27 January 2011

கண்ணதாசன் அவர்கள் மணிமொழிகள் !


தேவைப்பட்டாலொழியக்    கோபம்  கொள்ளாதே.


நன்மை    செய்தவனுக்கு  நன்றி  காட்டு.


தீமை  செய்தவனை  மறந்து  விடு.


எதையும்  சாதிக்க  நிதானம், அற்புதமான  ஆயுதம்.


வென்றவனுக்கு  மலையும்  கடுகு. தோற்றவனுக்கு  கடுகும்  மலை.

ஆணவமும்,  அழிவும்  இறைட்டைக்  குழந்தைகள்.

அற்ப  ஆசைகள்  பெரிய  வெற்றியைத்  தேடித்  தருவதில்லை.

சோம்பி  நிற்கும்  மனிதனிடம்  துன்பங்கள்  உற்ப்பத்தியாகின்றன.

தாய்ப்பால்  கொடுக்காத  குழந்தைகளுக்கு  தாய்ப்பாசம்  இருக்காது.

இலக்கியங்கள்  எல்லாம்  மனிதர்களுடைய  அனுபவத்தில்  உதித்தவையே.

நீயாகவே  முடிவு  செய். நீயாகவே  செயல்  படு.

முடிந்தால்  நன்மை  செய். தீமை  செய்யாதே.

சினிமா-பயன்  படுத்த  தெரிந்தவனுக்கு  அற்புதமான  ஆயுதம்.

சிறு  வயதில்  வரவு  வையுங்கள்.  பெரிய  வயதில்  செலவளிங்கள்.

நம்  மனதளவு  எவ்வளவோ அவ்வளவு  தான்  உலகம்.

வாழ்வில்  நகைச்  சுவை  வேண்டும். சிரிக்காதவன்  மிருகம்.

அருங்குறள்  1330-ம்  கடலளவு.  அதன்  முன்  உலகம் கடுகளவு.

வாழ்ககையின்  ஒவ்வொரு  அணுவையும்  அனுபவிக்க  வேண்டும்.

எதையும்  தெரியாது  என்று  சொல்லாமல்  தெரியுமென  சொல்.

வாழ்வில்  துணிவு   வேண்டும்.

விதி  என்னும்  மூலத்தில்  இருந்து   முளைத்த  கிளையே  மதி.

காற்றுள்ள  போதே  தூற்றிக்கணும்  என்பதை  கவனத்தில்  வை.

வாழ்க்கையில்  முன்னேற  எந்த  விமர்சனத்தையும்  தாங்கிக்கொள்.

திறமை  உள்ளவனுக்கு  வாய்ப்பு  தூரமில்லை.
                                    

41 comments:

  1. அனைத்து மணிமொழிகளுமே அருமை,

    இதேபோன்று நாம் வாழ்க்கையிலும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்

    பகிர்வுக்கு நன்றிங்க சகோ...

    ReplyDelete
  2. கண்ணதாசன் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றை பகிர்ந்துகொள்கிறேன்:

    “என்ன செய்கிறாய் இப்போது,இனிமேல் நானும் கேட்கலாம் ஏனெனறால் எனக்கும் வேலை கிடைத்துவிட்டது”

    ReplyDelete
  3. அனைத்தும் மிக அருமை இருந்தாலும் எண்ணை மிகவும் கவர்ந்த வரிகள்
    "வாழ்ககையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும்"

    ReplyDelete
  4. //எதையும் தெரியாது என்று சொல்லாமல் தெரியுமென சொல்.//

    இந்த சொல்தான் மலையாளிகளின் சூத்திரம்.....
    [இது என் அனுபவம்]

    ReplyDelete
  5. //தாய்ப்பால் கொடுக்காத // ? கொடுக்கப்படாத‌ :)

    //வாழ்ககையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும்// புரியல‌ :(
    ஒரு சிலதைத் தவிர மற்றதெல்லாம் ஓக்கே.

    ReplyDelete
  6. அனைத்தும் நல்மணிகள்.கடைபிடிக்க முயற்ச்சித்தால் நலமே விளையும்..

    ReplyDelete
  7. மணிமொழிகள் - மனிதர்களுக்கான பொக்கிஷங்கள்.

    ReplyDelete
  8. ஏற்கனவே படித்திருந்தாலும் ,நினைவு படுத்தியதற்கு நன்றிகள் பல .

    ReplyDelete
  9. //வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை//

    //இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவையே//

    Super! :-)

    ReplyDelete
  10. என்றும் ஜீவனுள்ள பொன் மொழிகள் பகிர்வுக்கு நன்றி ஆயிஷா

    ReplyDelete
  11. அருமையான கலெக்ஷன் சகோ...வாழ்த்துக்கள்

    இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    தேவைக்கு மேலே பொருளும்.
    திறமைக்கு மேலே புகழும்,
    கிடைத்து விட்டால்...
    பார்வையில் படுவதெல்லாம் சாதரணமாக தெரியும்.

    கவியரசு கண்ணதாசன்.

    ReplyDelete
  12. //sakthistudycentre-கருன் சொன்னது…

    Nice..//

    வாங்க சகோ !

    Me the first. சொல்லவில்லையே.


    உங்கள் முதல் வருகைக்கு,என் முதல் நன்றி உங்களுக்குத்தான்.

    ReplyDelete
  13. //சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்ப்பத்தியாகின்றன.//

    உண்மையோ உண்மை!

    //வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.//

    கஷ்டம்தான் :)

    பகிர்வுக்கு நன்றி ஆயிஷா!

    ReplyDelete
  14. நன்றி sakthistudycentre-கருன்,

    நன்றி மாணவன்,

    நன்றி சசிகுமார்,

    நன்றி சே.குமார்

    நன்றி MANO நாஞ்சில் மனோ,

    நன்றி அரபுத்தமிழன்,

    நன்றி அன்புடன் மலிக்கா,

    நன்றி தமிழ் உதயம்,

    நன்றி மைதீன்,

    நன்றி ஜீ,

    நன்றி Chitra,

    நன்றி தமிழரசி,

    நன்றி அந்நியன் 2,

    நன்றி S.Menaga,

    நன்றி சுந்தரா,


    உங்கள் அனைவருடைய வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றிங்க...தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  15. இதேபோன்று நாம் வாழ்க்கையிலும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. நன்றி நண்பரே உங்களது பதிவை படித்தேன். உடன் தங்களை follow செய்து விட்டேன்.

    ReplyDelete
  18. அருமையான கருத்துக்களை நன்றாகவே தொகுத்துள்ளீர்கள்! தாமதமாக வந்துவிட்டேன்! இதோ ஓட்டுக்களும் போடுகிறேன்!

    ReplyDelete
  19. நல்ல விஷயங்களின் தொகுப்பு.. மிக கவர்ந்தவை சிறு வயதில் வரவு வையுங்கள். பெரிய வயதில் செலவளிங்கள்.

    நம் மனதளவு எவ்வளவோ அவ்வளவு தான் உலகம்.

    ReplyDelete
  20. நல்ல சிந்தனைகள்

    ReplyDelete
  21. நன்றி இளம் தூயவன்,


    நன்றி எல் கே,


    நன்றி செந்தில் குமார்,

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி.


    நன்றி மாத்தி யோசி,


    நன்றி பாரத்... பாரதி..,


    நன்றி Riyas


    உங்கள் அனைவருடைய வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றிங்க...தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  22. மணிமொழிகள் அத்தனையும் மணியானவை தாங்க..
    பகிர்வுக்கு நன்றி..

    "தேவைப் பட்டாலொழிய கோவப்படாதே.." சூப்பர்..

    ReplyDelete
  23. //திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு தூரமில்லை.//
    நல்லா இருக்கு வரிகள்.

    ReplyDelete
  24. ஸலாம் சகோ..
    மணிமொழிகள் அருமை..

    நிறைய தேர்வு செய்து எழுதி இருக்கிறீர்கள்..ஏதாச்சும் புத்தகத்தில் கிடைத்ததா சகொ..

    பயனுள்ள செய்திகளை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் பல..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  25. அனைத்தும் மிக அருமை.

    ReplyDelete
  26. நன்றி அன்புடன் ஆனந்தி,


    நன்றி vanathy,


    நன்றி RAZIN ABDUL RAHMAN,

    வ அழைக்கும் சலாம்
    புத்தகத்தில் கிடைத்தது சகொ..


    //வாழ்த்துக்கள் பல..//ஒரு வாழ்த்து போதும்,

    சகோ..சகொ..எது கரெக்ட் பிழை எழுத்தாளர் சொல்லுங்கள்.



    நன்றி Kanchana Radhakrishnan,



    உங்கள் அனைவருடைய வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றிங்க...தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  27. ஆயிஷா,

    அத்தனை முத்துக்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி

    ஜேகே

    ReplyDelete
  28. எந்நாளும் எல்லாருக்கும் பொருந்திடும் பொன்மொழிகள்...நல்ல பகிர்வு ஆயிஷா...

    ReplyDelete
  29. /சகோ..சகொ..எது கரெக்ட் பிழை எழுத்தாளர் சொல்லுங்கள்./

    ஒரு வாழ்த்துதான் சகோ,ஆனா ஒருவரை வாழ்த்தும்போது உதாரணமாக,பிறந்தநாள் வாழ்த்து,அப்டீன்னா சொல்லுவோம்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்னுதான சொல்லுவோம்..அது பன்மையாயிட்டதால நான் அதை பல என்ற பன்மை குறிச்சொல்லுடன் பொருத்திவிட்டேன்..அதான்...

    ம்ம்...சும்மா போரவனையும் வம்புக்கு இழுக்குறது,,,

    தேவைப்பட்டாலொழியக் கோபம் - "க்" வராது சகோ...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  30. //இன்றைய கவிதை சொன்னது…//

    நன்றி ஜேகே,


    //enrenrum16 சொன்னது…//
    அஸ்ஸலாமு அழைக்கும்

    நன்றி பானு,

    என் பெயர் ஆயிஷா பானு தான்.
    உங்க ful நேம்.



    //RAZIN ABDUL RAHMAN சொன்னது…//

    அஸ்ஸலாமு அழைக்கும் சகோ..

    //ம்ம்...சும்மா போரவனையும் வம்புக்கு இழுக்குறது,,,// நானா .......நீங்க தான் சகோ..


    உங்கள் அனைவருடைய வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றிங்க...தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  31. "ஜனநாயகம் சர்வாதிகாரம் வித்தியாசம் என்ன? சர்வாதிகாரம் ஒருவனுக்கு மட்டும் பயந்து சாவது, ஜனநாயகம் ஒவ்வொருவனுக்கும் பயந்து சாவது" - இதுவும் கண்ணதாசன் சொன்னதுதான்
    nukthasulthan@gmail .com

    ReplyDelete
  32. கண்ணதாசன் பாடல்கள் மனதை மயக்கும் என்றால்,அவரது பொன்மொழிகள்,சிந்தையைச் சீராக்கும் .
    ஒவ்வொரு வரியும் மனதில் இருத்த வேண்டியதாய் அமைந்திருக்கிறது.
    தொகுத்த்து தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  33. நன்றி faqirsulthan,


    நன்றி goma


    உங்கள் அனைவருடைய வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றிங்க...தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  34. வாழ்வியலையே சுருக்கிப் பொன்மொழியாக்கினமாதிரி இருக்கு !

    ReplyDelete
  35. //ஹேமா சொன்னது…

    வாழ்வியலையே சுருக்கிப் பொன்மொழியாக்கினமாதிரி இருக்கு !//


    நன்றி ஹேமா

    ReplyDelete
  36. நன்றாக தொகுத்துள்ளீர்கள்...அனைத்தும் மிக அருமை!

    ReplyDelete
  37. மிக அருமை
    ஒரு ஒரு வரியும் உண்மையும் கூட

    ReplyDelete