22 January 2011

பெட்ரோல் விலை உயர்வு !

எல்லா விலைவாசி உயர்வையும் எழுதி விட்டேன்.பெட்ரோல் விலைவாசி 
உயர்வையும் படிங்க !   


ஏற்கனவே  விலைவாசி  உயர்வால் மக்கள் வயிறு எரிந்து கொண்டிருந்தன.
பெட்ரோல் விலையையும் ஏற்றி இன்னும் அதிகமாக எரிய வைத்துவிட்டார்கள். 

அடிக்கடி பெட்ரோல் விலையை ஏற்றி, எண்ணெய் நிறுவனங்கள் மக்களை 
கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கின்றன.மத்திய அரசு இதைப் பற்றி அலட்டிக் 
கொள்வதாகவே தெரிவில்லை.என்ன விலை விற்றாலும் நாமும் பெட்ரோல் 
போட்டு வண்டி ஓட்டுவதை நிறுத்தப் போவதில்லை என்று அவர்களுக்கு 
தெரியும்.


குறைந்தபட்சம் மாநில அரசுகள்,பெட்ரோலுக்கு விதிக்கும் வரியினைக் 
குறைத்தாலே ஓரளவுக்கு சமாளிக்கலாம்.ஒவ்வொரு பெட்ரோல் விலை   ஏற்றத்தின் போதும்,போர்க்குரல் எழுப்பும் கம்யூனிஸ்டுகள் கூட இம்முறை 
மவுனமாக  இருப்பது ஏனென்று மக்களுக்கு புரியவில்லை.

பெட்ரோல் விலையை உயர்த்தினா,எல்லா விலைவாசியும் இன்னும் அதிகமாக ஏறிடுது.மக்கள் இரவு தூங்கும் முன்,காலையில் எழுந்திருச்சா 
என்னென்ன பொருளுக்கெல்லாம் கவர்மென்ட் விலையை ஏத்திடுவான்களோ என்ற சிந்தனையில் தூங்குகிறார்கள்.அதென்னமோ தெரிலீங்க,நடு
ராத்திரியில் தான் இந்த விலை உயர்வெல்லாம் அமுலுக்கு வருது.

கச்சா எண்ணெய் உலக மார்க்கெட்டில் ரெம்ப குறைவான விலையில் தான் 
இருக்கிறது.ஆனால் அரசு அதைக் காரணம் காட்டி எப்போதும் பெட்ரோல் 
விலையை  உயர்த்துகிறது.பொது மக்களின் நலன்காக்கும் அரசாங்கமாக 
இருந்தால் மற்ற நாடுகளில் உள்ளது போல இங்கேயும் விலை குறைவாக 
கொடுக்கலாம்.

எண்ணெய் கம்பெனிகளுக்கும்,முதலாளிகளுக்கும் சாதகமாக இருக்கும் 
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு,இந்த விலை ஏற்றத்தை 
மக்கள் மீது திணித்து அவர்கள் லாபம் பார்க்க வழிவகை செய்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கிற மாதிரி அரசாங்கம் கொஞ்சம் 
கொஞ்சமாக விலை ஏற்றி கொல்லுது. நீ சீக்கிரம் செத்துடக்கூடாது.ஆனா 
சாகுறவரைக்கும் நீ சித்திரவதை அனுபவிக்கனும் என்று சொல்வது மாதிரி 
இருக்கு என மக்கள் புலம்புகிறார்கள்.

மக்களுக்கு  வருமானத்துக்கு வழி செய்து கொடுப்பதில்லை அரசாங்கம்.
ஆனால் இருக்கிற காசையும் பிடுங்கி கொள்வதற்கு இது மாதிரி 
கன்னாபின்னான்னு விளையேத்துது.

அரிசி,கோதுமை,பருப்பு,எண்ணெய் போக்குவரத்து செலவு,படிப்பு செலவு 
மருத்துவச்செலவு,வீட்டு வாடகை உயர்வு போன்ற செலவுகளால்
நாள்தோறும் சந்தோஷத்தில் இருந்த மக்களை,பெட்ரோல் விலையை ஏற்றி 
இன்னும் அதிகமாக சந்தோஷத்தை கொடுத்து இருக்கு அரசாங்கம்.
                                                                                                                                    மக்களோட விடிவு அவர்கள்  கையில் தான்.
                          

40 comments:

  1. உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு ..
    Thanks...
    http://sakthistudycentre.blogspot.com/

    ReplyDelete
  2. நல்ல பதிவு ஆயிஷா.

    ReplyDelete
  3. தேர்தல் நேரத்தில் - கட்சிகள் ஏற்படுத்தும் உணர்ச்சி சுனாமிகளுக்கு பலியாகி விடாமல், சிந்தித்து முடிவு எடுத்தால் போதுமே.

    ReplyDelete
  4. தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக... சகோ.ஆயிஷா,

    //பெட்ரோல் விலையை உயர்த்தினா,எல்லா விலைவாசியும் இன்னும் அதிகமாக ஏறிடுது.//--ஏறுமே.. இதுதானே இந்த விலைவாசி உயர்வில் பெரிய பாதிப்பு.

    தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறவேண்டி அரசு செய்யும் இந்த களவாணித்தனத்தில் மக்கள் பகடைக்காய்.

    ஹூம்... என்று நிறுத்தப்படுமோ இந்த பகல்கொள்ளை.

    ReplyDelete
  5. //ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு,இந்த விலை ஏற்றத்தை
    மக்கள் மீது திணித்து அவர்கள் லாபம் பார்க்க வழிவகை செய்கிறது.///


    உண்மை.. உண்மை..

    உண்மை..
    உண்மை.. உண்மை..

    ReplyDelete
  6. ஸலாம் சகோ ஆயிஷா.

    பெட்ரோல் விலை உயர்வு..பத்தி நல்லாவே சொல்லி இருக்கீங்க..பெட்ரோல் மீது உள்ள வரிகளில் 30% மேலாக மாநில அரசின் வரிகளே இருக்கிறது..மத்திய அரசு விலை ஏற்றினால்,எதில் எதிலெல்லாமோ சலுகை தரும் நம்ம தாத்தா அரசு,பெட்ரோல் வரியில் சலுகை தந்து,மக்களை காக்கலாமே...செய்வார்களா??? ம்ம்ஹும்..

    அப்ரம்..சில திருத்தம்ஸ்
    கொள்வதாகவே தெரிவில்லை - தெரியவில்லை
    விளையேத்துது - விலையேத்துது

    ஆமா இனிய வசந்தம் ப்ளாக் உங்களோடதுதானா??
    அதென்ன பினாமி ப்ளாக்கா???

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  7. தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக...

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. //sakthistudycentre-கருன் சொன்னது…

    Me the first//

    வாங்க சகோ,

    உங்கள் முதல் வருகைக்கு,என் முதல் நன்றி உங்களுக்குத்தான்.

    ReplyDelete
  9. //sakthistudycentre-கருன் சொன்னது…

    உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு ..
    Thanks...//

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  10. //ராமலக்ஷ்மி சொன்னது…

    நல்ல பதிவு ஆயிஷா.//


    வாங்க ராமலக்ஷ்மி!

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  11. //Chitra சொன்னது…

    தேர்தல் நேரத்தில் - கட்சிகள் ஏற்படுத்தும் உணர்ச்சி சுனாமிகளுக்கு பலியாகி விடாமல், சிந்தித்து முடிவு எடுத்தால் போதுமே.//

    வாங்க Chitra !

    நல்ல பின்னூட்டம்.மக்கள் தான் சிந்திக்கணும்.

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  12. //முஹம்மத் ஆஷிக் சொன்னது…
    தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக... சகோ.ஆயிஷா,//

    வாங்க சகோ,

    உங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,அவனின் கருணையும் உண்டாவதாக.

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  13. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…//

    வாங்க சகோ,

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  14. //RAZIN ABDUL RAHMAN சொன்னது…

    ஸலாம் சகோ ஆயிஷா.//

    வாங்க சகோ,
    வ அழைக்கும் சலாம்.

    இனிய வசந்தம் என்னோட பிளாக்தான் சகோ.
    எல்லாத்துக்கும் பினாமி இருப்பது போல்
    பிளாக்குக்கும் பினாமி.

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  15. //இளம் தூயவன் சொன்னது…

    தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக...

    நல்ல பகிர்வு.//

    வாங்க சகோ,

    உங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,அவனின் கருணையும் உண்டாவதாக.

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  16. சலாம் சகோதரி

    நல்ல பகிர்வு ஆயிஷா

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. //ஆமினா சொன்னது… //

    வாங்க சகோதரி !

    வ அழைக்கும் சலாம்.

    நன்றி ஆமினா.

    ReplyDelete
  18. //ஆமினா சொன்னது…
    சலாம் சகோதரி//

    இதற்க்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை !!!
    -------------------------------------------------------------------------
    அஸ்ஸலாமு அலைக்கும்.
    பெட்ரோல் விலையைப் பற்றி இவ்வளவு கவலைப் படுகிற நீங்கள் கண்டிப்பாக நாலைந்து காரு அல்லது ஆட்டோக்கள் வைத்திருக்க வேண்டும்,ஏன் என்றால் பட்ஜெட் போட்டுப் பழகிப் போன உங்களுக்கு இந்த அரசாங்கம் தாறுமாறுமாக பெட்ரோல் விலையை ஏற்றி விட்டதால் மிகுந்த கவலையுடன் பதிவு இட்டுரிக்கின்றிகள் என்று நான் நினைக்கிறேன்.
    நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் என்று எனக்கு ஒன்னும் தெரியாது சோ..ஆக மொத்தம் இது சமுதாய சிந்தனை என்ற கருத்து வருவாதால் நீங்கள் பாராட்டக் கூடியவர்.

    நன்றி சகோ.........

    ReplyDelete
  19. அருமையான ஆக்கம்.நன்றி சகோதரி.என் பிளாக் வந்து பாருங்கலீன்

    ReplyDelete
  20. "மக்களோட விடிவு அவர்கள் கையில் தான்."மிக‌ச் ச‌ரியான‌ வார்த்தைக‌ள்!!
    சிந்த‌‌னை செய்ய‌ வைக்கும் ந‌ல்ல‌ ப‌திவு ஆயிஷா!

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நல்ல விழிப்புணர்வு பதிவு

    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  22. அந்நியன் 2 சொன்னது…
    அஸ்ஸலாமு அலைக்கும்.
    வாங்க சகோ,
    வ அழைக்கும் சலாம்.

    ஒரு காருக்கே பெட்ரோல் போட முடியவில்லை.
    இதுல நாலைந்து காரா.இறைவன் நாட்டம் இருந்தால்
    நாலைந்து வாங்கலாம்.ஆட்டோ கிடையாது.

    பட்ஜெட் போட்டு பழக்கம் இல்லை. இந்த பதிவு
    மக்களுக்காக. நான் மட்டும்தான் பெட்ரோல் வாங்குறேனா?

    //ஆக மொத்தம் இது சமுதாய சிந்தனை என்ற கருத்து வருவாதால் நீங்கள் பாராட்டக் கூடியவர்.//

    உண்மையான வரிகள்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  23. //பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

    அருமையான ஆக்கம்.நன்றி சகோதரி.என் பிளாக் வந்து பாருங்கலீன்//

    வாங்க சகோதரி !
    அஸ்ஸலாமு அலைக்கும்.

    உங்கள் பிளாக் பார்த்தேன்.அருமையான
    தொகுப்பு.வீடியோ கேட்டேன்.{அல்ஹம்துலில்லாஹ்}

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  24. //மனோ சாமிநாதன் சொன்னது…

    "மக்களோட விடிவு அவர்கள் கையில் தான்."மிக‌ச் ச‌ரியான‌ வார்த்தைக‌ள்!!
    சிந்த‌‌னை செய்ய‌ வைக்கும் ந‌ல்ல‌ ப‌திவு ஆயிஷா!//

    வாங்க சகோதரி!

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  25. //ஹைதர் அலி சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...//

    வாங்க சகோ,
    வ அழைக்கும் சலாம் வரஹ்..

    மச்சி வந்த பிறகு தான் வலைப்பூவில்
    போட்டோவா? பாராட்டுக்கள்.

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  26. பக்கத்தில கடைக்கு போனா பையனோட சைக்கிளை எடுத்துட்டு போக சொல்றாங்க அம்மணி.

    ReplyDelete
  27. //சிவகுமாரன் சொன்னது…

    பக்கத்தில கடைக்கு போனா பையனோட சைக்கிளை எடுத்துட்டு போக சொல்றாங்க அம்மணி.//

    வாங்க சகோ,

    பக்கத்து கடைக்கு சைக்கிளா? நடந்து போலாமே.

    சகோ,உங்க அம்மணியாவது சைக்கிள போகச் சொல்றாங்க.நான் என்னவர நடந்து போகச் சொல்லி விடுவேன்.

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  28. // உங்க அம்மணியாவது சைக்கிள போகச் சொல்றாங்க. நான் என்னவர நடந்து போகச் சொல்லி விடுவேன்.//

    காலப் போக்கில் இனி இப்படி தான் ஆகும் போல சகோ. நல்ல அருமையான பகிர்வு!!

    ReplyDelete
  29. எம் அப்துல் காதர் சொன்னது…

    // உங்க அம்மணியாவது சைக்கிள போகச் சொல்றாங்க. நான் என்னவர நடந்து போகச் சொல்லி விடுவேன்.//

    காலப் போக்கில் இனி இப்படி தான் ஆகும் போல சகோ. நல்ல அருமையான பகிர்வு!!//

    வாங்க சகோ,

    //காலப் போக்கில் இனி இப்படி தான் ஆகும் போல சகோ.//

    பயப்படாந்தீங்க சகோ.என்ன பண்றது.எல்லாம் அட்ஜஸ் பண்ணனும்.

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  30. மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப் படணும்.. ஹுஸ்னம்மா போட்டிருப்பதுபோல் சூரிய சக்தியையும் பயன்பாடுக்குக்கொண்டு வரணும்

    ReplyDelete
  31. //தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

    மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப் படணும்.. ஹுஸ்னம்மா போட்டிருப்பதுபோல் சூரிய சக்தியையும் பயன்பாடுக்குக்கொண்டு வரணும்//

    வாங்க சகோதரி !

    பயன்னுள்ள தகவல்கள்.

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  32. //கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கிற மாதிரி அரசாங்கம் கொஞ்சம்
    கொஞ்சமாக விலை ஏற்றி கொல்லுது. நீ சீக்கிரம் செத்துடக்கூடாது.ஆனா
    சாகுறவரைக்கும் நீ சித்திரவதை அனுபவிக்கனும் என்று சொல்வது மாதிரி
    இருக்கு என மக்கள் புலம்புகிறார்கள்.//

    It s true...:((

    ReplyDelete
  33. பெட்ரோல் விலையினால் சாமான்யனின் வயிறு பற்றி எரிகிறது...நல்ல பதிவு...

    ReplyDelete
  34. //ஆனந்தி.. சொன்னது…//


    வாங்க சகோதரி !

    நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  35. //NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

    பெட்ரோல் விலையினால் சாமான்யனின் வயிறு பற்றி எரிகிறது...நல்ல பதிவு...//

    வாங்க சகோ,

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  36. பெட்ரோலுக்கு தமிழ்ல பேர் வச்சுப்பாருங்க, ஒருவேளை சினிமாக்கு வரி கொறச்ச மாதிரி தமிழ்நாட்ல மட்டும் கொறஞ்சாலும் கொறையும்

    ReplyDelete
  37. மைதீன் சொன்னது…

    வாங்க சகோ,

    //பெட்ரோலுக்கு தமிழ்ல பேர் வச்சுப்பாருங்க,//

    நீங்களே தமிழ்ல பெயர் வச்சிடுங்கோ.

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.


    //ஒருவேளை சினிமாக்கு வரி கொறச்ச மாதிரி தமிழ்நாட்ல மட்டும் கொறஞ்சாலும் கொறையும்//

    இருக்கலாம்.

    ReplyDelete
  38. உங்கள் கருத்தும் வந்துள்ள பின்னூட்டங்களும் மகிழ்ச்சியை தந்தது. மைதீன் கருத்து சிரிப்பை தந்தது. உண்மையும் கூட.

    ReplyDelete
  39. //ஜோதிஜி சொன்னது…

    உங்கள் கருத்தும் வந்துள்ள பின்னூட்டங்களும் மகிழ்ச்சியை தந்தது. மைதீன் கருத்து சிரிப்பை தந்தது. உண்மையும் கூட.//


    உங்கள் வருகைக்கு ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete