23 November 2011

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:


* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.


* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.


* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.


* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.


* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.


* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.


* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.


* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.


பழங்கள் சாப்பிடும் முறை:
 
* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.


* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

  
* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.


* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.  அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.


* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.


* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.  அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.


                                                                       
                 
            

41 comments:

  1. "தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்"

    "பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்"

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நிறைய பயனுள்ள தகவல்கள். ஜசாக்கல்லாஹ்.

    வஸ்ஸலாம்

    ReplyDelete
  3. அருமையான அறிவுரைகள், பகிர்வுக்கு நன்றி....!!

    ReplyDelete
  4. தமிழ் பத்து இணைப்பு கொடுத்துட்டேன்...

    ReplyDelete
  5. //பெயரில்லா சொன்னது…

    "தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்"//


    உணவை குறைத்து சாப்பிடுவர்களுக்கு இந்த ஜூஸ் டிப்ஸ்...


    //"பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்"//


    மற்றவர்கள் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அதற்காக இந்த டிப்ஸ்...

    வருகைக்கு நன்றி.தங்கள் பெயரை வெளியிட்டு இருக்கலாமே

    ReplyDelete
  6. //Aashiq Ahamed சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்,//

    வ அலைக்கும் சலாம்

    //நிறைய பயனுள்ள தகவல்கள். ஜசாக்கல்லாஹ்.//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

    வஸ்ஸலாம் /மாஸலாம்

    ReplyDelete
  7. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    அருமையான அறிவுரைகள், பகிர்வுக்கு நன்றி....!!//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  8. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    தமிழ் பத்து இணைப்பு கொடுத்துட்டேன்...//

    நானும் இணைத்து பார்த்தேன் இணையவில்லை.
    தாங்கள் இணைத்தமைக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  9. Wow!.Super good health Tips.Thanks for sharing it.

    ReplyDelete
  10. //Christy Gerald சொன்னது…

    Wow!.Super good health Tips.Thanks for sharing it.//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  11. நல்ல தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. சிம்பிளான டிப்ஸ் சூப்பர் :-)

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு.அவசியமான பகிர்வும் கூட.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.. பயனுள்ள பகிர்வு.. நல்ல பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. அருமையான தகவல்கள் சொல்லி இருக்கீங்க. ஆனா இப்போ பழங்களையும் ரசாயன முறையில் பழுக்க வைக்கிறதா சொல்லி பீதியை கிளப்புராங்களே?

    ReplyDelete
  16. எங்களை போன்றோருக்கு மிகவும் பயனுள்ள தகவல் ....

    ReplyDelete
  17. பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  18. எல்லோரும் டயட் டயட் என்கிறார்கள். நீங்கள்தான் விவரமாக எல்லா தகவல்களையும் தந்துள்ளீர்கள்.நன்றி

    ReplyDelete
  19. //asiya omar சொன்னது…

    நல்ல தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி.//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  20. //asiya omar சொன்னது…

    நல்ல தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி.//


    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  21. //ஜெய்லானி சொன்னது…

    சிம்பிளான டிப்ஸ் சூப்பர் :-)//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  22. //ஸாதிகா சொன்னது…

    நல்ல பகிர்வு.அவசியமான பகிர்வும் கூட.//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  23. //சிநேகிதி சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.. பயனுள்ள பகிர்வு.. நல்ல பகிர்வுக்கு நன்றி//

    வ அலைக்கும் சலாம்

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  24. //பாலா சொன்னது…

    அருமையான தகவல்கள் சொல்லி இருக்கீங்க. ஆனா இப்போ பழங்களையும் ரசாயன முறையில் பழுக்க வைக்கிறதா சொல்லி பீதியை கிளப்புராங்களே?//

    பீதியை கிளப்புவது உண்மைதான். தரமான பழங்களும் விற்பனைக்கு வருகின்றன.

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  25. //FARHAN சொன்னது…

    எங்களை போன்றோருக்கு மிகவும் பயனுள்ள தகவல் ....//


    எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  26. //Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

    நல்ல பகிர்வு.//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கொழுந்தன்.

    ReplyDelete
  27. //Jaleela Kamal சொன்னது…

    பயனுள்ள பகிர்வு.//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  28. //வியபதி சொன்னது…

    எல்லோரும் டயட் டயட் என்கிறார்கள். நீங்கள்தான் விவரமாக எல்லா தகவல்களையும் தந்துள்ளீர்கள்.நன்றி//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  29. //"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

    அருமையான டிப்ஸ்
    அன்புடன் :
    ராஜா//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.


    //அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்//

    இது நேர்மையான செயலா ?

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நிறைய பயனுள்ள தகவல்கள். ஜசாக்கல்லாஹ்.

    டிப்ஸ் சூப்பர்.

    ReplyDelete
  31. வணக்கம். நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  32. //அந்நியன் 2 சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்,//

    வ அலைக்கும் சலாம்

    //நிறைய பயனுள்ள தகவல்கள். ஜசாக்கல்லாஹ்.

    டிப்ஸ் சூப்பர்.//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  33. //திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

    வணக்கம். நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.//


    தங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும், நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

    தொடர்ந்து வருகை தாருங்கள்

    ReplyDelete
  34. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பயனுள்ள தகவல்கள் நிறைய கொட்டிகிடக்கிறதே. பாராட்டுகள் சகோ..

    ReplyDelete
  35. //மங்கையர் உலகம் சொன்னது…

    புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

    மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
    நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
    உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
    உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

    http://ithu-mangayarulagam.blogspot.com//


    நன்றி மங்கையர் உலகம்

    ReplyDelete
  36. //அன்புடன் மலிக்கா சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்,//

    வ அலைக்கும் சலாம்

    //பயனுள்ள தகவல்கள் நிறைய கொட்டிகிடக்கிறதே. பாராட்டுகள் சகோ.//

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  37. veedu

    "அன்பு சகோதரி அவர்களே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!//

    மிக்க நன்றி சகோதரரே

    ReplyDelete
  38. ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள். http://mahizhampoosaram.blogspot.in/2012/02/blog-post.html

    ReplyDelete