23 November 2011

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:


* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.


* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.


* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.


* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.


* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.


* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.


* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.


* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.


பழங்கள் சாப்பிடும் முறை:
 
* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.


* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

  
* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.


* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.  அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.


* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.


* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.  அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.


                                                                       
                 
            

04 November 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றமாம் !
ஆசியாவின்  2-வது  பெரிய  நூலகம் என்று  பெயர்  பெற்ற,சென்னை கோட்டூபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் விரைவில் குழந்தைகள்  நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு, தமிழர்களின் நெஞ்சங்களில் அதிர்ச்சி நெருப்பை அள்ளிக்கொட்டியிருக்கிறது.                                                                                 
         
                                                
கலைஞரால் உருவாக்கப்பட்டது என்னும் ஒரே காரணத்திற்காக, அதனை இழுத்து மூடிவிட வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு.  புதிய  சட்டசபை  கட்டிடம்  கட்டியது  கருணாநிதி  என்பதற்காக  அதை  பயன்படுத்தாமல்  விட்டார்.ஏற்கனவே கோட்டையில் இருந்து அகற்றப்பட்ட, புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்திருந்த செம்மொழி ஆய்வு நூலகத்தின் நூல்கள் எல்லாம் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியவில்லை.               
                
            
 5 ஆயிரம் பேர் அமர்ந்து படிக்கக் கூடிய ஒரு நூலகத்தை, அதுவும் ஆட்சிக்கு வந்து 8 மாத காலத்தில், அப்படியே குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவோம் என்று இன்றைய அதிமுக அரசு அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது. இது எந்த வகையிலும் ஏற்புடையது ஆகாது.

  
தமிழக அரசின் இந்த தவறான முடிவிற்கு கல்வியாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள், மாணவர்கள் இளைஞர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

  
தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதா அரசால் சிதைக்கப்படுகிறது.  இது  மிகவும்  கண்டிக்கத்தக்கது .இது  மக்கள்  சொத்து  என்பதை  உணரவேண்டும். 


நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் விவரம்:

முதல் தளம் இதழ்கள், குழந்தைகள் பிரிவு, இரண்டாவது தளம்   தமிழ்ப் புத்தகங்கள்,

 மூன்றாவது தளம்   கணினி அறிவியல், நூலகத் தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், சமூகவியல், மதங்கள், புள்ளியியல், அரசியல் அறிவியல்.


 நான்காவது தளம்   பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், இலக்கியம்.


 ஐந்தாவது தளம்   பொது அறிவியல், கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மருத்துவம்.


 ஆறாவது தளம்   பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டடக் கலை, நுண் கலை, விளையாட்டு.


 ஏழாவது தளம்   வரலாறு, புவியியல், சுற்றுலா, பயண மேலாண்மை.


 எட்டாவது தளம்   நிர்வாகப் பணிகள் தொடர்பான பிரிவுகள்.

 
இவை தவிர திறந்தவெளி அரங்கம், பிரமாண்ட உள் அரங்கம், சிறிய நிகழ்ச்சிகள் நடத்த கருத்தரங்க அறை, குழந்தைகளுக்கான விளையாட்டுகளுடன் கூடிய படிக்கும் பிரிவு என முழுக்க முழுக்க நூலகத்துக்காக எழுப்பப்பட்டது


ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.                                                                              


                                                                           
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக முதல் அமைச்சருக்கு நல்ல ஒரு அறிவுரையை வழங்கினார்கள்:
இதுகுறித்து பேராசிரியர் மார்க்ஸ் கூறுகையில்,

கல்வி சூழல் நிரம்பிய இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக முதல் அமைச்சருக்கு நல்ல ஒரு அறிவுரையை வழங்கினார்கள். கல்வி சார்ந்த விஷயங்களில் உங்களுடைய அரசியல் பகை உணர்ச்சிகளையெல்லாம் காட்டாதீர்கள் என்று குறிப்பிட்டார்கள். ஆனாலும் கூட தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ச்சியாக கல்வி சார்ந்த விஷயங்களில் தொடுக்கக்கூடிய ஒரு தாக்குதலை பார்க்கும்போது தான், இவ்வளவு பகை, இந்த பகை என்பதை சாதாரணமாக முந்தையை ஆட்சி செய்த அத்தனையையும் மாற்றி அமைக்க வேண்டும் என்கிற பகை என்கிறது, கிட்டதட்ட ஒரு இனப் பகை போன்று தோன்றுகிறது என்றார்.