04 January 2011

கலங்க வைக்கும் விலைவாசி !

தமிழ் நாட்டில் இப்ப எங்கும் விலைவாசி உயர்வு பற்றி பேச்சுதான் !
அதைப்பற்றி என் முதல்  பதிவில்  பதிக்கிறேன்.படித்துவிட்டு உங்க          கருத்தையும் சொல்லிட்டு போங்க.

வெங்காயம் கிலோ 80-100  ரூபாய்.  வெங்காயத்தை  நறுக்கினால்  தான் கண்ணீர் வரும்.இப்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது.

வெங்காயம் விலை உயர்ந்ததற்க்கு மழை மீதும்,வெள்ளத்தின் மீதும் 
பழி சுமத்தினார்கள் ஆட்சியாளர்கள்.மழை,வெள்ளம் ஒரு காரணம்தான் 
என்றாலும்கூட,வெங்காயத்தின் விலை உயர்வுக்கு பதுக்கலும் முக்கிய   காரணம் என்பது மறைக்கப்பட்டது.

காய்கறிகளின் விலை!  இன்றைக்கு என்ன குழம்பு வைக்கலாம்,கூட்டு பொரியலுக்கு என்ன காய்கறி வாங்கலாம் என்று தினந்தோறும் தலையைப் பிய்த்து கொள்கிறார்கள் குடும்ப தலைவிகள்.

வெங்காயத்தின் விலையை கேட்க்கும் போது  கண்ணீர்தான் வருகிறது.
ஆனால் தக்காளி,அவரை,வெண்டை....போன்ற காயகளின் விலையை கேட்டால் கண்களில் ரத்தமே வந்து விடும்.

பருப்பு  வகைகள் விலை !  துவரம் பருப்பின் விலை செஞ்சுரி அடித்து விட்டது என்று முன்பு பரப்பரப்பாக பேசப்பட்டது.ஆனால் இன்றைக்கு துவரம் பருப்பு,பாசிபருப்பு உட்பட பல பருப்புகளின் விலைகள் செஞ்சுரி அடித்துவிட்டன.

காய்கறிகளும்,மளிகை பொருட்களும் பர்சுக்கு சவால் விட்டு கொண்டிருக்கின்றன.
காய்கறிகளையோ,அரிசியையோ அப்படியே சாப்பிடமுடியாது.அவற்றை
சமைக்க எரிபொருள் கட்டாயம் வேண்டும்.விறகு பொருக்கி வந்து சமைப்பது
எல்லாம்  புராண காலத்தில் தான். ஏழை, பணக்காரர் என் வித்தியாசம்          
    இல்லாமல் எல்லோரும் கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தும் காலம் இது.  

  எதனுடைய  விலையை உயர்த்தினாலும்,தயவு செய்து கேஸ்                     சிலிண்டர்   விலையை  மட்டும் உயர்த்திவிடாதீர்கள் என்று பிரதமராக         பொறுப்பேற்றபோது மன்மோகன்சிங்கிடம் சொன்னாராம் அவரது மனைவி குர்ஷரன்.ஆனால் மனைவியின் வேண்டுகோளை அவர் காதில் வாங்கி     கொண்டதாக தெரியவில்லை.அவரது ஆட்சி காலத்தில் கேஸ் சிலிண்டர
    விலை பலமுறை  உயர்ந்து விட்டது .
                                 
கடந்த இரண்டு ஆண்டுகளாக விலைவாசி உயர்வால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்த மக்களை, மேலும் மேலும் உயரும் விலைவாசி கலங்கவைக்கிறது.                                                        

                                                விடிவு இவர்கள் கையில்.
                                              
                                                 
                                        

50 comments:

  1. சகோ ஆயிஷா அவர்களே
    தங்களின் புது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

    /நறுக்கி நாள்/ - நறுக்கினால் - என திருத்திக் கொள்ளுங்கள்.

    விலைவாசி உயர்வு.உங்களை விட எங்களைதான் அதிகம் பயம்புறுத்துகிறது..

    ஆண்டொன்றுக்கு ஊர்வந்து விலை விசாரிக்கும் போது,எந்த காலத்துல தம்பி இருக்கீகன்னு பல்ப் தர்ராணுக..
    அதுமட்டுமில்லாம,உங்களை போன்றவர்கள் அவ்வப்போது எங்களை எச்சரிப்பது போல் பதிவிடுவது..ஊர் வரும் எண்ணத்தை மாற்றிவிடுகிறது...

    எனிவே..உக்கமளிக்க ஓட்டுகளும் போட்டுவிட்டேன்..

    தொடருங்கள்,

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  2. //விடிவு இவர்கள் கையில்.//

    அப்போ இருட்டடித்தது வேறு யாராம்?

    பாட்டும் நானே பாவமும் நானேங்கிற மாதிரி. எல்லாவற்றிற்கும் ஆள்பவர்களே பொறுப்பு. இதுக்கு இயற்கையை குறைசொல்வது மகா கேவலம்.

    ReplyDelete
  3. இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி
    Wish You Happy New Year

    http://sakthistudycentre.blogspot.com

    என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

    ReplyDelete
  4. நல்ல பதிவுதான் போட்டிருக்கியே..வாழ்த்துக்கள் வெங்காயம் நறுக்கி கண்ணில் நீர் வந்தால் கண்ணுக்கு நல்லதுதான் விலைவாசி உயர்வுக்கு மக்கள்களும் ஒரு காரணம் அரசாங்கத்தில் பணிபுரியும் அலுவலகர்கள் அரசு நிர்னயித்த தொகையை பெற்று அதற்கேற்ற மாதுரி வேலையை செய்து முடித்து கொடுப்பார்கலேனால் விலைவாசி மட்டும் இல்லை இந்தியாவே டாப் ஒன்னில் வந்து நிற்கும்.

    உதாரனத்திற்க்கு பார்த்திர்கள் என்றால் நீங்கள் ஒரு அஞ்சு லட்சம் ரூபாய் பெருமானே ஒரு நிலத்தை வாங்குகிரிகள் என்று வைத்துக் கொள்ளுவோம் இதற்க்கு நீங்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய தொகை ஐம்பது ஆயிரம் என்றால் உங்கள் மனது எவ்வளவு கஷ்ட்டப்படும் உங்களின் உள் மனது இதற்க்கு மாற்று ஏற்ப்பாடு இருக்காதா என்று ஏங்கும்,இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்தான் நீங்கள் தவறு செய்கிரிகள்..

    எப்படி ? ஒரு ப்ரோக்கர் மூலமாக பத்தாயிரத்தை அரசு அலுவலர்களுக்கு லஞ்சமாக கொடுத்து விட்டு அஞ்சு லட்சம் பெருமானே இடத்தை வெறும் ஐம்பதாயிரத்திற்கு மதிப்பிட்டு வெறும் ஐயாயிரம் ரூபாய்க்கு ஸ்ட்டாம்பு ஒட்டுகிரிகள் இதுதானே உண்மை,இதுமாதுரி இந்தியாவில் என்பது கோடி மக்கள்களும் இந்த தவறை செய்வதுனாலே பல கஷ்ட்டங்களை நாம் சந்திக்க நேரிடகிறது.

    இதுமட்டும் இல்லை இன்னும் எத்தனையோ விசயத்தில் நாம் தவறுகள் செய்வதுனாலேதான் இந்த விலைவாசி இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது,இதைப் பற்றி விளக்குவதென்றால் ஒருநாள் போதாது.

    உங்களின் ஆதங்கம் புரிகின்றது கூடிய சீக்கிரம் விலைவாசி இறங்கனும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் எல்லா மக்களும் எந்த கஷ்ட்டமும் இன்றி வாழ்ந்தால்தான் நாமும் சந்தோசமாக வாழ முடியும்.

    நன்றி சகோ..

    ReplyDelete
  5. வாங்க சகோ ரஜின்
    உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்,ஓட்டுக்கும் நன்றி. பிழையைதிருத்திவிட்டேன். விலைவாசி உயர்வு.எங்களை விட உங்களைதான் அதிகம் பயம்புறுத்தும். காரணம். என்ன விலையா இருந்தாலும்நாங்கள் வாங்கிவிடுவோம்.பணம் அனுப்பபோவது நீங்கள் தானே ...

    இதுகெல்லாம் பயந்து ஊர் வரும் எண்ணத்தை
    மாற்றலாமா சகோ.

    ரஜின் பெயர் வித்தியாசமாகஇருக்கு

    நன்றி சகோ.

    ReplyDelete
  6. வாங்க சகோ அக்பர்

    உங்கள் வருகைக்கு நன்றி.


    //பாட்டும் நானே பாவமும் நானேங்கிற மாதிரி. எல்லாவற்றிற்கும் ஆள்பவர்களே பொறுப்பு. இதுக்கு இயற்கையை குறைசொல்வது மகா கேவலம்//

    பாட்டை எழுதி நல்ல கருத்தை
    சொல்லி விட்டீர்கள். உண்மைதான் சகோ நன்றி.

    ReplyDelete
  7. வாங்க கருண் குமார்

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
    நன்றி சகோ.
    உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    //என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா..//

    உங்க பிளாக் Follow பண்ணினேன்.SAKTHI STUDY CENTRE
    உங்கள் தலைப்பிற்கும்,பதிவிற்கும் சம்பந்தம்மில்லை.

    ReplyDelete
  8. சராசரி மக்களின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்போது..
    ஏழை எளியமக்களின் வாழ்க்கை????????????????

    ReplyDelete
  9. வாங்க சகோ அயுப்

    உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நீண்ட....... கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  10. வாங்க குணசீலன்

    உங்கள் வருகைக்கு நன்றி.

    //சராசரி மக்களின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்போது..
    ஏழை எளியமக்களின் வாழ்க்கை????????????????//

    திண்டாட்டம் தான்.

    ReplyDelete
  11. விலை வாசியை கேட்கும் பொழுது ரொம்ப கஷ்டமாகவுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் எங்களை போன்றவர்கள் விலை வாசியை காரணம் காட்டி , ஊதியம் உயர்வு கூட கேட்க முடியாது.

    ReplyDelete
  12. தினமும் பாதிக்க படுகிறோம் இதனால்

    ReplyDelete
  13. //என்ன விலையா இருந்தாலும்நாங்கள் வாங்கிவிடுவோம்.பணம் அனுப்பபோவது நீங்கள் தானே //

    ஆகா அவனா நீ...அப்டீன்னு கேக்க தோணுது..நாங்க எல்லாத்தையும் விட்டுட்டு இங்க இருக்குறது காரணமே,அங்க நீங்க எல்லா சந்தோஷமா இருக்கனும்கிற ஒரு காரணத்த தவிர வேரென்ன இருக்கமுடியும் சகோ.

    //என்ன விலையா இருந்தாலும்நாங்கள் வாங்கிவிடுவோம்//

    இது எங்களுக்கு மகிழ்வையே தரும்..


    //ரஜின் பெயர் வித்தியாசமாகஇருக்கு//
    ம்ம் அதென்னமோ 26 வருஷ பழசுதான்..நானே என் பேர் தவிர ரெண்டே ரெண்டு பேருக்கு தான் இந்த பேர் வச்சு கேள்விப்பட்டு இருக்கேன்..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  14. //இளம் தூயவன் சொன்னது…

    விலை வாசியை கேட்கும் பொழுது ரொம்ப கஷ்டமாகவுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் எங்களை போன்றவர்கள் விலை வாசியை காரணம் காட்டி , ஊதியம் உயர்வு கூட கேட்க முடியாது.//


    வாங்க இளம்தூயவன்

    ஊதியம் உயர்வு வெளிநாட்டிலும்
    கிடைக்காது.தமிழ் நாட்டிலும் கிடைக்காது.

    நன்றி சகோ.

    ReplyDelete
  15. //சசிகுமார் சொன்னது…

    தினமும் பாதிக்க படுகிறோம் இதனால்//


    வாங்க சசிகுமார்

    கார்மெண்ட்ஸ் ஓணர் அப்படி சொல்லலாமா

    ReplyDelete
  16. சவுதியிலருந்து ஊருக்கு போன அண்ணன் சொல்லுறாரு காசு தண்ணியாக்கரையுதுன்னு........

    ReplyDelete
  17. H.ரஜின் அப்துல் ரஹ்மான் சொன்னது…

    //என்ன விலையா இருந்தாலும்நாங்கள் வாங்கிவிடுவோம்.பணம் அனுப்பபோவது நீங்கள் தானே //

    உண்மையைத்தான் சொன்னேன்

    //ஆகா அவனா நீ...அப்டீன்னு கேக்க தோணுது.//

    எனக்கு அது புரியவில்லை


    //நாங்க எல்லாத்தையும் விட்டுட்டு இங்க இருக்குறது காரணமே,அங்க நீங்க எல்லா சந்தோஷமா இருக்கனும்கிற ஒரு காரணத்த தவிர வேரென்ன இருக்கமுடியும் சகோ.//

    உண்மையான வரிகள்.உண்மையும் அதுதான்
    அந்த வரிகளை படிக்கும் போதே வேதனையாக
    இருக்கு.உங்க வேதனை எனக்கு புரிகிறது சகோ.

    எனக்காகவும்,என் பிள்ளைகளுக்காகவும்
    என் கணவரும் வெளிநாட்டில் தான் இருக்கிறாங்கோ.

    //என்ன விலையா இருந்தாலும்நாங்கள் வாங்கிவிடுவோம்//

    வாங்கிவிடுவோம் திருத்தி கொள்கிறேன்.

    வாங்கித்தான் ஆகணும்.

    நன்றி சகோ.

    ReplyDelete
  18. //ஜீவன்பென்னி சொன்னது…

    சவுதியிலருந்து ஊருக்கு போன அண்ணன் சொல்லுறாரு காசு தண்ணியாக்கரையுதுன்னு........//

    வாங்க சமீர் அஹமது

    தண்ணியாக்கரையுதுன்னு தான், இந்த பதிவு.

    வெளிநாட்டில் இருந்து வந்தால் இன்னும்
    அதிகமாக கரையும்.

    நன்றி சகோ.

    ReplyDelete
  19. மிக அருமையான பகிர்வு ஆயிஷா.. சரியா சொல்லி இருக்கீங்க..

    ReplyDelete
  20. //தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

    மிக அருமையான பகிர்வு ஆயிஷா.. சரியா சொல்லி இருக்கீங்க..//



    வாங்க தேனம்மை லெக்ஷ்மணன்

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
    நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  21. உங்க வலைப்பூ வெற்றிபெற என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. //கலங்க வைக்கும் விலைவாசி //

    தெளிவாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கீங்க ஆனால் இதற்கு தீர்வுதான் கேள்விக்குறியாக உள்ளது

    ReplyDelete
  23. //கடந்த இரண்டு ஆண்டுகளாக விலைவாசி உயர்வால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்த மக்களை, மேலும் மேலும் உயரும் விலைவாசி கலங்கவைக்கிறது.///

    என்ன செய்வது தமிழ்நாட்டில் பிறந்துவிட்டோம் எனபதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை...

    ReplyDelete
  24. வாங்க பிரபாகரன் !

    உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  25. //மாணவன் சொன்னது…

    //கலங்க வைக்கும் விலைவாசி //

    //தெளிவாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கீங்க ஆனால் இதற்கு தீர்வுதான் கேள்விக்குறியாக உள்ளது//


    மாணவன் சொன்னது…

    //கடந்த இரண்டு ஆண்டுகளாக விலைவாசி உயர்வால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்த மக்களை, மேலும் மேலும் உயரும் விலைவாசி கலங்கவைக்கிறது.///

    என்ன செய்வது தமிழ்நாட்டில் பிறந்துவிட்டோம் எனபதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை...//


    கருத்துக்கு நன்றி.தமிழ்நாட்டில் பிறந்துவிட்டோமே.

    ஆட்சியாளர்கள் என்ன செய்தாலும்

    நாம் அனுபவித்துதான் ஆகணும்.


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  26. விலைவாசி உயர்வை பற்றிய இந்த பதிவு அருமை.

    ReplyDelete
  27. வாங்க ஆசியா உமர் !

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  28. எப்பொழுதுதான் மக்களின் துயர் தீருமோ?

    ReplyDelete
  29. விலைவாசி பத்தி நல்ல அலசல்!!!

    @அந்நியன்
    நம்ம குடுக்குற வரிப்பணம்லாம் சுவிஸ்க்கு போறதுக்கு அஞ்சோ பத்தோ லஞ்சம் கொடுக்குறது எவ்வள்வோ மேல் ;)

    ReplyDelete
  30. //தமிழ் உலகம் சொன்னது…

    உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.//

    நன்றி.இணைத்து விட்டேன்.

    ReplyDelete
  31. //Chitra சொன்னது…

    எப்பொழுதுதான் மக்களின் துயர் தீருமோ?//


    வாங்க சித்ரா !

    உங்கள் வருகைக்கும் நன்றி.


    //எப்பொழுதுதான் மக்களின் துயர் தீருமோ?//


    மக்களின் வாழ்கையே கேள்விக்குறியாக

    காலம் கடந்து கொண்டிருக்கிறது.


    நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  32. //ஆமினா சொன்னது…

    விலைவாசி பத்தி நல்ல அலசல்!!!//


    //@அந்நியன்
    நம்ம குடுக்குற வரிப்பணம்லாம் சுவிஸ்க்கு போறதுக்கு அஞ்சோ பத்தோ லஞ்சம் கொடுக்குறது எவ்வள்வோ மேல் ;)//


    வாங்க ஆமினா !


    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  33. விலைவாசியை நினைத்துப் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. மார்க்கெட்டுக்கு போகும்போது விலைய கேட்டா மயக்கம்தான் வருது. விலைவாசி எப்போதான் இறங்கபோகுதோ?.. தெரியலியே..நல்ல அழகாக சொல்லிருக்கீங்க ஆயிஷா அக்கா.

    உங்க புதுப் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. //மின்மினி RS சொன்னது…//

    //விலைவாசியை நினைத்துப் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு./

    உன்னவர் சவுதியில் இருக்கும் போது
    உனக்கென கஷ்டம்.

    //மார்க்கெட்டுக்கு போகும்போது விலைய கேட்டா மயக்கம்தான் வருது.//

    மார்கெட் போகாதே.மயக்கம் போட்டு விழாதே.
    ஏன் என்றால்
    வலைப்பூவில் எல்லோர்ரிடமும் பயணம்
    சொல்லி ஊர் வர ரெடியாக இருக்கிறார் உன்னவர்.

    //விலைவாசி எப்போதான் இறங்கபோகுதோ? தெரியலியே..//

    தமிழ் நாட்டு மக்களே இந்த கேள்விக்கு
    தான் பதிலை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    //நல்ல அழகாக சொல்லிருக்கீங்க ஆயிஷா அக்கா.

    உங்க புதுப் பதிவுக்கு வாழ்த்துக்கள்.//

    மின்மினி உன் வருகைக்கும், கருத்துக்கும்,
    வாழ்த்துக்கும் நன்றி.

    இறைவன் நாடினால் நாம் நேரில்
    சந்திப்போம்.

    ReplyDelete
  35. ஆயிஷா, இன்னிக்குத்தான் உங்கபக்கம் வந்தேன். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. காய்கறி விலை இப்படி ஏறினால் பிறகு என்னத்த தான் சமைப்பது. பார்ப்பவர் எல்லாம் காய்கறி வாங்க இயலவில்லை என வருந்துகின்றனர். நல்ல பதிவு வாழ்த்துக்கள். (பேசாமல் வீட்டில் குட்டியா தொட்டி தோட்டம் போட்டால் தான் காய் சாப்பிடலாம் போல...)

    ReplyDelete
  37. //அமுதா சொன்னது…

    வாங்க அமுதா !


    //காய்கறி விலை இப்படி ஏறினால் பிறகு என்னத்த தான் சமைப்பது.//

    என்ன விலையா இருந்தாலும் வாங்கி
    சமைச்சுத்தான் ஆகணும்.


    //(பேசாமல் வீட்டில் குட்டியா தொட்டி தோட்டம் போட்டால் தான் காய் சாப்பிடலாம் போல...)//

    நல்ல ஐடியா.


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    வாழ்த்துக்கும் நன்றி.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  38. நல்ல பகிர்வு ஆயிஷா..

    ReplyDelete
  39. //Lakshmi சொன்னது…

    ஆயிஷா, இன்னிக்குத்தான் உங்கபக்கம் வந்தேன். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.//

    வாங்க லட்சுமி அம்மா !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    வாழ்த்துக்கும் ரெம்ப நன்றிமா.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  40. //ஆனந்தி.. சொன்னது…

    நல்ல பகிர்வு ஆயிஷா..//

    வாங்க ஆனந்தி !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  41. உண்மைதாங்க ...

    இந்த நிலை நீடித்தால் என்ன பண்ணுவது ....

    சாப்பிட வேறு கிரகத்துக்கு போக வேண்டிய நிலை வரும்

    ReplyDelete
  42. ஹூம், அங்க மட்டுமா, இங்கயும் (அமீரகம்) அதே கதைதான்!! ஊருக்கு வரலாமான்னு யோசிச்சி, ரெண்டு இடத்திலயும் வெலவாசி ஒரே மாதிரித்தானெ இருக்குன்னு திகச்சு போயிட்டன்.

    ReplyDelete
  43. //அரசன் சொன்னது…

    உண்மைதாங்க ...

    இந்த நிலை நீடித்தால் என்ன பண்ணுவது ....

    சாப்பிட வேறு கிரகத்துக்கு போக வேண்டிய நிலை வரும்//


    வாங்க அரசன்,

    எல்லாமே மக்கள் கையில் தான்.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  44. //ஹுஸைனம்மா சொன்னது…

    ஹூம், அங்க மட்டுமா, இங்கயும் (அமீரகம்) அதே கதைதான்!! ஊருக்கு வரலாமான்னு யோசிச்சி, ரெண்டு இடத்திலயும் வெலவாசி ஒரே மாதிரித்தானெ இருக்குன்னு திகச்சு போயிட்டன்.//


    வாங்க ஹுஸைனம்மா!

    அங்கேயும் இதே கதை தானா,

    என்ன பண்ணுறது சகோதரி.


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  45. //இனியவன் சொன்னது…

    எதனுடைய விலையை உயர்த்தினாலும்,தயவு செய்து கேஸ் சிலிண்டர் விலையை மட்டும் உயர்த்திவிடாதீர்கள் என்று பிரதமராக பொறுப்பேற்றபோது மன்மோகன்சிங்கிடம் சொன்னாராம் அவரது மனைவி குர்ஷரன்.//
    மன்மோகன் சிங்கின் காதை உங்களால் பார்க்க முடிகிறதா ? முடியாது அப்படி தலைப்பாகையால் மறைத்திருக்கிறார். பின்ன சொன்னா எப்படிங்க கேட்கும். அவரோட பலம்.//


    வாங்க இனியவன் !

    //மன்மோகன் சிங்கின் காதை உங்களால் பார்க்க முடிகிறதா ? முடியாது அப்படி தலைப்பாகையால் மறைத்திருக்கிறார். பின்ன சொன்னா எப்படிங்க கேட்கும். அவரோட பலம்.//


    மன்மோகன்சிங் காதை என்னால் மட்டுமல்ல

    யாராலும் பார்க்க முடியாது. ஏன் சோனியா


    காந்தியே பார்த்திருக்க மாட்டார்.


    நல்ல காமெடி சகோ.


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.


    இதன் கருத்தை தாங்கள் புத்தாண்டு

    வாழ்த்தில் வெளீட்டு விட்டீர்கள்.

    காப்பி பண்ணி இதில் போட்டுள்ளேன்.

    ReplyDelete
  46. அவங்கல்லாம் மார்க்கெட்டு போய் சாமான் வாங்கிப் பாத்தாகன்னா தெரியும் வலி.

    ReplyDelete
  47. //சிவகுமாரன் சொன்னது…

    அவங்கல்லாம் மார்க்கெட்டு போய் சாமான் வாங்கிப் பாத்தாகன்னா தெரியும் வலி.//


    எவங்கெல்லாம் சகோ,

    கலைஞர் கருணாநிதி.சோனியா காந்தி,
    மன்மோகன் சிங் அவர்களா ?


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  48. ஊருக்கு போற சமயத்துல, இப்படி விலைவாசியெல்லாம் சொல்லி பயமுறுத்துறீங்களே மச்சி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  49. //Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

    ஊருக்கு போற சமயத்துல, இப்படி விலைவாசியெல்லாம் சொல்லி பயமுறுத்துறீங்களே மச்சி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//


    வாங்க,வாங்க,வாங்க கொழுந்தனாரே !

    லேட்டா வந்து இருக்கீங்க.

    மச்சி உங்களை பயமுறுத்தவில்லை.

    முன்னாடியே சொல்லி விட்டால், நிறைய

    ரியால் கொண்டு போகத்தான் தான்.

    இதுக்கு போய் வடிவேலு அழுத மாதிரி

    அழுகிறீர்களே,கண்ண துடைச்சிகாங்க.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  50. தற்போதைய நிலைக்கு அவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.புதிய வசந்தத்திற்கு எப்படி பதிவுகள் அனுப்புவது? விவரம் தரவும். தங்களின் தந்தை பெயர் நெய்னா முகம்மதுவா(குலசை)? எனது யூகம் சரியா?
    அவர் எனது நெருங்கிய நண்பர்.ஒரே ஊர்.இன்று நம்மிடையே இல்லை என்பது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது.எனது யூகம் சரியென்றால் என் மெயிலுக்கு தகவல் தரவும்.தற்போது குலசையின் வரலாற்றினை புத்தகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.உங்களின் பங்களிப்பும் இதற்கு தேவைப்படுகிறது.
    er_sulthan@yahoo.com
    குலசை.சுல்தான்

    ReplyDelete