலகுள் வந்து
    பதிவுகள் தந்தால் மிகவும்
    மகிழ்ச்சி கொள்வேன்//


    சகோதரர் ரமணி அவர்கள்
    உங்கள் அன்புக்கு ரெம்ப நன்றி.
    நானும் எங்களுடைய நோன்பு கழித்து
    பதிவிடலாம் என நினைத்து இருக்கிறேன் .இன்ஷா அல்லாஹ், {இறைவன் நாடினால்}

    ReplyDelete
  59. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete