04 November 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றமாம் !




ஆசியாவின்  2-வது  பெரிய  நூலகம் என்று  பெயர்  பெற்ற,சென்னை கோட்டூபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் விரைவில் குழந்தைகள்  நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு, தமிழர்களின் நெஞ்சங்களில் அதிர்ச்சி நெருப்பை அள்ளிக்கொட்டியிருக்கிறது.                                                                                 
         
                                                
கலைஞரால் உருவாக்கப்பட்டது என்னும் ஒரே காரணத்திற்காக, அதனை இழுத்து மூடிவிட வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு.  புதிய  சட்டசபை  கட்டிடம்  கட்டியது  கருணாநிதி  என்பதற்காக  அதை  பயன்படுத்தாமல்  விட்டார்.ஏற்கனவே கோட்டையில் இருந்து அகற்றப்பட்ட, புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்திருந்த செம்மொழி ஆய்வு நூலகத்தின் நூல்கள் எல்லாம் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியவில்லை.               
                
            
 5 ஆயிரம் பேர் அமர்ந்து படிக்கக் கூடிய ஒரு நூலகத்தை, அதுவும் ஆட்சிக்கு வந்து 8 மாத காலத்தில், அப்படியே குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவோம் என்று இன்றைய அதிமுக அரசு அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது. இது எந்த வகையிலும் ஏற்புடையது ஆகாது.

  
தமிழக அரசின் இந்த தவறான முடிவிற்கு கல்வியாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள், மாணவர்கள் இளைஞர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

  
தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதா அரசால் சிதைக்கப்படுகிறது.  இது  மிகவும்  கண்டிக்கத்தக்கது .இது  மக்கள்  சொத்து  என்பதை  உணரவேண்டும். 


நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் விவரம்:

முதல் தளம் இதழ்கள், குழந்தைகள் பிரிவு, இரண்டாவது தளம்   தமிழ்ப் புத்தகங்கள்,

 மூன்றாவது தளம்   கணினி அறிவியல், நூலகத் தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், சமூகவியல், மதங்கள், புள்ளியியல், அரசியல் அறிவியல்.


 நான்காவது தளம்   பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், இலக்கியம்.


 ஐந்தாவது தளம்   பொது அறிவியல், கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மருத்துவம்.


 ஆறாவது தளம்   பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டடக் கலை, நுண் கலை, விளையாட்டு.


 ஏழாவது தளம்   வரலாறு, புவியியல், சுற்றுலா, பயண மேலாண்மை.


 எட்டாவது தளம்   நிர்வாகப் பணிகள் தொடர்பான பிரிவுகள்.

 
இவை தவிர திறந்தவெளி அரங்கம், பிரமாண்ட உள் அரங்கம், சிறிய நிகழ்ச்சிகள் நடத்த கருத்தரங்க அறை, குழந்தைகளுக்கான விளையாட்டுகளுடன் கூடிய படிக்கும் பிரிவு என முழுக்க முழுக்க நூலகத்துக்காக எழுப்பப்பட்டது


ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.



                                                                              














                                                                           
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக முதல் அமைச்சருக்கு நல்ல ஒரு அறிவுரையை வழங்கினார்கள்:
இதுகுறித்து பேராசிரியர் மார்க்ஸ் கூறுகையில்,

கல்வி சூழல் நிரம்பிய இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக முதல் அமைச்சருக்கு நல்ல ஒரு அறிவுரையை வழங்கினார்கள். கல்வி சார்ந்த விஷயங்களில் உங்களுடைய அரசியல் பகை உணர்ச்சிகளையெல்லாம் காட்டாதீர்கள் என்று குறிப்பிட்டார்கள். ஆனாலும் கூட தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ச்சியாக கல்வி சார்ந்த விஷயங்களில் தொடுக்கக்கூடிய ஒரு தாக்குதலை பார்க்கும்போது தான், இவ்வளவு பகை, இந்த பகை என்பதை சாதாரணமாக முந்தையை ஆட்சி செய்த அத்தனையையும் மாற்றி அமைக்க வேண்டும் என்கிற பகை என்கிறது, கிட்டதட்ட ஒரு இனப் பகை போன்று தோன்றுகிறது என்றார்.
 
                       

16 comments:

  1. அரசியல் காரணமாக எடுக்கப்படும் ஒருசில அவசர முடிவுகள், ஜீரணிக்க முடியாமல் தான் அமைந்து விடுகின்றன. என்ன செய்வது?

    ReplyDelete
  2. இது அவசர குடுக்கை முடிவு, என்னத்தை சொல்ல இனி நான்கரை வருஷம் நாம் அனுபவிக்க வேண்டியதுதான் கஷ்டம்...!!!

    ReplyDelete
  3. மிகவும் மன வேதனையளிக்கும் விஷயம் .
    நாங்க படிக்கும்போது எவ்ளோ கஷ்டபட்டிருப்போம் பிரிட்டிஷ் /அமெரிக்கன் கவுன்சில் நூலகங்களை தேடி ஓடினோம் .இப்ப உள்ள பிள்ளைகளுக்கு வசதியாக இந்த நூலகம் இருக்கு .கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகதிளிருந்து நிறைய புத்தகங்கள் இங்கே தருவிக்கபட்டிருக்கு என்று கேள்விபட்டேன் .கல்வி படிப்பு விஷயத்திலுமா காழ்ப்புணர்வு

    ReplyDelete
  4. அழகான நூலகமாக இருக்கே. ஆனால் நிட்சயம் மக்கள் எதிர்ப்பு இருக்கத்தானே செய்யும்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்க சகோதரி,

    சமூக அக்கறையுடனான பதிவு..தொடர பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்...

    தற்போது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. மருத்துவமனைக்கு வேறு இடமே இல்லையா என்றும் நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

    பார்க்க...http://tamil.oneindia.in/news/2011/11/04/madras-hc-stays-shifing-anna-centenary-library-aid0174.html

    ஜசாக்கல்லாஹ்..

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  6. மனதை கொள்ளை கொள்ளும் இவ்வளவு அருமையான பிரத்தியேக வடிவமைப்புள்ள நூலகத்தை யார் மீதோ உள்ள காழ்ப்புணர்ச்சியில் எங்கோ தூக்கி எறிவது வயிற்றெரிச்சல்தான், தவிர வேறென்ன?

    ReplyDelete
  7. //வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

    அரசியல் காரணமாக எடுக்கப்படும் ஒருசில அவசர முடிவுகள், ஜீரணிக்க முடியாமல் தான் அமைந்து விடுகின்றன. என்ன செய்வது?//


    தங்களின் வருகைக்கும்,முதல் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  8. //angelin சொன்னது…

    மிகவும் மன வேதனையளிக்கும் விஷயம் .
    நாங்க படிக்கும்போது எவ்ளோ கஷ்டபட்டிருப்போம் பிரிட்டிஷ் /அமெரிக்கன் கவுன்சில் நூலகங்களை தேடி ஓடினோம் .இப்ப உள்ள பிள்ளைகளுக்கு வசதியாக இந்த நூலகம் இருக்கு .கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகதிளிருந்து நிறைய புத்தகங்கள் இங்கே தருவிக்கபட்டிருக்கு என்று கேள்விபட்டேன் .கல்வி படிப்பு விஷயத்திலுமா காழ்ப்புணர்வு//

    தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  9. //athira சொன்னது…

    அழகான நூலகமாக இருக்கே. ஆனால் நிட்சயம் மக்கள் எதிர்ப்பு இருக்கத்தானே செய்யும்.//

    மக்கள் எதிர்கவில்லை என்றால் ஆட்டம் அதிகமாகிவிடும்.

    தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  10. //Aashiq Ahamed சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,//

    வ அலைக்கும் சலாம் பிரதர்.

    தகவலுக்கு நன்றி சகோ.


    தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், பிரார்த்தனைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  11. //ரா.செழியன். சொன்னது…

    மனதை கொள்ளை கொள்ளும் இவ்வளவு அருமையான பிரத்தியேக வடிவமைப்புள்ள நூலகத்தை யார் மீதோ உள்ள காழ்ப்புணர்ச்சியில் எங்கோ தூக்கி எறிவது வயிற்றெரிச்சல்தான், தவிர வேறென்ன?//

    தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  12. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    இது அவசர குடுக்கை முடிவு, என்னத்தை சொல்ல இனி நான்கரை வருஷம் நாம் அனுபவிக்க வேண்டியதுதான் கஷ்டம்...!!!//

    தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  13. Dearest Ayisha
    EID MUBARAK to You and your family with all best wishes.

    ReplyDelete
  14. ஸலாம் சகோ.ஆயிஷா அபுல்,

    மிகவும் பயனுள்ள ஆக்கப்பூர்வமான பதிவு சகோ.ஆயிஷா. மிக்க நன்றி.

    ///ஆசியாவின் 2-வது பெரிய நூலகம் என்று பெயர்பெற்றது...கலைஞரால் உருவாக்கப்பட்டது என்னும் ஒரே காரணத்திற்காக, அதனை இழுத்து மூடிவிட வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு./// என்றால்... இதற்கு எனது வன்மையான கண்டனங்களை அரசுக்கு எதிராக பதிவு செய்கிறேன்.

    மருத்துவமனையும் அவசியமே.
    நூலகமும் அவசியமே. மக்கள் எளிதில் சென்றடையும் வண்ணம் ஊரின் மத்தியில் இவை இரண்டும் இருக்க வேண்டியது அவசியம்.

    நோய் நிவாரணம் தேவைப்படும் மக்கள், மருத்துவமனையையாவது எப்படியேனும் தேடிக்கண்டு பிடித்து சென்று சேர்ந்து விடுவார்கள்.

    ஆனால், கல்வி கற்பிக்கும் நூலகம் பலர் நன்கு அறிந்த இடத்தில் மக்கள் மத்தியில் இருப்பது மிகவும் அவசியம். அதன் இடம் புதிதாக மாற்றப்பட்டால் கூட, அதை தேடி அலைவதை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்கப்போய் விடுவார்கள் மக்கள்.

    நான் வாழ்ந்த அதிராம்பட்டினத்தில் முன்பு பலவருடங்களாக ஊருக்கு மத்தியில் இருந்த அரசு நூலகம், திடீரென எங்கோ ஊருக்கு வெளியே புறநகரில் மாற்றப்பட்டபோது... பின்னர் ஆளே வராமல் காற்றாடுகிறது. நான் கண்ணால் கண்ட உண்மை இது.

    எனவே, மக்கள் பரிச்சயம் பெற்ற பயனடையும் "நூலகத்தினை மாற்றக்கூடாது" என்ற தங்களின் விருப்பத்தில் என்னையும் நான் இணைத்துக்கொள்கிறேன்.

    மருத்துவமனையை திறப்பதாக இருந்தால் அதை வேறு புதிய இடத்தில் திறங்கள். மேற்படி நூலகம் அப்படியே அதே இடத்தில் இருந்து விட்டு போகட்டும்..!

    ReplyDelete
  15. //angelin சொன்னது…

    Dearest Ayisha
    EID MUBARAK to You and your family with all best wishes.//

    thank u angelin.

    ReplyDelete
  16. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…

    ஸலாம் சகோ.ஆயிஷா அபுல்,//
    வ அலைக்கும் சலாம் சகோ.


    சகோ , இரண்டுமே அவசியமே. குழந்தைகள் நல மருத்துவமனைகள் அமைக்க இந்த அம்மையாருக்கு சென்னையில் இடமே கிடைக்கவில்லை போல ...

    எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனை பராமரிப்பு இல்லாமல் இருக்கு.
    உண்மையில் மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைப்பவர் அதை புதுபிக்கலாமே.


    அவர்களுடைய ஒரே நோக்கம். கலைஞர் ஆட்சியில் செய்ததை எல்லாம் ஒழிக்கணும்.
    ஆனால் பாலத்தை மட்டும் பயன்படுத்துவார்களாம்.

    இது எப்படி இருக்கு.


    தங்கள் வருகைக்கும்,தெளிவான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete